என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர்களை கத்தியால் தாக்கி மோட்டார் சைக்கிள் பறிப்பு
- 3 வாலிபர்களை கத்தியால் தாக்கி மோட்டார் சைக்கிள் பறிக்கப்பட்டது.
- மர்ம நபர்களை வாடிப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி பசும்பொன் நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் ரமேஷ் (வயது 36), கூலிதொழிலாளி. இவர் நேற்று இரவு அருகில் உள்ள மதுக்கடைக்கு சென்று மது வாங்கியதாக தெரிகிறது.
பின்னர் மோட்டார் சைக்கிளில் அங்குள்ள காட்டு பகுதிக்கு சென்றார். அங்கு மோட்டார் சைக்கி ளை நிறுத்தி விட்டு மது குடித்துக் கொண்டி ருந்தார். அப்போது 4 மர்ம நபர்கள் அங்கு வந்தனர்.
அவர்கள் ரமேஷிடம் செல்போன் வேண்டும் என கேட்டுள்ள னர். அதற்கு ரமேஷ் எதற்காக செல்போன் கேட்கிறீர்கள்? என கேட்டுள்ளார்.
அப்போது அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி கை கலப்பாக மாறியது. திடீரென மர்மநபர்களில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரமேஷின் தலையில் வெட்டி வெட்டினார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
வலி தாங்க முடியாத ரமேஷ் கூச்சலிட்டார். உடனே அந்த மர்மநபர்கள் ரமேஷின் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றனர்.
இதனிடையே ரமேஷின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் வந்து கொண்டி ருந்த குட்லாடம்பட்டியைச் சேர்ந்த தவம் (30), விருமாண்டி(35) ஆகியோர் அங்கு வந்தனர். உடனே அந்த மர்ம நபர்கள் அவர்களையும் கத்தியால் தாக்கி உள்ளனர். இதில் இருவருக்கும் ரத்தக்கா யங்கள் ஏற்பட்டது. ரமேஷ், தவம், விருமாண்டி ஆகிய 3 ேபரும் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து ரமேஷ் உள்ளிட்ட 3 பேரும் வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ் பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து 3 வாலிபர்ளை கத்தியால் தாக்கி மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






