மண்எண்ணெய் குடித்த மூதாட்டி சாவு

குளிர்பானம் என்று நினைத்து மண்எண்ணெய் குடித்த மூதாட்டி இறந்தார். போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்எண்ணெய் குடித்த மூதாட்டி சாவு
Published on

மதுரை

மதுரை மேலவளவு, புது சுக்காம்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி லட்சுமி (76). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருமகன் வீட்டுக்கு சென்றார். அப்போது அவருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. அங்கு சமையல் அறையில் இருந்த ஒரு பாட்டிலில் நீல நிற திரவம் இருந்தது. அதனை குளிர்பானம் என்று நினைத்து அவர் குடித்து விட்டார். அதன் பிறகு தான், அது மண் எண்ணெய் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மயங்கி விழுந்த லட்சுமிைய மீட்டு மேலூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக மேலவளவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com