search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முட்டத்தில், காரில் கடத்திய 1500 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
    X

    முட்டத்தில், காரில் கடத்திய 1500 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

    முட்டத்தில், இன்று அதிகாலை சொகுசு காரில் கடத்திச் சென்ற 1500 லிட்டர் மண்எண்ணெயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    களியக்காவிளை:

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேசன் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க வருவாய் அதிகாரிகள் தினமும் வாகனச் சோதனை நடத்துவது வழக்கம். அதன்படி, முட்டம் பகுதியில் இன்று அதிகாலை தனி தாசில்தார் ராஜசேகர் தலைமையில் துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், டிரைவர் டேவிட் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சொகுசு கார் ஒன்று வேகமாக வந்தது. அதிகாரிகள் காரை நிறுத்தும்படி கைகாட்டினர். ஆனால் கார், நிற்காமல் வேகமாக சென்றது. உடனே அதிகாரிகள் அந்த காரை துரத்திச் சென்றனர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று அம்மாண்டி விளை சந்திப்பில் காரை மடக்கிப் பிடித்தனர்.

    காரில் இருந்த டிரைவர் தப்பியோடி விட்டார். அதிகாரிகள் காரை சோதனையிட்டபோது, காரில் 1500 லிட்டர் மண்எண்ணெய் இருந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் இணையம் குடோனில் ஒப்படைத்தனர்.

    மண்எண்ணெய் கடத்திச் சென்ற காரை கல்குளம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
    Next Story
    ×