என் மலர்
நீங்கள் தேடியது "lorries seized"
- திசையன்விளை - நவ்வலடி சாலையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
- லாரி டிரைவர் அகிலன்,சிவா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திசையன்விளை:
வள்ளியூர் போலீஸ் துணை சூப்பிரண்டு யோகேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று இரவு திசையன்விளை - நவ்வலடி சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக அதிக பாரம் ஏற்றிவந்த 2 லாரிகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் தோவாளை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் அகிலன் (வயது 25), சிவா (24) ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போடி அருகே அனுமதியின்றி மணல் கடத்தியது தொடர்பாக டிராக்டர் மற்றும் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகே ஆற்று படுகையில் இருந்து தொடர்ந்து மணல் கடத்தப்பட்டு வருவதால் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
தாசில்தார் ஆர்த்தி தலைமையில் வருவாய் ஆய்வாளர் சுந்தர்ராஜ் மற்றும் வருவாய்த்துறையினர் பொட்டிபுரம் மற்றும் பூதிப்புரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது மின்னல் வேகத்தில் வந்த 2 லாரிகளையும் ஒரு டிராக்டரையும் மடக்கி சோதனை நடத்தினர். அவர்கள் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து லாரிகளையும், டிராக்டரையும் மணலுடன் பறிமுதல் செய்த அதிகாரிகள் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். லாரி உரிமையாளர் ராஜசேகர் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

ஊத்துக்கோட்டை அருகே சவுடு மணல் கடத்தியதாக 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லாரி டிரைவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் நேற்று இரவு 9 மணி அளவில் தொம்பரம்பேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது ஒன்றின் பின் ஒன்றாக 10 லாரிகள் வேகமாக நிற்காமல் சென்றதால் சந்தேகம் அடைந்த சந்திரதாசன் ஜீப்பில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தி சென்று அந்த லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார்.
லாரிகளில் சவுடு மணல் இருந்தது. இதற்கான ஆவணம் எதுவும் இல்லை. இதையடுத்து சவுடு மணல் கடத்தியதாக 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. லாரி டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் ஊத்துக்கோட்டை எல்லையில் உள்ள ஆரணி ஆற்றில் மணல் குவாரிக்காக முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக தடம் அமைக்க சவுடு மணல் எடுத்து செல்வதாக விசாரணையில் தெரியவந்தது.
எனினும் எந்தவித ஆவணங்கள் இல்லாமல் சவுடு மணல் கடத்தியதால் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தெரிவித்தார்.
தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் வெங்கல் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தாமரைப்பாக்கம் ஏரியில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த 4 மாட்டு வண்டிகளை போலீசார் மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அமணம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர்களான வெங்கடேசன், தமிழரசன், விவேக் ஆகியோரை கைது செய்தனர். #Tamilnews