search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. இளைஞரணி மாநாடு இந்தியாவை  திரும்பி பார்க்க வைக்கும் மாநாடாக அமையும் -அமைச்சர் மூர்த்தி பேச்சு
    X

    மேலூரில் நடைபெற்ற தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியபோது எடுத்தபடம். அருகில் நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளனர்.

    தி.மு.க. இளைஞரணி மாநாடு இந்தியாவை திரும்பி பார்க்க வைக்கும் மாநாடாக அமையும் -அமைச்சர் மூர்த்தி பேச்சு

    • தி.மு.க. இளைஞரணி மாநாடு இந்தியாவை திரும்பி பார்க்க வைக்கும் மாநாடாக அமையும்.
    • மேலூரில் நடந்த இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசினார்.

    மேலூர்

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மேலூர் நகர், கிழக்கு ஒன்றியம், வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம், கொட்டாம்பட்டி கிழக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம், அ.வல்லாளபட்டி பேரூ ராட்சி சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி செயல்வீ ரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான பி.மூர்த்தி தலைமை தாங்கினார். அப் போது அவர் வருகிற டிசம்பர் 17-ந்தேதி சேலத் தில் நடைபெறவுள்ள தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு குறித்து மேலூர் தொகுதி தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளி டம் இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    மேலும் இந்த கூட்டத்தில், இளைஞர் அணி பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நேரி டையாக அழைத்து சரி பார்ப்பு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, அமைச்சர் மூர்த்தி பேசியதா வது:-

    சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாட்டிற்கு, மதுரை மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான இளைஞர் கள் கலந்து கொள்ள வேண் டும். அதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளி லும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு பொறுப்பா ளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாடு இந்தியாவை திருப்பி வைக்கின்ற மாநாடாக அமையும்.

    இந்தியா கூட்டணி அமைந்ததற்கு முக்கிய காரணம் நமது தமிழக முதலமைச்சர். அதனால் தான் அதில் பங்கேற்று உள் ளார். வருகின்ற நாடாளு மன்ற தேர்தல் வெற்றி, வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக அமையும். அதனால் கழக நிர்வாகிகள் துடிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் சோழ வந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாள ரும், மேலூர் பொறுப்பாளர் வ.து.ந.ஆனந்த், மாவட்ட அவைத் தலைவர் பால சுப்பிரமணியன், மாவட்ட கழக பொருளாளர் சோம சுந்தரம், மேலூர் நகர செய லாளரும், நகர்மன்ற தலைவ ருமான முகமது யாசின், மேலூர் வல்லாளபட்டி பேரூராட்சி சேர்மன் குமரன்,

    ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திர பிரபு, பால கிருஷ்ணன், ராஜராஜன், கிருஷ்ணமூர்த்தி, பழனி, வல்லாளப்பட்டி கார்த்தி கேயன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபைதா அப்பாஸ், முன் னாள் ஒன்றிய செயலாளர் புகழேந்தி, மாவட்ட தொண் டரணி அமைப்பாளர் நாவி னிபட்டி வேலாயுதம், மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அமைப்பாளர் அழகு பாண்டி, கவுன்சிலர் அலாவு தீன், முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×