என் மலர்
செய்திகள்

பெருந்துறை - அந்தியூரில் அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது
பெருந்துறை - அந்தியூரில் உரிய அனுமதியின்றி மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பெருந்துறை:
அந்தியூர் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தியூர்- மலைக்கருப்புசாமி கோவில் செல்லும் ரோட்டு, பிச்சப்பாளி மேட்டில் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் அந்தியூர் அடுத்த மைக்கேல் பாளையத்தை சேர்ந்த மாதன்(வயது55) என்பதும், அனுமதியின்றி மது விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மாதனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போன்று அந்தியூர்-பவானி ரோட்டில் மது விற்ற தனபால்(38), பெருந்துறை பகுதியில் மது விற்ற சாமிநாதன்(44), குழந்தைசாமி(36) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story