என் மலர்
நீங்கள் தேடியது "priestly title"
- பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் பெரிய பூசாரி பட்டம் சூட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இப்பிரச்சனை தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலரையோ அல்லது நீதிமன்றத்தை நாடலாம் என கலெக்டர் தெரிவித்தார்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவிடம் பாப்பாபட்டி கிராம பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா பாப்பாபட்டியில் அமைந்துள்ளது ஒச்சாண்டம்மன் கோவில். இக்கோவிலின் பெரிய பூசாரியாக இருந்த ராமகிருஷ்ணன் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு இறந்துவிட்டார். அவர் இறந்த பின்பு பெரிய பூசாரி இடம் காலியாக இருந்தது. இந்த நிலையில் பெரிய பூசாரி பட்டம் 5-வது வகையறவை சேர்ந்த சிவத்த கருப்பன் வகையறாவில் ராஜா, ஜெயபிரகாஷ், அசோக், சங்கர், செல்ல பாண்டி ஆகிய 5 பேர் பெரிய பூசாரி பட்டத்திற்கு போட்டியிடுகின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த செல்ல் பாண்டி என்பவரும் பெரிய பூசாரி பட்டத்திற்கு போட்டி யிடுகிறார்.இதனால் இருதரப்பி னருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இது குறித்து கோட்டாட்சியர், முன்னி லையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் செல்லப்பாண்டி மற்றும் சிவத்த கருப்பன் வகையறாவை சேர்ந்தவர் களுடன் கோட்டாட்சியர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சிவத்த கருப்பன் வகையறாவை சேர்ந்தவர்கள் ஆஜராகததால் செல்லப்பாண்டியை பூசாரியாக நியமனம் செய்யப்படுவதாக கோட்டாட்சியர் அறிவித்தார்.
இதை எதிர்த்து மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவிடம் 20-க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர். மனுவை பரிசீலித்த கலெக்டர் சங்கீதா கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். இப்பிரச்சனை தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலரையோ அல்லது நீதிமன்றத்தை நாடலாம் என கலெக்டர் தெரிவித்தார்.






