தென்கரையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி

சோழவந்தான் அருகே தென்கரையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். சோழவந்தான் அருகே தென்கரையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
தென்கரையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி
Published on

சோழவந்தான்

அக்டோபர் 13-ந் தேதி உலக பேரிடர் தணிக்கை நாளாக மாநில மற்றும் தேசிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சோழவந்தான் அருகே தென்கரை வைகை பாலத்தில் தென்கரை வருவாய் ஆய்வாளர் சதீஷ் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் தென்கரை ஜெகதீஷ், முள்ளிப்பள்ளம் பிரபாகரன் மன்னாடிமங்கலம் வெங்கடேசன், குருவித்துறை முபாரக் சுல்தான் ஆகியோர் முன்னிலையில் கனமழையால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் பொதுமக்கள் முன் எச்சரிக்கை விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

இதில் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் கண்ணன் தலைமையில் தீயணைப்பு படையினர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்திக் காட்டினர் இதில் கிராம மக்கள் கிராம உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர் நிலையை எழுத்தர் பெரியசாமி நன்றி தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com