என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் நடந்த ஒரு விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

இதுதொடர்பாக சமூகநலத்துறை அமைச்சருடன் நாளை (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதைத்தொடர்ந்து தமிழக அங்கன்வாடிகளில் படிக்கும் 1 லட்சம் மாணவ-மாணவிகள் அடுத்த ஆண்டு அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் சேர்ப்பதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan
சிவகிரியை அடுத்த பழமங்கலம் அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 45). விவசாயி. இவருக்கும் கொடுமுடி கருத்தி பாளையத்தை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகள் ஜோதிமணி (35) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள எல்லப்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் ஜோதிமணி அலுவலக உதவியாளராக வேலை செய்து வந்தார்.
தமிழ்மணியும், ஜோதிமணியும் ஒரு ஆண்டு ஒன்றாக வாழ்ந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 பேரும் தனித்தனியாக வசித்தனர்.
இந்த நிலையில் ஜோதிமணியிடம் இருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் தமிழ்மணி வழக்கு தாக்கல் செய்தார். ஆனால் விவாகரத்துக்கு ஜோதிமணி சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினமும் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழ்மணிக்கு ஆதரவாக தமிழ்மணியின் தாய் பழனியம்மாள் (65) மற்றும் தமிழ்மணி நண்பரான சிவகிரி அருகே உள்ள கனக்கம்பாளையத்தை சேர்ந்த லோகநாதன் ஆகியோர் பேசினர்.
இதனால் தகராறு முற்றியது. ஆத்திரம் அடைந்த தமிழ்மணி, பழனியம்மாள், லோகநாதன் ஆகியோர் சேர்ந்து உருட்டு கட்டையால் ஜோதிமணியை தாக்கினர்.
இதில் சம்பவ இடத்திலேயே ஜோதிமணி பரிதாபமாக இறந்தார். அதன்பின்னர் தமிழ்மணி, பழனியம்மாள், லோகநாதன் ஆகிய 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து தமிழ் மணி, பழனியம்மாள், லோகநாதன் ஆகியோரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பழனியம்மாளை போலீசார் கைது செய்தனர். இதேபோல சிவகிரி அருகே விளக்கேத்தியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது தமிழ் மணி கைதானார்.
அவரது நண்பரான லோகநாதன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சிவகிரி:
சிவகிரியை அடுத்த பழமங்கலம் அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 45). விவசாயி. இவருக்கும் கொடுமுடி கருத்தி பாளையத்தை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகள் ஜோதிமணி (35) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள எல்லப்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் ஜோதிமணி அலுவலக உதவியாளராக வேலை செய்து வந்தார்.
தமிழ்மணியும், ஜோதிமணியும் ஒரு ஆண்டு ஒன்றாக வாழ்ந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 பேரும் தனித்தனியாக வசித்தனர்.
இந்த நிலையில் ஜோதிமணியிடம் இருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் தமிழ்மணி வழக்கு தாக்கல் செய்தார். ஆனால் விவாகரத்துக்கு ஜோதிமணி சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினமும் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழ்மணிக்கு ஆதரவாக தமிழ்மணியின் தாய் பழனியம்மாள் (65) மற்றும் தமிழ்மணி நண்பரான சிவகிரி அருகே உள்ள கனக்கம்பாளையத்தை சேர்ந்த லோகநாதன் ஆகியோர் பேசினர்.
இதனால் தகராறு முற்றியது. ஆத்திரம் அடைந்த தமிழ்மணி, பழனியம்மாள், லோகநாதன் ஆகியோர் சேர்ந்து உருட்டு கட்டையால் ஜோதிமணியை தாக்கினர்.
இதில் சம்பவ இடத்திலேயே ஜோதிமணி பரிதாபமாக இறந்தார். அதன்பின்னர் தமிழ்மணி, பழனியம்மாள், லோகநாதன்ஆகிய 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து தமிழ் மணி, பழனியம்மாள், லோகநாதன் ஆகியோரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பழனியம்மாளை போலீசார் கைது செய்தனர். இதேபோல சிவகிரி அருகே விளக்கேத்தியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது தமிழ் மணி கைதானார்.
அவரது நண்பரான லோகநாதன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், சென்னிமலை நல்லபாளி செல்வராஜ் மகன் கார்த்திக் (வயது 22). திருப்பூர் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
சென்னிமலை முருங்க தொழுவு பகுதியில் தாய் பராமரிப்பில் 17 வயது ஒரு பெண் வசித்து வருகிறார். இவர் ஈரோட்டில் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். அவருக்கு திருமண ஆசை காட்டி, வீட்டை விட்டு தன்னுடன் அழைத்து சென்றார். காரத்திக் .
அப்பெண்ணின் தாய் தனது, மகள் காணாமல் போனது குறித்து சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.
பெண்ணுக்கு 17 வயதே ஆவதால் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னிமலை பகுதியில் இருவரையும் பிடித்தனர்.
இருவரையும் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அப்பெண்ணுக்கு ஈரோடு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது பெற்றோரிடம் பெண் ஒப்படைக்கப்பட்டார்.
திருமண வயதை அடையாத பெண்ணை திருமண ஆசை வார்த்தை காட்டி கடத்தி சென்ற கார்த்திக்கை போக்சோ சட்டத்தின் கீழ் ஈரோடு மகளிர் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள பழமங்கலத்தை அடுத்துள்ளது கரட்டூர் கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 45). எல்.ஐ.சி.ஏஜண்டாக உள்ளார்.
இவரது மனைவி பெயர் ஜோதிமணி (35). திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் கிடையாது.
இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். வீட்டின் மற்றொரு பகுதியில் ஜோதிமணி தனியாக வாழ்ந்து வந்தாராம்.
பணி காரணமாக ஜோதிமணி பல்லடம் மற்றும் காங்கயத்தில் இருந்து வந்துள்ளார். விடுமுறை நாட்களில் மட்டும் சிவகிரி அருகே கரட்டூருக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜோதிமணி ஆயுத பூஜை விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார்.
அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் கணவர் தமிழ்மணி மனைவி ஜோதிமணியிடம் விவாகரத்து வாங்கி பிரிந்து விடுவோம் என்று கூறுவாராம். ஆனால் அதற்கு ஜோதிமணி விவாகரத்துக்கு எல்லாம் சம்மதிக்க மாட்டேன். உங்களிடம்தான் உங்கள் மனைவியாகத்தான் வாழ்வேன் என்று கூறி வந்துள்ளார்.
நேற்று மாலை 6.30 மணியளவில் இதேபோல் கணவன் மனைவி இடையே விவாகரத்து தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த தமிழ்மணி மனைவி ஜோதிமணியை அடித்து உதைத்தார். மேலும் வீட்டில் கிடந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டினார்.
இதில் ஜோதிமணியின் ஒரு கை துண்டானது. மேலும் தலை மற்றும் உடலில் வெட்டு விழுந்ததில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஜோதிமணி பரிதாபமாக இறந்தார்.
மனைவி இறந்ததும் கணவர் தமிழ்மணி அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாகுமார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.
தலைமறைவான தமிழ்மணியை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் வசித்து வருபவர்கள் சேகர், மோகனாம்பாள் தம்பதியர். இவர்களுக்கு 15 வயதில் மேகளா எனும் மகள் உள்ளார். கூலித்தொழில் செய்து வரும் சேகர், மோகனாம்பாள் தம்பதியருக்கு குறைந்த அளவு வருமானமே கிடைத்தாலும் அதை வைத்து மனநிறைவோடு வாழ்ந்து வந்தனர்.
ஆனால், 6 மாதங்களுக்கு முன்னர் மேகளாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து தந்தை சேகர் அவருக்கு தேவையான மருந்துகளை வாங்கி கொடுத்தார். ஆனால், அதன் பின்னரும் காய்ச்சலின் தாக்கம் குறையாமல் சிறுமி மிகவும் சோர்வடைந்து, நலிவுற்றதால் தந்தை சேகர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் . அங்கு சிறுமியின் ரத்தத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ரத்தப்புற்று நோய் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
மேலும், மேகளாவை குணப்படுத்த ரூ.6 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தரப்பில் கூறியுள்ளனர்.
மிகவும் அமைதியாக, அனைவரிடமும் அன்பாக பழகும் சுபாவமுடைய தங்களின் ஒரே மகளுக்கு இத்தகைய கொடிய நோய் தாக்கியிருப்பதை அவரது பெற்றோரால் நம்பவே முடியவில்லை.
‘சிறுவர்களுக்கும் இது போன்ற நோய் தாக்குமா என்பது பற்றி இதுவரை நான் அறிந்திருக்கவில்லை. என் மகளுக்கு இது போன்ற கொடிய நிலை ஏற்படும் என கனவிலும் நினைக்கவில்லை.
எனது ஒரே ஆசை மகளை காப்பாற்ற தேவையான முயற்சிகளை செய்து வந்தாலும் போதிய பணம் இல்லாததால் கையறு நிலையில் இருந்து தவித்து வருகிறேன்’ - சிறுமியின் தந்தை சேகர்
கூலித்தொழில் செய்து வருவதால், சில அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கே போதிய பணம் இல்லாமல் ஏற்கெனவே அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கியுள்ள நிலையில், மகளை காப்பற்ற போதிய நேரமும், பணமும் இல்லாததை நினைத்து அவரது பெற்றோர் மனமுடைந்து போயினர்.
கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறுமி மேகளாவுக்கு இதுவரை மூன்று கட்டங்களாக கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு கீமோதெரபி சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட வேண்டும்.
உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் இவர்களின் ஒரே மகளின் வாழ்வை நீங்கள் செய்யும் உதவி மூலம் காப்பாற்ற முடியும்.
மேலும் தொடர்புக்கு:-
எதுதர்மா (அறக்கட்டளை பதிவு எண்) 12 A: 1419(32)80-91 மற்றும் 80- G-1419(32)/CIT-1/CBE/08-09
எதுதர்மா,
ரத்னம் டெக்சோன்,
பொள்ளாச்சி மெயின் ரோடு,
ஈச்சனாரி,
கோயம்பத்தூர்,
தமிழ்நாடு- 641021
+919600111639
+919087766633
பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை ஏதுதர்மாவின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் மாலை மலர் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக்கொள்ளவும்.
ஈரோடு அடுத்த சித்தோட்டில் உள்ள மாவட்ட ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
இதில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த நமது ஜெயலலிதா சொன்னதை போல் இன்னும் 100 ஆண்டுகள் இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்கும். அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அரசு மீது அபாண்டமாக பழி கூறி தான் முதல்- அமைச்சர் ஆக வேண்டும் என மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். அவரால் இனி ஒரு போதும் தமிழகத்தில் முதல்வராக முடியாது.
இவ்வாறு அமைச்சர் கருப்பணன் கூறினார். #ADMK #TNMinister #KCKaruppannan #KamalHaasan
ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரியில் பகலும்- இரவும் என மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
பல நோயாளிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவர்களின் உறவினர்களும் அவர்களுக்கு துணையாக ஆஸ்பத்திரியின் வெளிப்புற வளாகத்தில் இருப்பார்கள். இவர்களில் பலர் ஆஸ்பத்திரியின் வளாகத்தில் இரவில் படுத்திருப்பார்கள்.
இதேபோல் நேற்று இரவும் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரி வளாகத்திற்கு வெளியே படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் ஆஸ்பத்திரி கட்டிடத்தில் மேல்தளத்தில் உள்ள சுவர் (சிலாப்) திடீரென இடிந்து கீழே விழுந்தது.
பயங்கர சத்தத்துடன் சிலாப் இடிந்து கீழே விழுந்ததில் அங்கு படுத்திருந்தவர்கள் மீது விழுந்தது.
இதில் ஈரோடு வெண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த சுதாகர் (வயது 28) பேக்கரி தொழிலாளி, பொள்ளாச்சி கூட்டூர் தென்சங்க பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் (45) எலக்ட்ரிஷியன், ஈரோடு மாவட்டம் மயிலம்பாடி அடுத்த பாலப்பாளையம் பழனியப்பன் (60) கூலி தொழிலாளி, ஈரோடு எஸ்.கே.எம். காலனியை சேர்ந்த ராமாயி (70), நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காட்டூரை சேர்ந்த விஜய்பாபு (56) தறிதொழிலாளி ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதில் விஜய்பாபுவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார். ஈரோட்டில் தறி பட்டறையில் வேலை பார்க்க வந்த இவர் இரவு நேரத்தில் ஊருக்கு போகாமல் ஆஸ்பத்திரி வளாகத்தில் படுத்து தூங்கினார். மேல் சிகிச்சைக் காக இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இடிபாட்டில் சிக்கி படுகாயம் அடைந்த மற்ற 4 பேரும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த சம்பவம் ஈரோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி புறக்காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் தலைமையில் போலீசார் சதுமுகையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நடுப்பாளையத்தில் இருந்து சதுமுகை நோக்கி ஒரு டிராக்டர் வந்தது. அதனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த டிராக்டரில் ஆற்று மணல் இருந்தது. அந்த மணல் ஆற்றில் இருந்து அனுமதியின்றி கடத்தி வரப்பட்டதாகும்.
அந்த மணலை கொண்டு வருவதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை. இதையடுத்து அந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
டிராக்டரை ஓட்டி வந்த சதுமுகை, நடுப்பாளையத்தை சேர்ந்த ரவியை (வயது 43) போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தினர். டிராக்டரில் 1 யூனிட் ஆற்று மணல் இருந்தது. அந்த மணலுடன் டிராக்டர் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு அடுத்த ஓடப்பாளையத்தை சேர்ந்தவர் காஜா முகைதீன் (வயது 24) கூலித் தொழிலாளி.
இரவு நேரத்தில் அந்தபகுதியில் உள்ள மதுகடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஜீவானந்தம் நகரை சேர்ந்த பெயிண்டர் ரவீந்திரன்(வயது 33) என்பவரும் வந்தார்.
அப்போது இருவருக்கும் இடையே திடீர் தகராறு ஏற்பட்டது. இருவரும் காரசாரமாக பேசிக் கொண்டனர்.
தகராறு முடிந்து காஜா முகைதீன் தனது வீட்டுக்கு போய்விட்டார் எனினும் அவரை தொடர்ந்து ரவீந்தரனும் சென்றார். மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் ரவீந்திரன், அவரை சரமாரியாக கத்தியால் குத்தினாராம். இதில் காஜா முகைதீனுக்கு கை, தொடை பகுதியில் கத்தி குத்துகள் விழுந்தது. ரத்தக் காயத்துடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி ரவீந்தரனை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் சமத்துவ மக்கள் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத் தில் கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார்.
முன்னதாக சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அரசியலில் யார் வேண்டு மானாலும் வரலாம். கட்சி ஆரம்பிக்கலாம். மேலும் இளைஞர்களும் மாணவர்களும் அரசியலுக்கு வர வேண்டும். அதற்காக விழிப்புணர்வு வர வேண்டும். மாணவர்கள் அரசியலுக்கு வந்தால் நாட்டின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
பெண்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வரும் சம்பவங்கள் மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. பெண்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தமிழகத்தில் இருக்கும்போது கவர்னர் அவரது வேலையை மட்டும் பார்க்க வேண்டும். ஆய்வு செய்வது அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வது தேவையற்றது.

மத்திய ஆட்சியில் ஜனாதிபதி ஆய்வு செய்தால் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளுமா? பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இதை கட்டுப்படுத்த மாநில மத்தி அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம். ஜனவரி மாதம் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளோம். கூட்டணி பற்றி பிறகுதான் முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு சரத்குமார் கூறினார். #sarathkumar #metoo
பெருந்துறை:
சேலம் மாவட்டம் மேச்சேரி காளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவபிரகாசம் (வயது 54). விவசாயி.
இவரது மகள் ஆஷா தேவி(22). பெருந்துறை அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.விடுமுறை விடப்பட்டால் அவர் தனது தந்தைக்கு தகவல் தெரிவிப்பார். இதையடுத்து தந்தை சிவபிரகாசம் பெருந்துறைக்கு வந்து ஆஷா தேவியை அழைத்து செல்வார்.
இந்த நிலையில் பாலி டெக்னிக்குக்கு தற்போது விடுமுறை விடப்பட்டது. ஆனால் சிவபிரசாசத்திடம் ஆஷாதேவி பேசவில்லை. எனவே சிவபிரகாசம் கடந்த 11-ந் தேதி விடுதிக்கு தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது ஆஷாதேவி 11-ந் தேதி காலையிலேயே விடுதியில் இருந்து சென்று விட்ட தகவல் தெரியவந்தது. ஆஷாதேவி ஊருக்கு வராததால் அவரது தந்தை சிவபிரகாசம் சந்தேகம் அடைந்தார்.
எனவே அவர் பெருந்துறைக்கு வந்தார். அங்கு ஆஷாதேவியின் தோழிகளிடம் விசாரித்தார். ஆனால் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. எனவே அவர் மாயமானது தெரிய வந்தது.
இது தொடர்பாக சிவபிரகாசம் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி வண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் மாயமான ஆஷாதேவி கல்லூரி மாணவர் ஒருவருக்கு செல்போனில் மேசேஜ் கொடுத்துள்ளார். அதில் ‘‘நான் மணி என்பவருடன் போகிறேன்” என்று கூறப்பட்டு இருந்தது.
எனவே மணி என்பவர் யார்? அவருக்கும் ஆஷாதேவிக்கும் என்ன தொடர்பு? அவருடன்தான் ஆஷாதேவி சென்றுள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






