என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலைகளை சீரமைக்க கோரி பொதுமக்கள் திடீர் மறியல்
    X

    சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். 

    சாலைகளை சீரமைக்க கோரி பொதுமக்கள் திடீர் மறியல்

    • சாலைகளை சீரமைக்க கோரி பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    • மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் சாலைகள் படு மோசமாக உள்ளது. மழை காலங்களில் சேறும், சகதியுமாகவும் மற்ற நேரங்களில் குண்டும், குழியுமாகவும் காணப்படு கிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

    தரமற்ற சாலைகளால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சியில் 67-வது வார்டான எச்.எம்.எஸ்.காலனி பகுதியில் சாலைகள் போக்கு வரத்திற்கு லாயக்கற்ற முறையில் உள்ளது. இதனால் அந்தப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

    இந்த நிலையில் நேற்று பெய்த மழை காரணமாக எச்.எம்.எஸ். காலனி பகுதியில் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. தற்போது முடக்கு சாலையில் இருந்து எச்.எம்.எஸ். காலனி வழியாக தேனி மெயின் ரோட்டிற்கு வாகனங்கள் விடப்படுவதால் அதிகள வில் தூசி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதை கண்டித்தும், எச்.எம்.எஸ். காலனி பகுதியில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும், அந்தப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    Next Story
    ×