search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kerosene"

    • கணேசன் கருணாநிதி சிலை முன்பாக தான் வைத்திருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
    • தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகியின் இந்த போராட்டம் மதுரையில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    மதுரை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசின் பல்வேறு விவகாரங்களில் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக பேசிவருகிறார். இதனால் தமிழக கவர்னரை மாற்ற வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மதுரை மானகிரி பகுதியை சேர்ந்த ஆவின் தி.மு.க. தொழிற்சங்க தலைவரான கணேசன், தமிழக கவர்னரை ஜூன் 27-ந் தேதிக்குள் மத்திய அரசு மாற்றாவிட்டால், 28-ந் தேதி மதுரை சிம்மக்கலில் உள்ள கருணாநிதி சிலை முன்பாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து சாவேன் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு போஸ்டர் ஒட்டியிருந்தார்.

    அவரின் இந்த நடவடிக்கை மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அறிவித்தபடி இன்று வரலாம் என்று கருதப்பட்டது. இதனால் அவர் கூறிய இடத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் அங்கு திடீரென காரில் வந்த கணேசன், கருணாநிதி சிலை முன்பாக தான் வைத்திருந்த மண் எண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவரது உடலில் தண்ணீரை ஊற்றி கைது செய்து அழைத்துச் சென்றனர். தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகியின் இந்த போராட்டம் மதுரையில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • அப்பகுதியில் பதிவாகி உள்ள சி.சி. டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மத்திய பாகம் காவல் சரகத்திற்கு உட்பட்ட எம்பரையர் தெரு பகுதியில் ஆரூடா (47) என்பவர் வீட்டின் முன்பும், தென்பாகம் காவல் சரகத் திற்கு உட்பட்ட ஜார்ஜ் ரோடு காந்திநகர் ஜெனிரோ (46) வீட்டின் முன்பும் மண்ணெண்ணை பாட்டிலில் தீப்பற்ற வைத்து வீசப்பட்டு உள்ளது.

    தெருக்களில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர். நள்ளிரவு 12.40 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    அந்த நேரத்தில் அப்பகுதியில் பதிவாகி உள்ள சி.சி. டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஆரூடா மகன் மரியா அந்தோணி டைட்டஸ், ஜெனிரோ மகன் கேத்ரினான் ஆகிய இருவர் மீதும் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை அச்சுறுத்தும் வகையில் முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் மண்ணெண்ணை பாட்டில்களில் தீ வைத்து வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குளிர்பானம் என்று நினைத்து மண்எண்ணெய் குடித்த மூதாட்டி இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மேலவளவு, புது சுக்காம்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி லட்சுமி (76). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருமகன் வீட்டுக்கு சென்றார். அப்போது அவருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. அங்கு சமையல் அறையில் இருந்த ஒரு பாட்டிலில் நீல நிற திரவம் இருந்தது. அதனை குளிர்பானம் என்று நினைத்து அவர் குடித்து விட்டார். அதன் பிறகு தான், அது மண் எண்ணெய் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மயங்கி விழுந்த லட்சுமிைய மீட்டு மேலூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக மேலவளவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கமுதி யூனியன் கூட்டத்தில் கோரிக்கைகளை வேற்றக்கோரி கவுன்சிலர் உடலில் மண்எண்ணை ஊற்றினார்.
    • கூட்டத்தில் மொத்தம்13 தீர்மானங்கள் நிறைவேற்றிப்பட்டன.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி யூனியன் கவுன்சில் கூட்டம் சேர்மன் தமிழ்செல்விபோஸ் தலைமையில் நடந்தது. ஆணையாளர் மணிமேகலை, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால், உதவி சேர்மன்.சித்ரா தேவி அய்யனார் முன்னிலை வகித்தனர். மேலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். மொத்தம்13 தீர்மானங்கள் நிறைவேற்றிப்பட்டன.

    அ.தி.மு.க. (ஒ.பி.எஸ்.அணி) பேரையூர் கவுன்சிலர் அன்பரசு, கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரி மறைத்து வைத்திருந்த மண்எண்ணை பாட்டிலை திறந்து தலையில் ஊற்றி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். அப்போது மண்எண்ணை மற்ற கவுன்சிலர்கள் மீதும் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.

    சேர்மன் தமிழ்செல்வி போஸ் 11-வது வார்டு பேரையூர் கவுன்சிலில் நடந்த திட்டப்பணிகளை பட்டியலிட்டார். மேலும் பேரையூரில் ரூ.50 லட்சம் செலவில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடப்பணிகள் நடந்து வருவதாகவும் கூறினார்.

    அப்ேபாது கவுன்சிலர் அன்பரசு, பிற துறை அதிகாரிகள் யாரும் யூனியன் கூட்டத்திற்கு வருவதில்லை. மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளதை மின்வாரிய அதிகாரி நடவடிக்கை எடுப்பதில்லை என்றார். உடனே மின்வாரிய உதவிப்பொறியாளர் எழுந்து, பழுதடைந்துள்ள மின்கம்பங்களை படிப்படியாக மாற்றி வருகிறோம் என்றார்.

    வத்திராயிருப்பு பகுதியில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    வத்திராயிருப்பு

    வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும் ஆர்்ப்பாட்டம் நடைபெற்றது. 

    அப்போது கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் கோவிந்தன், ஒன்றிய செயலாளர் பெனரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜு ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் 
    எம்.எல்.ஏ. ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரபாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

    இதில் தர்மர், ஜெயக்குமார், கூடலிங்கம், மகாலிங்கம், பாண்டிச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சேலம் அருகே ஜூஸ் என நினைத்து மண் எண்ணையை குடித்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள எம்.பெருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவரது 2 வயது ஆண் குழந்தை இன்பன்.

    இந்த குழந்தை கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜூஸ் என நினைத்து வீட்டில் இருந்த மண் எண்ணையை குடித்து மயங்கி கிடந்தது. இதை பார்த்த உறவினர்கள் குழந்தையை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தது. இதை பார்த்த பெற்றோர் கதறி துடித்தனர். சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வீட்டில் மண் எண்ணையை குழந்தைக்கு எட்டும் தூரத்தில் வைத்ததால் இந்த குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது. இது குறித்து எத்தனை முறை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் தொடரும் இந்த சம்பவங்களால் அந்த பகுதியில் சோகம் ஏற்பட்டுள்ளது.

    முட்டத்தில், இன்று அதிகாலை சொகுசு காரில் கடத்திச் சென்ற 1500 லிட்டர் மண்எண்ணெயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    களியக்காவிளை:

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேசன் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க வருவாய் அதிகாரிகள் தினமும் வாகனச் சோதனை நடத்துவது வழக்கம். அதன்படி, முட்டம் பகுதியில் இன்று அதிகாலை தனி தாசில்தார் ராஜசேகர் தலைமையில் துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், டிரைவர் டேவிட் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சொகுசு கார் ஒன்று வேகமாக வந்தது. அதிகாரிகள் காரை நிறுத்தும்படி கைகாட்டினர். ஆனால் கார், நிற்காமல் வேகமாக சென்றது. உடனே அதிகாரிகள் அந்த காரை துரத்திச் சென்றனர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று அம்மாண்டி விளை சந்திப்பில் காரை மடக்கிப் பிடித்தனர்.

    காரில் இருந்த டிரைவர் தப்பியோடி விட்டார். அதிகாரிகள் காரை சோதனையிட்டபோது, காரில் 1500 லிட்டர் மண்எண்ணெய் இருந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் இணையம் குடோனில் ஒப்படைத்தனர்.

    மண்எண்ணெய் கடத்திச் சென்ற காரை கல்குளம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
    ×