என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்
    X

    பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

    அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

    • அலங்காநல்லூரில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது.
    • இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை அ.தி.மு.க.வில் 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடந்தது. மேற்கு, தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் பாசிங்கா புரம், சாய்பாபா கோவில் அருகில் ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    இதில் ஒன்றிய செய லாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ், கொரியர் கணேசன், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக் குமார் ஆகியோர் முன் னிலை வகித்தனர். முன் னாள் கூட்டுறவு தலைவர் மலர்கண்ணன், மாவட்ட பிரதிநிதி சுவாமிநாதன் ஆகியோர் வரவேற்றனர்.

    முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ.க் கள் கருப்பையா, மாணிக் கம், தமிழரசன், சரவணன், மாவட்ட விவசாய அணி ராம்குமார், மாவட்ட மகளிரணி லட்சுமி, உள் ளிட்ட பலர் கலந்து கொண் டனர். முன்னதாக தி.மு.க.வை சேர்ந்த 20-க்கும் மேற்பட் டோர் ஒன்றிய செயலாளர் ராதா கிருஷ்ணன் தலைமை யில் அ.தி.மு.க.வில் இணைந் தனர். அவர்களை முன் னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சால்வை அணிவித்து வரவேற்றார். முடிவில் பொதும்பு கிளைச் செயலாளர் ராகுல் நன்றி கூறினார்.

    Next Story
    ×