என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருந்துறை அருகே வாய்க்காலில் குளித்த மெக்கானிக் மூழ்கி பலி
    X

    பெருந்துறை அருகே வாய்க்காலில் குளித்த மெக்கானிக் மூழ்கி பலி

    பெருந்துறை அருகே வாய்க்காலில் குளித்த மெக்கானிக் மூழ்கி பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள கொம்மக்கோவில் பகுதியை சேர்ந்த கோபால் என்பவரது மகன் பழனிச்சாமி(வயது38). இவர் பெருந்துறை, கோவை மெயின் ரோடு பகுதியில் 4 சக்கர வாகன ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று மதியம் இவர் தனது உறவினர்களான முருகேசன், பகவதி ஆகியோருடன் ஈரோட்டில் மருத்துவமனையில் நோயாளியாக உள்ள ஒருவரை பார்த்து விட்டு, பழனிச்சாமிக்கு சொந்தமான மினிஆட்டோவில் பெருந்துறைக்கு வந்து கொண்டிருந்தனர்.

    பெருந்துறையை அடுத்துள்ள வாய்க்கால் மேடு பகுதியில் வந்த போது பழனிச்சாமி ஆட்டோவை நிறுத்தி விட்டு வாய்க்காலில் குளிக்க செல்வதாக கூறிவிட்டு வாய்க்காலில் இறங்கியுள்ளார். வாய்க்காலில் சற்று ஆழமான பகுதிக்கு சென்ற பழனிச்சாமி திடீரென தண்ணீரில் மூழ்கினார்.

    இதனைக்கண்ட கரையில் நின்று கொண்டிருந்த பகவதி மற்றும் முருகேசன் ஆகியோர் சத்தம் போட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து பார்த்து வாய்க்காலில் குதித்து தேடியும் பழனிச்சாமி கிடைக்கவில்லை. பெருந்துறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்து, பவானி பரிசல் துறை மீனவர்களையும் வரவழைத்தனர்.

    அங்கு வந்த அவர்கள் அனைவரும் நீரில் குதித்து தேடி அவர் மூழ்கிய இடத்தில் இருந்து சற்று தொலைவிலேயே இறந்து போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த பழனிச்சாமிக்கு நீலாவதி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.


    Next Story
    ×