நள்ளிரவில் 2 வீடுகள் மீது மண்ணெண்ணை பாட்டிலை வீசி சென்ற மர்ம நபர்கள்

அப்பகுதியில் பதிவாகி உள்ள சி.சி. டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் 2 வீடுகள் மீது மண்ணெண்ணை பாட்டிலை வீசி சென்ற மர்ம நபர்கள்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் சரகத்திற்கு உட்பட்ட எம்பரையர் தெரு பகுதியில் ஆரூடா (47) என்பவர் வீட்டின் முன்பும், தென்பாகம் காவல் சரகத் திற்கு உட்பட்ட ஜார்ஜ் ரோடு காந்திநகர் ஜெனிரோ (46) வீட்டின் முன்பும் மண்ணெண்ணை பாட்டிலில் தீப்பற்ற வைத்து வீசப்பட்டு உள்ளது.

தெருக்களில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர். நள்ளிரவு 12.40 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

அந்த நேரத்தில் அப்பகுதியில் பதிவாகி உள்ள சி.சி. டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆரூடா மகன் மரியா அந்தோணி டைட்டஸ், ஜெனிரோ மகன் கேத்ரினான் ஆகிய இருவர் மீதும் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை அச்சுறுத்தும் வகையில் முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் மண்ணெண்ணை பாட்டில்களில் தீ வைத்து வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com