என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீனாட்சி-சொக்கநாதர் கோவிலில் நவராத்திரி-திருவிளக்கு பூஜை
- திருமங்கலம் மீனாட்சி-சொக்கநாதர் கோவிலில் நவராத்திரி-திருவிளக்கு பூஜை நடந்தது.
- மேலும் கோவில் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள கொலுவையும் பக்தர்கள் கண்டுகளித்தனர்.
திருமங்கலம்
திருமங்கலம் மீனாட்சி-சொக்கநாதர் சுவாமி கோவிலில் நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. வருகிற 20-ந் தேதி மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இதில் பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினால் திருமண பாக்கியம், குழந்தை பேறு, தொழில் அபிவிருத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை. எனவே பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளுமாறு கோவில் தக்கார் சக்கரையம்மாள், நிர்வாக அதிகாரி அங்கயற்கண்ணி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நவராத்திரி விழாவில் தினமும் மாலை சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மேலும் கோவில் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள கொலுவையும் பக்தர்கள் கண்டுகளித்தனர்.
Next Story






