search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Introductory"

    • மதுரையில் புதிய உரங்கள் குறித்த அறிமுக கூட்டம் நடந்தது.
    • விவசாய சங்க பிரதிநிதிகள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் மதுரை மாவட்ட தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் புதிய உரங்கள் தயாரிப்பு குறித்த அறிமுக கூட்டம் நடந்தது.

    மதுரை மண்டல கூட்டு றவு சங்கங்களின் இணைப் பதிவாளர் குருமூர்த்தி தலைமை வகித்தார். மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான ஜீவா சிறப்புரையாற்றினார்.

    இக்கூட்டத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள 100-க்கும் அதிகமான விவசாயி களுக்கு டான்பெட் உரம் தயாரிப்பு குறித்தும், இதன் பயன்பாடு, உரமிடும் முறை குறித்தும், உயிர் உரங்கள், உயிர்பூச்சிக் கொல்லிகள், நுண்ணூட்ட உரங்கள், நீரில் கரையும் உரங்கள், மண்புழு உரம் மற்றும் நெல்விதைகள் குறித்தும் துணைப் பதிவாள ரும், மண்டல மேலாளருமான பார்த்திபன் விளக்கினார்.

    இதில் மதுரை சரக துணைப்பதிவாளர் ராஜேந்திரன், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப் பதிவாளர் அமிர்தா, துணைப்பதிவாளர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியின் போது டான்பெட்டின் புதிய தயாரிப்புகள் விவசாய சங்க பிரதிநிதிகள் முன்னி லையில் அறிமுகப்படுத்தப் பட்டது.

    • பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் அறிமுக விழா நடந்தது.
    • பி.எஸ்.ஆர். கல்விக்குழும தாளாளர் சோலைசாமி தலைமை தாங்கினார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கு, மாணவர்கள் அறிமுக விழா கல்லூரி கலையரங்கில் நடந்தது. பி.எஸ்.ஆர். கல்விக்குழும தாளாளர் சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார்.

    முதல்வர் செந்தில்குமார் மற்றும் டீன் மாரிச்சாமி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் டாக்டர்.தாமு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    அவர் பொறியியல் கல்லூரியின் முக்கியத்துவம், அதன் பயன்பாடுகள் குறித்து பேசினார். கல்வி கற்பதில், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு மற்றும் அவர்களின் நற்செயல்களை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

    தற்போதைய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், வாழ்க்கையில் சமூக வலைதளங்களின் தாக்கம் மற்றும் அதனால் நேரம், காலம் எவ்வாறு வீணடிக்கப்பபடுகிறது என்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறு சிறு கதைகள் மற்றும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கமளித்தார்.

    மாணவர்கள் தங்கள் உடலையும் ஆரோக்கியமாக பேணிக்காப்பதன் மூலமாக, மனதையும், சிந்தனையையும் நல்வழியில் செலுத்தி, சமுதாயத்தில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் எனக்கூறினார். உலகை வல்லரசாக்கும் திறமை, இன்றைய இளைஞர்களாக மாணவர்கள் கையில் தான் உள்ளது என கூறினார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், முதலாமாண்டு துறைத்தலைவர் பேராசிரியர் ஸ்ரீராம் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர். இயற்பியல் துறை பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    ×