அ.தி.மு.க. இளைஞரணி செயலாளர் ரமேஷின் தந்தை மரணம்

அ.தி.மு.க. இளைஞரணி செயலாளர் ரமேஷின் தந்தை மரணமடைந்தார். இறுதிச் சடங்கு இன்று மாலை 6 மணியளவில் திருப்பரங்குன்றத்தில் நடக்கிறது.
அ.தி.மு.க. இளைஞரணி செயலாளர் ரமேஷின் தந்தை மரணம்
Published on

மதுரை

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் பகுதி செயலாளருமான வக்கீல் ரமேஷ், எம்.பாலசுப்பிர மணி, எம்.ராஜா எம்.சுரேஷ் காந்த் ஆகியோரின் தந்தை திருப்பரங்குன்றம் கீழத்தெரு நடுச்சந்தை சேர்ந்த குழாய் கடை எம்.முத்துத்தேவர் நேற்று இரவு மரணம் அடைந்தார்.

அவர் இறந்த செய்தியை அறிந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும்.முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். மேலும் கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தொலைபேசியில் இரங்கல் தெரிவித்தார்.

இந்த நிலையில் அமைப்பு செயலாளரும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. முத்துத்தேவர் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தி னருக்கு ஆறுதல் கூறினார்.

முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., ஆகியோரும் மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தினர். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்தியன், மற்றும் கிழக்கு மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர் கிளை நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும், தொண்டர்க ளும், உறவினர்களும் நண்பர்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

முத்துத்தேவரின் இறுதிச் சடங்கு இன்று மாலை 6 மணியளவில் திருப்பரங்குன்றத்தில் நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com