என் மலர்tooltip icon

    மதுரை

    • பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் உருவான தீயானது மளமளவென்று பரவி வீட்டின் உள்பகுதியில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்கள் மீதும் பற்றியது.
    • அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கீழப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் சுமதி (வயது 37). கணவர் இறந்துவிட்ட நிலையில் சுமதி அப்பகுதியில் சொந்தமாக பால்பண்ண வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியில் மேலும் சிலர் பால்பண்ணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சுமதியின் வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் திடீரென்று சுமதியின் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றனர். இந்த சத்தம் கேட்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சுமதி பதறியடித்துக்கொண்டு வெளியில் ஓடிவந்தார்.

    அப்போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் உருவான தீயானது மளமளவென்று பரவி வீட்டின் உள்பகுதியில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்கள் மீதும் பற்றியது. இதில் அந்த வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. 2 மோட்டார் சைக்கிள்களும் எலும்பு கூடாக காட்சியளித்தது. இதைபார்த்த சுமதி மயங்கி விழுந்தார்.

    இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். மேலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் வீட்டிற்குள் மயங்கி கிடந்த சுமதியை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும் இது தொடர்பாக விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் போட்டியில் யாராவது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினார்களா? அல்லது வேறு காரணமா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
    • பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்படு கிறது.

    மதுரை

    அ.தி.மு.க. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர், வருங்கால முதலமைச்சர், புரட்சித் தமிழர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, கழகத்தின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அம்மா பேரவையின் சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நாளை (17-ந் தேதி) காலை 9 மணிக்கு டி.குன்னத்தூர் உள்ள அம்மாகோவில் மணிமண்டபத்தில் உள்ள புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் திருவுரு சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப் படுகிறது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்படு கிறது.

    அதனை தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கி ணங்க சோழவந்தான் குமாரத்தில் மாபெரும் பொதுக்கூட்டமும், திருமங்கலம் தொகுதியில் வருகிற 18-ந் தேதி கள்ளிக்குடியில் மாபெரும் பொதுக்கூட்டமும், அதனை தொடர்ந்து உசிலம்பட்டியில் 28-ந் தேதி மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.

    மேற்கண்ட நிகழ்ச்சி களுக்கு முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள், கழகம் மற்றும் சார்பு அணி நிர்வாகிகளும், ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வட்ட நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் மற்றும் செயல்வீர்கள், செயல்வீராங்கனைகள் அனைவரும் பங்கேற்கு மாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மதுரையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்.
    • இந்த கூட்டத்தில் நடிகர் வையாபுரி பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க 52-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை காலை 9.30 மணிக்கு மதுரை மாநகர் மாவட்ட அலுவலகத்தில் கொடியேற்றி கொண்டா டப்படுகிறது. பொது மக்க ளுக்கு இனிப்புகள் வழங்கப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து மதுரை கே.கே.நகரில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பி னர்கள் மாவட்ட நிர்வாகி கள், பகுதி, வட்ட நிர்வா கிகள், சார்பணி நிர்வாகிகள், முன்னோடிகள், பொது மக்கள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன்.

    இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. ஆண்டு விழா பொதுக்கூட்டம் பழங்காநத்தத்தில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் நடிகர் வையாபுரி பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். இந்த பொதுக்கூட்டத்திலும் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அனைத்து வார்டுகளிலும் அ.தி.மு.க. கொடியேற்று நிகழ்ச்சி நடக்கிறது.
    • அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை

    அ.தி.மு.க.வின் 52 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள 16 கால் மண்டபம் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவ படத்திற்கு நாளை காலை 10 மணியளவில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட உள்ளது.

    அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. கொடி கம்பம் கொடியேற்று நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதே போல மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம், கிழக்கு தொகுதி, மேலூர் தொகுதி அனைத்து கழகங்க ளிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வார்டு பகுதிகளிலும் அ.தி.மு.க.வின் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட உள்ளது,

    இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். மன்றம், ஜெய லலிதா பேரவை, இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி, வர்த்தக அணி, மீனவர் அணி, விவசாய பிரிவு, வழக்கறிஞர் பிரிவு, அண்ணா தொழிற்சங்கம், சாரா ஓட்டுனர் அணி, சிறுபான்மை பிரிவு, மருத்துவ அணி, கலைப்பிரிவு, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் முன்னாள் இந்நாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழிலாளி உள்பட 3 பேர் பலியாகினார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அருகே வாடிப்பட்டி குமரம் பகுதியைச் சேர்ந்தவர் மூக்கையன் மகன் சரவணன் (24). பெயிண்டர் வேலை பார்த்து வந்தார்.இவர் பாலமேடு-மதுரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் சரவணன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

    இது குறித்து அவருடைய தாய் சரஸ்வதி அலங்கா நல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்து வரு கின்றனர்.

    திருமங்கலம் மேலக்கோட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முருகன் (47). கொத்தனாரான இவர் திண்டுக்கல்-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கட்டுப் பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரம் இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. இதில் அவருக்கு பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து முருகன் மனைவி ராமுத்தாய் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை-திருமங்கலம் நான்கு வழி சாலை கப்பலூர் சர்வீஸ் ரோட்டில் ஒருவர் சாலையோரம் அடிபட்டு மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம் மறவன்குளம் கிராம நிர்வாக அதிகாரி ஆனந்த் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

    பின்னர் இது குறித்து அவர் திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சாலையோரம் அடிபட்டு கிடந்த அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அவர் சிகிச்சை பலனனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • 7 பேர் படுகாயமடைந்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரில் தினமும் சிவகங்கை மாவட்டத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருவதால் எப்போதுமே இந்த பஸ் அதிகளவில் கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மேலூரில் இருந்து சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் மேலூரை அடுத்துள்ள வஞ்சிநகரம் ஊராட்சியை சேர்ந்த நெல்லுகுண்டுபட்டி அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள கண்மாய்க் கரையில் கவிழ்ந்தது. இதில் பஸ் டிரைவர் ஜீவானந்தம், பயணிகள் சாந்தி,ராஜேஸ்வரி, பத்மா, பாணு உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து கொட்டாம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி பாலாஜி, தனிப்பிரிவு ஏட்டு விஜய் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு காய மடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் 108 ஆம்புலன்சில் மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
    • இதனால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    மதுரை

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந் துள்ள நிலையில் தமிழ்நாட் டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரண மாக இன்றும், நாளையும் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் கனமழை பெய் யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள் ளது.

    205 மி.மீ. மழை பதிவு

    இந்தநிலையில் மதுரை மாவட்டத்தில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத் துடனும் குளிர்ந்த காற்றும் வீசுகிறது. பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் ஒரு சில இடங்களை தவிர மாவட்டம் முழுவதும் 205 மி.மீட்டர் மழை பதிவாகியுள் ளது.

    இதில் அதிகபட்சமாக பேரையூரில் 103 மில்லி மீட்டரும், கள்ளிக்குடியில் 52.20 மில்லி மீட்டரும், எழு மலையில் 39.80 மீட்டர் மழையும் பதிவானது. மேலும் மதுரை விமான நிலையம், விரகனூர், சிட் டம்பட்டி, இடையபட்டி, கள்ளந்திரி, தல்லாகுளம், மேலூர், புலிப்பட்டி, தனியா மங்க லம், சாத்தையாறு அணைப்பகுதி, மேட்டுப் பட்டி, ஆண்டிப்பட்டி, சோழவந்தான், வாடிப்பட்டி, உசிலம்பட்டி, குப்பனம் பட்டி, திருமங்கலம் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் சார லுடன் கூடிய மழை பெய் தது. வாரத்தின் முதல் நாள் என்பதால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் அனை வரும் மழையில் நனைந்து கொண்டே சென்றனர். இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் சம்பா, குருவை சாகுபடி செய்த விவசாயிகள் போதிய மழை இல்லாததால் சம்பா குறுவை சாகுபடி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது.

    வைகை அணையில் இருந்து குடிநீருக்காக மட் டுமே தண்ணீர் திறக்கப்பட்ட தால் மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 67 சதவீதம் சம்பா சாகுபடி பரப்பளவு குறைந் திருந்தது. இதனால் ஏற்பட் டுள்ள பொருளாதர இழப்பை சரி செய்யும் வகையில் பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என விவ சாயிகள் வலியுறுத்தி வரு கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கண்மாய், கிணறு உள்ளிட்ட நீர் நிலை களில் தண்ணீர் வேகமாய் நிரம்பி வருவதால் நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    நீர்மட்டம் உயர்வு

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாய பணி களை மேற்கொள்ள விவசா யிகள் ஆர்வம் காட்டி வரு கின்றனர். தொடர் மழை யால் முல்லைப் பெரியாறு அணையில் 122.80 அடியும், வைகை அணையில் 55.09 அடியும், சாத்தையாறு அணையில் 17.90 அடியும் நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சிய டைந்து உள்ளனர்.

    • தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.
    • கூட்டத்திற்கு சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    சோழவந்தான்

    தி.மு.க. இளைஞரண சார்பில் வருகின்ற டிசம்பர் 17-ந் தேதி சேலத்தில் மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் தி.மு.க. சார்பில் இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் சார்பில் சோழவந்தானில் நடைபெற்ற இளைஞரணி செயல் வீரர்கள் ஆலோ சனை கூட்டம் மற்றும்

    2024-ம் ஆண்டு பாராளு மன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதற்கான ஆலோ சனை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்திற்கு சோழ வந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூர் துணைச் செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மதுரை வடக்கு மாவட்ட செயலா ளருமான, அமைச்சருமான மூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

    வருகிற டிசம்பர் 17-ந் தேதி சேலத்தில் நடைபெறும் இளைஞரணி 2-வது மாநில மாநாட்டில் மதுரை புறநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் இளைஞர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் 2024 நடைபெறுகின்ற பாராளுமன்றத் தேர்தலில் சோழவந்தான் பேரூர் சார்பில் அதிகமான வாக்கு களை பெற பூத் கமிட்டி அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.இதில் மாவட்ட பொருளா ளர் சோமசுந்தர பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் நேரு, ஒன்றிய செயலாளர் சிறைச் செல்வன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் வெற்றி செல்வன், சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள், வார்டு உறுப்பி னர்கள் மாவட்ட பிரதி நிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான் அருகே தென்கரையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
    • சோழவந்தான் அருகே தென்கரையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

    சோழவந்தான்

    அக்டோபர் 13-ந் தேதி உலக பேரிடர் தணிக்கை நாளாக மாநில மற்றும் தேசிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சோழவந்தான் அருகே தென்கரை வைகை பாலத்தில் தென்கரை வருவாய் ஆய்வாளர் சதீஷ் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் தென்கரை ஜெகதீஷ், முள்ளிப்பள்ளம் பிரபாகரன் மன்னாடிமங்கலம் வெங்கடேசன், குருவித்துறை முபாரக் சுல்தான் ஆகியோர் முன்னிலையில் கனமழையால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் பொதுமக்கள் முன் எச்சரிக்கை விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    இதில் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் கண்ணன் தலைமையில் தீயணைப்பு படையினர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்திக் காட்டினர் இதில் கிராம மக்கள் கிராம உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர் நிலையை எழுத்தர் பெரியசாமி நன்றி தெரிவித்தார்.

    • மழை வேண்டி பாறை மீது சோறிட்டு பக்தர்கள் உணவருந்தும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி நடந்து வருகிறது.
    • வடப்புளி பெருமாள், ஆஞ்சநேயர் கோவில் மற்றும் கிராம தெய்வங்களை வழிபட்டு ராமச்சந்திர மூர்த்தி கோவிலை வந்தடைந்தனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கொப்பையாசாமி மலை உச்சியில் பிரசித்தி பெற்ற கொப்புக்கொண்ட பெருமாள்சாமி கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவிலில் மழை வேண்டி பாறை மீது சோறிட்டு பக்தர்கள் உணவருந்தும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டும் பி.தொட்டியபட்டியிலுள்ள ராமச்சந்திர மூர்த்தி கோவிலிலிருந்து கடந்த இருதினங்களாக அங்குள்ள முக்கிய வீதிகளில் மருளாளி ஆடிவர பொதுமக்கள் சாமிக்கு காணிக்கையாக அரிசி, தானிய வகைகளை வழங்கினர். அவை அனைத்தையும் வாங்கி சேமித்து நேற்று முன்தினம் இரவு கொப்பையா சாமி மலை உச்சியிலுள்ள கொப்புக்கொண்ட பெருமாள் கோவிலில் பக்தர்கள் அனைவரும் தங்கி வழிபட்டனர்.

    இந்த வழிபாடு நேற்று காலை தொடங்கி சாமிக்கு 11 விதமான பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு கொப்புக் கொண்ட பெருமாள் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். காணிக்கையாக வாங்கி சேமித்து வைத்த அரிசி தானியங்களைக் கொண்டு மழை வேண்டி சாமிக்கு பொங்கல் மற்றும் சோறு படையிலிட்டு மருளாளி ஆடி வந்தார்.

    அப்போது பக்தர்கள் மழை வேண்டியும், தம்பதிகள் குழந்தை வரம் வேண்டி யும் மருளாளியிடம் வரமாக கேட்டு பிரசாதம் பெற்றனர். சாமிக்கு படையிலிட்ட சோற்றை கோவிலை சுற்றியுள்ள பாறைகளில் பக்தர் கள் அமர்ந்து பாறையில் சோறிட்டு உணவருந்தி வழிபட்டனர்.

    அவ்வாறு உணவருந்திய பின்பு பாறையில் கிடக்கும் எச்சத்தை சாமி வருணபகவானை வரவழைத்து மழை பெய்யச் செய்து அதனை சுத்தம் செய்யும் என்பது அப்பகுதி பொதுமக்களின் பராம்பரிய ஐதீகமாக இருந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பாறையில் உணவருந்திய பின்பு மருளாளியுடன் மீண்டும் மலையிலிருந்து கீழறங்கி ஊர்வலமாக பி.தொட்டிய பட்டி கண்மாய் பகுதியிலுள்ள வடப்புளி பெருமாள், ஆஞ்சநேயர் கோவில் மற் றும் கிராம தெய்வங்களை வழிபட்டு ராமச்சந்திர மூர்த்தி கோவிலை வந்தடைந்தனர்.

    இந்த திருவிழா இப்பகுதியிலுள்ள பக்தர்கள் பலரும் பெருமிதமாக கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று மழை வேண்டுதலால் விவசாயங்கள் செழிக்கும் என்று கூறுகின்றனர். மேலும் அந்த பகுதியில் பக்தர்கள் தங்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு கொப்பையா என பெயர் சூட்டி சாமிக்கு நன்றி கடன் செலுத்துகின்றனர்.

    • குறைதீர் கூட்டத்துக்கு அதிகாரிகள் குறித்த நேரத்தில் வரவில்லை.
    • இதனால் மாவட்ட கலெக்டர் அவர்களை வெளியே நிற்க வைத்தார்.

    மதுரை:

    தமிழகம் முழுவதும் திங்கட்கிழமைகளில் கலெக்டர் அலுவலகங்களில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நீண்ட காலமாக பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காதவர்கள் கலெக்டரை நேரடியாக சென்று சந்தித்து மனு அளித்து தீர்வு கண்டு வருகின்றனர்.

    இந்தக் கூட்டங்களில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனு எந்த துறையைச் சார்ந்தது என்று கலெக்டர் பார்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வசம் அந்த மனு அளிக்கப்பட்டு தீர்வு காண அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    அந்த வகையில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போது அதிக அளவிலான மக்கள் மனு கொடுப்பதற்காக வந்திருந்த போது தள்ளு முள்ளு ஏற்பட்டு பிரச்சனை உருவானது.

    இதற்கு அதிகாரிகள் தாமதமாக வந்ததே மக்களின் கூட்டம் அதிகரிக்க காரணமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்நிலையில், இன்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வைத்து மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது.

    இதில் பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் மூலம் பெறப்பட்ட மனுக்களை அந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து தீர்வு காணுவதற்காக இளைஞர்கள் முதல் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் என நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்திருந்தனர். இதற்காக வரவேண்டிய அதிகாரிகள் காலை 9.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வர வேண்டும்.

    ஆனால் பெரும்பாலான அதிகாரிகள் காலை 10 மணி மற்றும் அதற்கு மேற்பட்ட நேரத்திலும் பணிக்கு வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கலெக்டர் சங்கீதா, குறை தீர்க்கும் கூட்ட அரங்கிற்குள் உள்ளே வரக்கூடாது என அதிரடியாக உத்தரவிட்டார்.

    இதனால் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் அரங்கிற்குள் அதிகாரிகள் உள்ளே வர விடாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, தாமதமாக வந்த அதிகாரிகளை வெளியே நிற்க வைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கையை பொதுமக்கள் பெரிதும் வரவேற்று பாராட்டினர்.

    • பக்தர்கள் கொலு அரங்குகளை பார்வையிட்டு மீனாட்சி அம்மனை தரிசித்தனர்.
    • சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது. முதல் நாளில், மீனாட்சி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் கொலு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை காண ஏராளமான பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால் கோவில் உள் வளாகத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் கொலு அரங்குகளை பார்வையிட்டு மீனாட்சி அம்மனை தரிசித்தனர்.

    நேற்று தொடங்கிய இந்த விழா வருகிற 24-ந்தேதி வரை நடக்கிறது. நவராத்திரி திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் செய்து கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் பக்தர்களுக்கு அர்ச்சனைகள், மூலஸ்தான தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவ அம்மனுக்குதான் அர்ச்சனைகள் செய்யப்படும்.

    விழாவின் தொடர்ச்சியாக, கோலாட்ட அலங்காரமும், அர்ஜூனனுக்கு பாசுபதம் அருளியது, ஏகபாதமூர்த்தி, கால்மாறி ஆடிய படலம், தபசு காட்சி, ஊஞ்சல், சண்டேசா அனுக்கிரஹமூர்த்தி, மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் அம்மன் கொலு வீற்றிருந்து அருள்பாலிப்பார். தினமும் சிறப்பு பூஜை நடக்கிறது.

    திருவிழா நடைபெறும் நாட்களில் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக் கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

    ×