என் மலர்
மதுரை
- அலங்காநல்லூரில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது.
- இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசினார்.
அலங்காநல்லூர்
மதுரை அ.தி.மு.க.வில் 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடந்தது. மேற்கு, தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் பாசிங்கா புரம், சாய்பாபா கோவில் அருகில் ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இதில் ஒன்றிய செய லாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ், கொரியர் கணேசன், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக் குமார் ஆகியோர் முன் னிலை வகித்தனர். முன் னாள் கூட்டுறவு தலைவர் மலர்கண்ணன், மாவட்ட பிரதிநிதி சுவாமிநாதன் ஆகியோர் வரவேற்றனர்.
முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ.க் கள் கருப்பையா, மாணிக் கம், தமிழரசன், சரவணன், மாவட்ட விவசாய அணி ராம்குமார், மாவட்ட மகளிரணி லட்சுமி, உள் ளிட்ட பலர் கலந்து கொண் டனர். முன்னதாக தி.மு.க.வை சேர்ந்த 20-க்கும் மேற்பட் டோர் ஒன்றிய செயலாளர் ராதா கிருஷ்ணன் தலைமை யில் அ.தி.மு.க.வில் இணைந் தனர். அவர்களை முன் னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சால்வை அணிவித்து வரவேற்றார். முடிவில் பொதும்பு கிளைச் செயலாளர் ராகுல் நன்றி கூறினார்.
- உசிலம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
- இந்த முகாமில் 75 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த முகாமில் 75 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அதில் 17 பேருக்கு தேசிய அடையாள அட்டை, நலவாரிய பதிவு செய்து பெறப்பட்டது. மேலும் 10 பேருக்கு தனித்துவ அடையாள அட்டைகளுக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் ெரயில்வே, பஸ் பயண சலுகைக்கான மருத்துவ சான்றுகள் வழங்கப்பட்டது.
முகாமில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன் மாவட்ட, கல்வி அலுவலர் கணேசன், உதவி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கார்மேகம், சரவண முருகன், புள்ளியியல் ஆய்வாளர் பால்சாமி, வட்டார கல்வி அலுவலர்கள் சுப்புராஜ், திலகவதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்த்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெயந்தி, வளமைய சிறப்பு பயிற்றுநர் மகேஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- தி.மு.க. இளைஞரணி மாநாடு இந்தியாவை திரும்பி பார்க்க வைக்கும் மாநாடாக அமையும்.
- மேலூரில் நடந்த இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசினார்.
மேலூர்
மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மேலூர் நகர், கிழக்கு ஒன்றியம், வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம், கொட்டாம்பட்டி கிழக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம், அ.வல்லாளபட்டி பேரூ ராட்சி சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி செயல்வீ ரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான பி.மூர்த்தி தலைமை தாங்கினார். அப் போது அவர் வருகிற டிசம்பர் 17-ந்தேதி சேலத் தில் நடைபெறவுள்ள தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு குறித்து மேலூர் தொகுதி தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளி டம் இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்தில், இளைஞர் அணி பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நேரி டையாக அழைத்து சரி பார்ப்பு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, அமைச்சர் மூர்த்தி பேசியதா வது:-
சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாட்டிற்கு, மதுரை மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான இளைஞர் கள் கலந்து கொள்ள வேண் டும். அதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளி லும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு பொறுப்பா ளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாடு இந்தியாவை திருப்பி வைக்கின்ற மாநாடாக அமையும்.
இந்தியா கூட்டணி அமைந்ததற்கு முக்கிய காரணம் நமது தமிழக முதலமைச்சர். அதனால் தான் அதில் பங்கேற்று உள் ளார். வருகின்ற நாடாளு மன்ற தேர்தல் வெற்றி, வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக அமையும். அதனால் கழக நிர்வாகிகள் துடிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் சோழ வந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாள ரும், மேலூர் பொறுப்பாளர் வ.து.ந.ஆனந்த், மாவட்ட அவைத் தலைவர் பால சுப்பிரமணியன், மாவட்ட கழக பொருளாளர் சோம சுந்தரம், மேலூர் நகர செய லாளரும், நகர்மன்ற தலைவ ருமான முகமது யாசின், மேலூர் வல்லாளபட்டி பேரூராட்சி சேர்மன் குமரன்,
ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திர பிரபு, பால கிருஷ்ணன், ராஜராஜன், கிருஷ்ணமூர்த்தி, பழனி, வல்லாளப்பட்டி கார்த்தி கேயன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபைதா அப்பாஸ், முன் னாள் ஒன்றிய செயலாளர் புகழேந்தி, மாவட்ட தொண் டரணி அமைப்பாளர் நாவி னிபட்டி வேலாயுதம், மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அமைப்பாளர் அழகு பாண்டி, கவுன்சிலர் அலாவு தீன், முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- இரவு கடையில் கோழிக்கறி வாங்கி வந்து சமைத்து சாப்பிட்டனர்.
- ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் கவுதம் ஆனந்திற்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
மதுரை:
மதுரை மாவட்டம் பெரியபொக்கம்பட்டியில் வசித்து வந்தவர் கவுதம் ஆனந்த் (வயது 33). இவரது மனைவி பவித்ரா. இவர்களுடைய 4 வயது மகள் மிதுஸ்ரீ. நேற்று முன்தினம் இரவு கடையில் கோழிக்கறி வாங்கி வந்து சமைத்து சாப்பிட்டனர். சிறிதுநேரத்தில் சிறுமி மிதுஸ்ரீக்கு வயிற்று வலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தாள். அவளை மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இந்தநிலையில் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் கவுதம் ஆனந்திற்கும் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்தநிலையில், நேற்று அதிகாலை மிதுஸ்ரீ சிகிச்சை பலனின்றி இறந்தாள். மகள் இறந்ததை அறிந்து கவுதம் ஆனந்த் அதிர்ச்சி அடைந்தார். திடீரென அவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
கோழிக்கறி கெட்டுப்போய் இருந்ததாகவும், அதை சமைத்து சாப்பிட்டதால் இருவரும் உயிரிழந்ததாகவும் தகவல்கள் பரவின. ஆனால், பிரேத பரிசோதனைக்கு பின்னரே இருவரின் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் கூறினர்.
- ஆவணங்களை திருத்தியது உள்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.
- முறைகேடான நியமனங்களை ரத்து செய்து அதற்கு காரணமான அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 2019-20ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது மதுரை ஆவினில் மேலாளர்கள், துணை மேலாளர்கள், உதவியாளர்கள், டிரைவர்கள் என 91 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதேபோன்று தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், திருப்பூர், விருதுநகர், தேனி ஆகிய இடங்களிலும் ஆவினில் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த காலி பணியிடங்களுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் முறையாக தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த பலருக்கு தேர்வு எழுத அழைப்பு விடுக்கப்படவில்லை.
"முறையாக விண்ணப்பிக்காத பலர் காலிப்பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர். இந்த பணி நியமனங்கள் முறையாக நடைபெறவில்லை என்றும், ஒரு பணியிடத்துக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு தங்களுக்கு வேண்டியவர்களை பணி அமர்த்தியதாகவும்" ஆவின் நிர்வாக அதிகாரிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
தனியாக அழைத்து ஆவின் நிறுவன அதிகாரிகள் தேர்வு நடத்தியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகள் குழு மதுரை, தேனி, திருப்பூர் நாமக்கல், விருதுநகர் ஆகிய இடங்களில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர்
இந்த விசாரணையின்போது அ.தி.மு.க. ஆட்சியின் போது ஆவின் காலிப்பணியிடங்களில் ஆட்களை நியமனம் செய்ததில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்த குறித்த முழுமையான அறிக்கையை அதிகாரிகள் குழு ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையனிடம் வழங்கியது.
இந்த அறிக்கையை பரிசீலித்த ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் மதுரை ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதேபோன்று தஞ்சாவூர், திருச்சி, திருப்பூர், விருதுநகர், நாமக்கல், தேனி ஆகிய இடங்களில் உள்ள ஆவினில் முறைகேடாக பணியமர்த்தப்பட்ட மொத்தம் 236 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் பிறப்பித்துள்ளார்.
இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த ஆவின் பணியாளர்கள் 26 பேர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு உள்ளார்.
இதையடுத்து, பணி இடம் நீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், அதிமுக ஆட்சியின்போது மதுரை ஆவினில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி நீக்கம் செல்லும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஆவணங்களை திருத்தியது உள்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. முறைகேடான நியமனங்களை ரத்து செய்து அதற்கு காரணமான அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், முறைகேடு தொடர்பாக உத்தரவு நகல் கிடைத்த 48 மணி நேரத்தில் ஆவின் பொது மேலாளர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- வனப்பகுதிக்குள் 100-க்கும் மேற்பட்ட சட்ட விரோத கோவில்கள் உள்ளன.
- ஒரு 6 மணி நேரமாவது குறிப்பிட்ட அளவில் பக்தர்களை அனுமதிக்கலாமே? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மதுரை:
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சடையாண்டி, மதுரை ஐகோர்ட்டில் தாக் கல் செய்த மனுவில் கூறியி ருந்ததாவது:-
சதுரகிரி சுந்தர மகாலிங் கம் சுவாமி மலையில் மேல் உள்ள ஆனந்த வள்ளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா நடை பெறும். நவராத்திரி திரு விழாவில் பக்தர்கள் பங்கேற்க மூன்று நாட்கள் அனுமதி வழங்க விருதுநகர் கலெக்டர், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறையிடம் அனுமதி கோரி மனு கொடுக்கபட்டது. ஆனால் அனுமதி மறுத்துவிட்டனர். எனவே மூன்று நாள் இரவு தங்கி நவராத்திரி விழா கொண்டாட அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த மனுவை நீதிபதி புகழேந்தி நேற்று விசாரித்து, அங்கு ஒருநாள் மட்டும் பக்தர்கள் தங்க அனுமதிக்கலாமா? என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறை சார்பாக பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலர் திலிப்குமார் ஆஜரானார்.
வனத்துறை சார்பில் ஆஜ ரான வக்கீல், சாத்தூர் மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. புலிகள் சரணாலய பகுதியாகவும் உள்ளதால் பக்தர்களை அனுமதிக்க முடியாது. கடந்த காலங்களில் திருவிழா நேரத்தில் பக்தர்களை அனுமதித்த போது பக்தர்கள் மாற்றுவழியில் வனத்திற்குள் நுழைந்து உணவு சமைத்ததால் வனத்தில் தீ பற்றிய சம்பவம் ஏற்பட்டு வன விலங்குகளுக்கும், மரங்களுக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது.
குறைந்த அளவில் குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்களை அனுமதிப்பது என்பது இயலாதது. வனப்பகுதிக்குள் 100-க்கும் மேற்பட்ட சட்ட விரோத கோவில்கள் உள் ளன. சதுரகிரி மலைப்பகுதியில் மட்டும் 18 மடங்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு உள்ளன. போதிய காவல்துறை பாதுகாப்பு வழங்குவது இல்லை என்று தெரிவித்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதி, பக்தர்கள் மற்றும் சாதுக்களின் உணவுர்களை புரிந்து கொண்டு ஒரு நாள் மட்டும் கோவிலுக்கு அனுமதி வழங்க முடியாதா? பக்தர்களை கோவிலில் தங்க அனுமதிக்க வேண்டாம், குறிப்பிட்ட நேரமாவது தரிசனத்திற்கு அனுமதிக்கலாமே? அத்துமீறி செல்பவர்களுக்கு அபராதமும் தண்டனையும் விதிக்கலாமே.
வனத்துறைக்கு நிறைய பணிகள் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறேன். இருப்பினும் ஒரு 6 மணி நேரமாவது குறிப்பிட்ட அளவில் பக்தர்களை அனுமதிக்கலாமே? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பின்னர், கோவிலுக்கு செல்ல அனுமதி வேண்டும் என கேட்பார்கள். அனுமதி கொடுத்தால் வனத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை மலை போல போட்டுவிட்டு செல்வார்கள். இது தான் வாடிக்கையாக நடக்கிறது.
அன்னதானம் போடுகிறோம், திருவிழா நடத்துகிறோம் என கூறி பணத்தை வசூல் செய்து கோவில் பெயரை சொல்லி வனத்தை மொத்தமாக குப்பைக்காடாக மாற்றுகிறீர்கள் என்று நீதிபதி வேதனை தெரிவித்தார்.
மேலும் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை வனப்பகுதியில் அனுமதித்தது எப்படி? என கேள்வி எழுப்பியதுடன், இந்த வழக்கில் மதுரை விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை விசாரணையை நாளை ஒத்திவைத்தார்.
- வீழ்ந்து கிடக்கும் தமிழகத்தை எடப்பாடியார் தலைமையில் மீட்டெடுப்போம்.
- அ.தி.மு.க. 52- வது ஆண்டு தொடக்க விழாவில் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
மதுரை
அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் உள்ள எம்.ஜி.ஆர்- ஜெய லலிதா ஆகியோர் சிலைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-
அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அம்மாவின் மறைவுக்கு பின்பு துரோகிகள், எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து அ.தி.மு.க.வை எடப்பா டியார் மீட்டெடுத்தார்.
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் ஒரு லட்சம் உறுப்பினர்கள் வீதம் இரண்டரை கோடி உறுப்பி னர்களை உருவாக்கி தி.மு.க.விற்கு சிம்ம சொப்ப னமாக எடப்பாடியார் உள்ளார் .
தமிழகம் முழுவதும் உள்ள 68 ஆயிரம் பூத்துகளில் இளைஞர்கள், பெண்களை நியமித்துள் ளார். தற்போது ஒரு குடும்பத்தின் பிடியில் தமிழகம் சிக்கி உள்ளது.தமிழகத்தை எடப்பா டியரால் மீட்டெடுக்க முடியும். அதுமட்டுமல்ல ஜீவாதார உரிமைகள் எல்லாம் பறிகொடுக்கப் பட்டு இருக்கிறது. தன் குடும்பத்தை மட்டும் வாழ வைக்க மன்னராட்சி போல் செயல்படும் தீய சக்தியிடம் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும். வீழ்ந்து கிடக்கும் தமிழக த்தை எடப்பாடியார் தலைமையில் மீட்டெடுப் போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.தவசி, பா.நீதிபதி, கே.தமிழரசன், கே.மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன், எம்.வி.கருப்பையா, மாநில நிர்வாகிகள் இளங்கோவன், வெற்றிவேல்,மாவட்ட கழக நிர்வாகிகள் சி.முருகன், தமிழ்ச்செல்வன் ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, ராமையா, பிரபுசங்கர், கண்ணன் நகர செயலாளர்கள் விஜயன், சுமதி சாமிநாதன், மாவட்ட அணி செல்லம்பட்டி ரகு, மகேந்திர பாண்டி, ஆர்யா சிங்கராஜ பாண்டியன், துரைப்பாண்டி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி ராமகிருஷ்ணன், சேர்மன் லதா ஜெகன், டாக்டர் விஜய பாண்டியன், வக்கீல் முத்துராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க. 52-வது ஆண்டு விழா பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.
- அண்ணா எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகி யோர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் அ.தி.மு.க. வின் 52-வது ஆண்டு விழா கொண்டா டப்பட்டது. நிகழ்ச்சிக்கு இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளரும், மதுரை கிழக்கு மாவட்ட செயலா ளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகி யோர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் 16 நாள் மண்டபத்தில் அ.தி.மு.க.வின் கட்சி கொடியை ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., பகுதி செயலாளர் பன்னீர் செல்வம், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், பொருளாளர் பாண்டுரங்கன், பகுதி துணை செயலாளர் செல்வகுமார், இளைஞர் அணி வேல்ராஜ், வட்ட செயலாளர்கள் பொன்.முருகன், பாலமுருகன், எம்.ஆர்.குமார், முத்து கிருஷ்ணன், நாகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மரியாதை செலுத்தினர்.
- முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் பங்கேற்றார்.
மதுரை
அ.தி.மு.க. 52-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அ.தி.மு.க. நிறுவனர், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு ஓ.பி.எஸ். அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஓ.பி.எஸ்.அணி மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன் தலைமையில் தொண்டர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கண்ணன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சுந்தரா, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன், மாவட்ட துணைச் செய லாளர் சுசிலா பாண்டி, லதாபாண்டி, தொகுதி செயலாளர் ரகுராமன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சரவணன், ஐ.டி.விங் திருப்பதி, பகுதி, வட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருமங்கலம் மீனாட்சி-சொக்கநாதர் கோவிலில் நவராத்திரி-திருவிளக்கு பூஜை நடந்தது.
- மேலும் கோவில் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள கொலுவையும் பக்தர்கள் கண்டுகளித்தனர்.
திருமங்கலம்
திருமங்கலம் மீனாட்சி-சொக்கநாதர் சுவாமி கோவிலில் நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. வருகிற 20-ந் தேதி மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இதில் பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினால் திருமண பாக்கியம், குழந்தை பேறு, தொழில் அபிவிருத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை. எனவே பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளுமாறு கோவில் தக்கார் சக்கரையம்மாள், நிர்வாக அதிகாரி அங்கயற்கண்ணி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நவராத்திரி விழாவில் தினமும் மாலை சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மேலும் கோவில் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள கொலுவையும் பக்தர்கள் கண்டுகளித்தனர்.
- சம்பந்தமே இல்லாத சிலர் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்திருப்பது ஏற்புடையதல்ல.
- புகாரை முறையாக போலீசார் விசாரிக்காமல் வழக்குப்பதிவு செய்து, இறுதி அறிக்கையையும் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.
மதுரை:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி உள்பட சிலர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எங்கள் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 2020-ம் ஆண்டில் தனது கணவர் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்தார். அதன்பேரில் ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத எங்களையும் சேர்த்து உள்ளனர்.
இந்த வழக்கு விசாரணையின் பேரில் போலீசார் ஆண்டிப்பட்டி கோர்ட்டில் இறுதி அறிக்கையையும் தாக்கல் செய்துவிட்டனர். அவர்களின் குடும்ப விவகாரத்துக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. போலீசார் முறையாக விசாரிக்காமல் எங்கள் மீதான வழக்கில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்து உள்ளனர். எங்கள் மீதான இறுதி அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு மிகத் தெளிவாக உள்ளது. அதாவது, கணவரின் ரத்த உறவுகள் மீது மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் சட்டத்திற்கு மாறாக காவல்துறையினர் மனுதாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல என வாதாடினார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஆண்டிப்பட்டியை சேர்ந்த பெண், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாக போலீசில் புகார் அளித்து உள்ளார். அந்த பெண்ணின் புகாரில், கணவரின் இரண்டாவது மனைவியின் உறவினர்களான மனுதாரர்களையும் சேர்த்துள்ளார்.
வரதட்சணை சட்டப்படி பெண்ணின் கணவர் மற்றும் அவரது ரத்த உறவு மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் இங்கு சம்பந்தமே இல்லாத சிலர் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்திருப்பது ஏற்புடையதல்ல.
அந்த புகாரை முறையாக போலீசார் விசாரிக்காமல் வழக்குப்பதிவு செய்து, இறுதி அறிக்கையையும் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். எனவே மனுதாரர்கள் மீதான வழக்கின் இறுதி அறிக்கை ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.
- தனிப்படை போலீசார் திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
- கடந்த சில நாட்களாக தங்கி இருந்த தனக்கன்குளம் பகுதியில் முகாமிட்டு கிருஷ்ணகுமாரை நோட்டமிட்டு வந்துள்ளனர்.
திருமங்கலம்:
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 31). இவர் மீது போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கிருஷ்ணகுமார் கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தண்டனை காலம் முடிந்த பின் வெளியே வந்த கிருஷ்ணகுமாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது. இதன் காரணமாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் பகுதியில் கிருஷ்ணகுமார் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார். அந்த பகுதியில் வெல்டிங் தொழில் செய்து வந்த அவர் தனியாக தொழில் தொடங்கவும் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை வேலைக்கு சென்று விட்டு கிருஷ்ணகுமார் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மதுரை திருநகரை அடுத்த கூத்தியார்குண்டு-கருவே லம்பட்டி சாலையில் உள்ள ரெயில்வே கேட் அருகே சென்றபோது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் அவர்கள் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் கிருஷ்ணகுமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கிருஷ்ணகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் தொடர் விசாரணையில் கொலையாளிகள் உசிலம்பட்டி அருகே செக்கானூரணி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் 4 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களிடம் கிடுக்கிப்படி விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர்கள் நெல்லை பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த மாரிராஜ் (30), மேலகுளத்தைச் சேர்ந்த நாராயணன் (29), எம்.கே.பி. நகரைச் சேர்ந்த விஜய் பிரகாஷ் (29), சாலமன் சியான் பிரபாகரன் (29) என தெரிந்தது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரிராஜ் ஒரு வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இதற்கு சாட்சி சொல்லக் கூடாது என கிருஷ்ணகுமார் மற்றும் அவரது தரப்பினர் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து டாஸ்மாக் பாரில் இருந்த மாரிராஜை, கிருஷ்ணகுமார் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த மாரிராஜ் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தார்.
இதற்கு பழி வாங்கும் நோக்கத்தில் கிருஷ்ணகுமாரை கொலை செய்ய மாரிராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் திட்டம் தீட்டி வந்துள்ளனர். அதன்படி கடந்த சில நாட்களாக அவர் தங்கி இருந்த தனக்கன்குளம் பகுதியில் முகாமிட்டு கிருஷ்ணகுமாரை நோட்டமிட்டு வந்துள்ளனர்.
நேற்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்றபோது கிருஷ்ணகுமாரை, மாரிராஜ் கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது. மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.






