என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருங்கல்பாளையம்-கடத்தூர் பகுதியில் அனுமதியின்றி மது விற்ற 5 பேர் கைது
    X

    கருங்கல்பாளையம்-கடத்தூர் பகுதியில் அனுமதியின்றி மது விற்ற 5 பேர் கைது

    கருங்கல்பாளையம்-கடத்தூர் பகுதியில் அனுமதியின்றி மது விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கருங்கல்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கிருஷ்ணம் பாளையம் அருகே வாலிபர் ஒருவர் சந்தேகம்படும்படி நின்று கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் கருங்கல்பாளையத்தை சேர்ந்த சீனிவாசன்(வயது37) என்பதும், அனுமதியின்றி மது விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து கருங்கல்பாளையம் போலீசார் சீனிவாசனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதே போன்று வில்லரசம்பட்டியை சேர்ந்த சரத்குமார்(25), கடத்தூரை சேர்ந்த சகாதேவன்(53), கோபியை சேர்ந்த தங்கராஜ்(53), மலையம் பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன்(47) ஆகிய 4 பேர் அனுமதியின்றி மது விற்றதாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்தும் மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.

    Next Story
    ×