என் மலர்
ஈரோடு
பெருந்துறை ஈரோடு ரோடு கந்தாம்பாளையம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது52).
இவர் பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை இவர் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றார். மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு செல்லாமல் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருந்தார். மற்ற பணியாளர்கள் சாப்பிடுவற்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் கம்பெனி வளாகத்தில் உள்ள ஒரு குடோனில் விஸ்வநாதன் தூக்கு போட்டு கொண்டார். சாப்பிட்டு விட்டு குடோனுக்கு வந்த ஊழியர்கள் அவர் தூக்கு போட்ட நிலையில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் உடனடியாக வந்து தூக்கில் தொங்கி கொண்டிருந்த விஸ்வநாதனை மீட்டு பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்பிரபு வழக்கு பதிவு செய்து அவரது உடலை பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
இறந்த விஸ்வநாதனுக்கு மணிமேகலை (43) என்ற மனைவி, பிருந்தா (20) என்ற மகள் தருண் (14) என்ற மகன் உள்ளனர்.
ஈரோடு தொட்டிபாளையம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணம் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த முதியவரின் பிணத்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்த முதியவர் யார்? என்பது குறித்து விசாரணை நடந்தது. அப்போது அவர் ஈரோடு சூரியம்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்த செல்லத்துரை என்பது தெரியவந்தது.
காவலாளியான அவர் நேற்று அந்த தண்டவாள பகுதியில் நடந்து சென்றார். அவர் அந்த தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது அவர் தண்டவாளத்தில் தவறி விழுந்தார். அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த ரெயிலில் செல்லத்துரை அடிபட்டு பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம் பகுதி நீர்தேக்க பகுதியில் இருந்து தொடர்ந்து மணல் கடத்தி செல்லப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து அந்த பகுதி மக்கள் அந்த லாரிகளை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் நீர் தேக்க பகுதியில் சுஜில்குட்டை, பூதிக்குப்பம் என்ற இடத்தின் வழியாக லாரிகள் வந்தன.
சந்தேகம் அடைந்த பொது மக்கள் அந்த லாரிகளை சிறைபிடித்து நிறுத்தினர். அந்த லாரிகளை சோதனையிட்டனர்.
அப்போது அந்த லாரிகளில் அனுமதியில்லாமல் செம்மண், மணல் அள்ளி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. வண்டல் மண் அள்ளுவதாக வந்து செம்மண், மணலை கடத்தி செல்வதும் தெரியவந்தது.
எனவே அங்கு வந்த 11 லாரிகளையும் பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட் டது.
லாரிகள் சிறைபிடிக்கப்பட்ட தகவல் போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். #Tamilnews
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலையத்தில் ஈரோடு டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு 2 பேர் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் 2 பேரும் ஈரோடு பி.பி.அக்ரஹாரம் ஜோசப் தோட்டத்தை சேர்ந்த ஷேக் அலாவுதீன் (35), நசியனூர் வெட்டுக்காட்டுவலசை சேர்ந்த செல்வராஜ் (35) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் ஒரு செல்போன் வைத்திருந்தனர். அது பற்றி விசாரித்த போது அந்த செல்போன் பஸ் பயணி ஒருவரிடம் கூட்டத்தை பயன்படுத்தி பறித்தது என்று கூறினர்.
இதையடுத்து அந்த செல்போனை பறிமுதல் செய்த போலீசார் ஷேக் அலாவுதீன், செல்வராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
அவர்கள் இதுபோல வேறு யாரிடமும் செல்போன் திருடி உள்ளனரா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
அந்தியூர் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தியூர்- மலைக்கருப்புசாமி கோவில் செல்லும் ரோட்டு, பிச்சப்பாளி மேட்டில் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் அந்தியூர் அடுத்த மைக்கேல் பாளையத்தை சேர்ந்த மாதன்(வயது55) என்பதும், அனுமதியின்றி மது விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மாதனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போன்று அந்தியூர்-பவானி ரோட்டில் மது விற்ற தனபால்(38), பெருந்துறை பகுதியில் மது விற்ற சாமிநாதன்(44), குழந்தைசாமி(36) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு அருகே மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவிவரும் சூழ்நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் உயிர்நீராக 10 நாள்களுக்கு ஒற்றைப்படை மதகு பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் திறக்கப்பட்டு, 5 நாட்களாகியும் இன்னும் கடைக்கோடி பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என்றும், பகலில் நன்றாக வரும் தண்ணீர் அதிகாலை முதல் காலை 10மணிவரை நுரையுடன் கலந்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து ராக்கியாபாளையம் பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
தண்ணீர் திறக்கப்பட்ட நாள் மட்டுமே வாய்க்கால் நிரம்பி வந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து தற்போது மிகவும் குறைவாக வருகிறது. பட்டாஸ்பாளி பகுதியில் இருந்து படிப்படியாக குறைந்து தற்போது கோவில்பாளையம் பகுதிவரை மட்டுமே தண்ணீர் செல்கிறது. அதற்கு பிறகு உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வதில்லை. மேலே உள்ள மதகுகளில் மரங்கள் மற்றும் தென்னைமரங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு அடைத்து தண்ணீரை தேக்கி விடுகின்றனர். இதனால் கடைக்கோடி விவசாயிகள் கடும் பாதிப்படைகின்றனர். மேலும் இரவில் வாய்காலில் சாயக் கழிவுகளை திறந்துவிட்டு விடுகின்றனர்.
அதிகாலை முதல் தண்ணீர் நுரையுடன் கடும் துர்நாற்றத்துடன் வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுகுறித்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, சாயக்கழிவுகள் கலக்காமல் தடுக்கவேண்டும். மேலும், இரவில் மதகுகளில் மரம் மட்டைகளை விட்டு தடுக்காமல் தண்ணீர் முழுமையாக கடைக்கோடிக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிர்தண்ணீர் விடும் காலத்தை இன்னும் 10நாள்களுக்கு நீடிக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
பெருந்துறையை அடுத்துள்ள கொம்மக்கோவில் பகுதியை சேர்ந்த கோபால் என்பவரது மகன் பழனிச்சாமி(வயது38). இவர் பெருந்துறை, கோவை மெயின் ரோடு பகுதியில் 4 சக்கர வாகன ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று மதியம் இவர் தனது உறவினர்களான முருகேசன், பகவதி ஆகியோருடன் ஈரோட்டில் மருத்துவமனையில் நோயாளியாக உள்ள ஒருவரை பார்த்து விட்டு, பழனிச்சாமிக்கு சொந்தமான மினிஆட்டோவில் பெருந்துறைக்கு வந்து கொண்டிருந்தனர்.
பெருந்துறையை அடுத்துள்ள வாய்க்கால் மேடு பகுதியில் வந்த போது பழனிச்சாமி ஆட்டோவை நிறுத்தி விட்டு வாய்க்காலில் குளிக்க செல்வதாக கூறிவிட்டு வாய்க்காலில் இறங்கியுள்ளார். வாய்க்காலில் சற்று ஆழமான பகுதிக்கு சென்ற பழனிச்சாமி திடீரென தண்ணீரில் மூழ்கினார்.
இதனைக்கண்ட கரையில் நின்று கொண்டிருந்த பகவதி மற்றும் முருகேசன் ஆகியோர் சத்தம் போட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து பார்த்து வாய்க்காலில் குதித்து தேடியும் பழனிச்சாமி கிடைக்கவில்லை. பெருந்துறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்து, பவானி பரிசல் துறை மீனவர்களையும் வரவழைத்தனர்.
அங்கு வந்த அவர்கள் அனைவரும் நீரில் குதித்து தேடி அவர் மூழ்கிய இடத்தில் இருந்து சற்று தொலைவிலேயே இறந்து போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த பழனிச்சாமிக்கு நீலாவதி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.
ஈரோடு நசியனூர் ரோட்டில் சம்பத்நகர் முதல் வில்லரசம்பட்டி நால்ரோடு வரை சாலையின் இருபுறமும் அகலப்படுத்தி தார்ரோடு போட ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதேபோல் ஈரோடு கலைமகள் தொடக்க பள்ளிக்கூடத்தில் ரூ.24 லட்சம் செலவில் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டவும், முத்துகருப்பணன் வீதியில் ரூ.25 லட்சம் செலவில் தார்ரோடு போடவும், பெரியார் நகரில் ரூ.43 லட்சம் செலவில் புதிதாக பூங்கா அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
மொத்தம் ரூ.6 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட உள்ள வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு ஆர்.டி.ஓ. நர்மதாதேவி தலைமை தாங்கினார். தாசில்தார் அமுதா முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். இதில் அ.தி.மு.க. பகுதி செயலாளர் மனோகரன், கேசவமூர்த்தி, கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
ஈரோடு:
கருங்கல்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கிருஷ்ணம் பாளையம் அருகே வாலிபர் ஒருவர் சந்தேகம்படும்படி நின்று கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கருங்கல்பாளையத்தை சேர்ந்த சீனிவாசன்(வயது37) என்பதும், அனுமதியின்றி மது விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து கருங்கல்பாளையம் போலீசார் சீனிவாசனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதே போன்று வில்லரசம்பட்டியை சேர்ந்த சரத்குமார்(25), கடத்தூரை சேர்ந்த சகாதேவன்(53), கோபியை சேர்ந்த தங்கராஜ்(53), மலையம் பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன்(47) ஆகிய 4 பேர் அனுமதியின்றி மது விற்றதாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்தும் மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.
பவானி:
பவானியை அடுத்த ஆர்.என்.புதூர், பெருமாள் மலையை சேர்ந்தவர் விஜயசந்திரன்(வயது35).இவரது மகன் தர்ஷன்(9) மகள் வர்ஷினி(7).
வீட்டில் உள்ள மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டுள்ளதால் குளிப்பதற்காக நேற்று மாலை தர்ஷனும், வர்ஷினியும் தனது தாத்தா நவயுகத்துடன்(62) மாயபுரம் மங்களபடித்துறையில் உள்ள காவிரி ஆற்றுக்கு சென்றனர்.
பேரன் தர்ஷனுடன் நவயுகம் குளித்து கொண்டிருந்தார். கரையோரத்தில் வர்ஷினி நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தர்ஷன் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் தர்ஷன் நீரில் மூழ்கினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நவயுகம் பேரனை காப்பாற்ற சென்றார். இதில் அவரும் நீரில் மூழ்கினார். தன் கண் முன்னே தனது அண்ணனும், தாத்தாவும் நீரில் மூழ்குவதை பார்த்து வர்ஷினி கூச்சலிட்டாள்.
அவளது அலறல் சத்தத்தை கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் சிறுமிடம் ஏன் அழுகிறாய்? என்று கேட்டனர். சிறுமி நடந்த சம்பவத்தை கூறி அழுதாள்.
இதையடுத்து இளைஞர்கள் சிலர் காவிரி ஆற்றில் குதித்து நவயுகம், தர்ஷன் ஆகியோரை காப்பாற்ற முயன்றனர். எனினும் அவர்களால் 2 பேரின் உடல்களை மட்டுமே மீட்க முடிந்தது.
இது குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவிரி ஆற்றில் மூழ்கி தாத்தா-பேரன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் வாய்க்கால்புதூர் உத்தண்டியூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சுந்தர்ராஜ் (வயது 21).
திருமணமாகாத இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனை அறிந்த பெற்றோர் அவரை கண்டித்தனர். இதனால் விரக்தி அடைந்த சுந்தர்ராஜ் நேற்று மதுவில் விஷம் கலந்து குடித்தார். ஆபத்தான நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டனர்.
பின்னர் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காமல் சுந்தர்ராஜ் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள ரங்கம்பாளையம், ஓடைக்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 36).
விவசாயியான இவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. இவரது தாயார் தங்கம்மாள். இருவரும் தங்களுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தனர்.
நேற்று இரவு இவர்கள் வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது இதையடுத்து கோபாலகிருஷ்ணனும், தங்கம்மாளும் கதவு அருகே வந்து கதவை திறந்தனர்.
அப்போது முகத்தை துணியால் மூடியபடி 6பேர் வாசலில் நின்றனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் வீட்டுக்குள் புகுந்தனர். கோபாலகிருஷ்ணனும், தங்கம்மாளும் சத்தம் போட முயன்றனர்.
அவர்களை அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டியது. இதனால் கோபாலகிருஷ்ணனும், தங்கம்மாளும் சத்தம் போடாமல் இருந்தனர்.
அந்த கும்பல் பணம், நகையை கேட்டு துன்புறுத்தியது. கோபாலகிருஷ்ணனின் முதுகில் கத்திக்குத்தும் விழுந்தது. அவரை அந்த கும்பல் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது.
தங்கம்மாள் அணிந்திருந்த நகையை கேட்டு துன்புறுத்தினர். தங்கம்மாளை தாக்கவும் முயன்றனர். தனது தாயை தாக்க வேண்டாம் என்று அவர்களிடம் கோபாலகிருஷ்ணன் கெஞ்சினார்.
இதையடுத்து தங்கம்மாள் அணிந்திருந்த 3 பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்த 4 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை அந்த கும்பல் கொள்ளையடித்தது.
பின்னர் வீட்டுக்கு வெளியே நின்ற காரில் தப்பிச் சென்றனர். அப்போதுதான் அவர்கள் காரில் வந்திருந்தது தெரிய வந்தது.
இது குறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மோப்ப நாய் வீரா சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது.கொள்ளை நடந்த வீட்டுக்குள் மோப்பம் பிடித்த நாய் மெயின் ரோட்டுக்கு சுமார் கிலோ மீட்டர் தூரம் ஓடி பின்னர் அங்கேயே நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களும் தடயங்களை சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






