என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தியமங்கலத்தில் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து வாலிபர் பலி
    X

    சத்தியமங்கலத்தில் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து வாலிபர் பலி

    சத்தியமங்கலத்தில் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் வாய்க்கால்புதூர் உத்தண்டியூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சுந்தர்ராஜ் (வயது 21).

    திருமணமாகாத இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனை அறிந்த பெற்றோர் அவரை கண்டித்தனர். இதனால் விரக்தி அடைந்த சுந்தர்ராஜ் நேற்று மதுவில் வி‌ஷம் கலந்து குடித்தார். ஆபத்தான நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டனர்.

    பின்னர் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காமல் சுந்தர்ராஜ் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×