என் மலர்
ஈரோடு
ஈரோடு:
புஞ்சை புளியம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சொலவனூர் மேடு அருகில் உள்ள ஒரு முள்ளுக்காட்டில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த பெண் சொலவனூர் பகுதியை சேர்ந்த ராதா (வயது 45) என்பதும், கஞ்சா விற்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராதாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிராம் எடையுள்ள 100 பாக்கெட் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னிமலை அடுத்துள்ள எக்கட்டாம் பாளைம், கோனாரி காட்டில் தனியாக வீட்டில் இருந்த கணவன் துரைசாமி (65), மனைவி துளசிமணி (60) ஆகியோரை மர்ம நபர்கள் கம்பியால் அடித்தும், அரிவாளால் வெட்டியும் மிக கொடுரமாக கொலை செய்துள்ளனர்.
இதில் கொலையாளி யார்? என அடையாளம் காண்பதில் போலீசார் திணறி வருகின்றனர். சொத்து தகராறில் உறவினர்கள் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. இதில் துரைசாமி மகன் வெங்கடாச்சலம், மற்றும் மூத்த மருமகன் எத்திராஜ், கடைசி மருமகன் ஜோதீஸ்வரமூர்த்தி ஆகியோ ரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் போலீசாருக்கு கொலையாளி பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்காக பெருந்துறை டி.எஸ்.பி. ராஜகுமார் தலைமை யில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளனர். தனிப்படை போலீசார் விசாரணையினை தீவிர படுத்தி உள்ளனர். #tamilnews
ஈரோடு:
ஈரோடு, கருங்கல் பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கருங்கல் பாளையம், சித்தன் நகர், 4-வது வீதி அருகே வாய்க்கால் கரையோரம் அருகே சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
போலீசார் அந்த கும்பலை பிடித்து விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த வடிவேல், ராஜேஸ்குமார், வடிவேல், மணிகண்டன், மணி, குமார் என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் பணமும், சீட்டு கட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.
கோபி:
கோபி கரட்டூரில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா புதிய நுழைவு வாயில் திறப்பு விழா நடந்தது.
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது.-
தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிளஸ்-2 முடித்தவுடன் வேலை வாய்ப்பை உருவாக்கும் கல்வியாக மாற்றப்படும் எத்தனை கஷ்டங்கள், நிதி நெருக்கடி வந்தாலும் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் அரசாக இந்த அரசு உள்ளது.
தமிழகம் மிகவும் அமைதிப்பூங்காவாக உள்ளது.போராட்டத்தை அறிவித்தவர்களே வாபஸ் பெற்றனர். இதற்கு காரணமே மக்கள் சக்தி தான். அதை யாரும் வெல்ல முடியாது.
கோபி அருகே உள்ள நம்பியூர் தனி தாலுகாவாக அமைக்கப்பட்டு அரசு கல்லூரி உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடந்து வருகிறது.
ரூ.385 கோடி மதிப்பீட்டில் ஈரோடு முதல் சத்தியமங்கலம் வரையிலான 4 வழிசாலை பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
பாராளுமன்ற தேர்தல் வருகிறது. புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.கூட்டணி மகாத்தான வெற்றி பெறும். ஈரோடு மாவட்டம் மட்டுமல்ல கொங்கு மண்டலமே அ.தி.மு.க.வின் எஃகு கோட்டை. அதை யாராலும் உடைக்க முடியாது.
ஏழைகளின் அரசாகவும் கையேந்தாமல் கொடுக்கும் அரசாகவும் இந்த அரசு திகழ்கிறது.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
முன்னாதாக காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. #Sengottaiyan #ADMK
ஈரோடு:
ஈரோடு பெரியார் வீதியை சேர்ந்தவர் பாலசுந்தரம் (வயது 46). இவரது மனைவி சத்யா. ஈரோட்டில் உள்ள தனியார் விடுதியில் மேலாளராக பாலசுந்தரம் பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி சத்யா நசியனூர் வேளாண்மை துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். பாலசுந்தரம்- சத்யா தம்பதிகளுக்கு குழந்தையில்லை. இதனால் பாலசுந்தரம் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று சத்யா வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் பாலசுந்தரம் மட்டும் இருந்துள்ளார். பின்னர் தற்கொலை செய்ய முடிவெடுத்த பாலசுந்தரம் வீட்டில் தூக்குபோட்டு கொண்டார்.
சத்யாவின் உறவினர் தினேஷ் என்பவர் சத்யா வீட்டுக்கு வந்தார். அவர் கதவை தட்டினார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்.
அப்போது பாலசுந்தரம் தூக்குமாட்டிக் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பாலசுந்தரத்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பாலசுந்தரத்தை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுந்தப்பாடியில் ஈரோடு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழா- அ.தி.மு.க.வின் 2 ஆண்டு சாதனை விளக்கம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் பணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கட்சியில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் முக்கியம். பணியாற்றும் தொண்டர்களுக்கு விரைவில் எதிர் காலம் காத்திருக்கிறது. தொண்டர்களில் நலனில் அக்கறை கொண்ட முதல்வர் பல திட்டங்கள் வைத்துள்ளார்.
விரைவில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. அது முடிந்த பின்பு கட்சி தொண்டர்களில் குறைகளை அவர் தீர்ப்பார். பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தர்மயுத்தத்தில் எப்படி ஸ்ரீகிருஷ்ணரிடம் ஸ்ரீசக்கரம் இருந்ததோ அதே போல் முதல்வர் மற்றும் துணை முதல்வரும் தேர்தல் வியூகம் அமைத்துள்ளார்கள்.
40 தொகுதியிலும் ஜெயிப்பது நாம் தான். ஸ்டாலின் எப்போதும் தளபதி தான் ஒருபோதும் முதல்வர் ஆக முடியாது. அந்த ராசியே ஸ்டாலினுக்கு இல்லை. கட்சி தொண்டர்கள் அயராத உழைப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். காழ்ப்புணர்ச்சியை மறந்து உழைப்போம் வெற்றி பெறுவோம் என்று கூறினார். #Sengottaiyan #MKStalin
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அக்கரை கொடிவேரி பகுதியில் அரசு நலத்திட்ட பணிகள் தொடக்க விழா நடந்தது.
இதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு திட்டபணிகளை தொடங்கி வைத்து பேசினார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு சார்பில் தினமும் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் யாவும் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டு உள்ளது.

இந்தியாவிலேயே பள்ளி கல்வி துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. கல்வித்துறைக்கு பல கோடி ஒதுக்கப்பட்டு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நிருபர்கள் “தமிழ்நாட்டில் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறதே?’ என்று கேட்டதற்கு அமைச்சர் செங்கோட்டையன் கூறும் போது, “மத்திய அரசு முடிவு செய்திருக்கலாம். ஆனால் தமிழக அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. எனினும் துறை ரீதியாக தயார் நிலையில் உள்ளோம். எனினும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடி தான் அது பற்றி முடிவு எடுக்க உள்ளோம். மக்கள் யாரும் இது பற்றி அச்சப்பட தேவையில்லை” என்று கூறினார். #PublicExam #Sengottaiyan
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்கள் சார்பில் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நீடித்து வருகிறது. இன்று அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் 3-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்.
2-வது ஊதிய மாற்றக் குழுவின் விடுபட்ட பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். பிஎஸ்என்எல் மொபைல் டவர்களை பராமரிக்க அவுட் சோர்சிங் கைவிட வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவையை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து 1250 ஊழியர்கள் அதிகாரிகள் 500 ஒப்பந்த ஊழியர்கள் என மொத்தம் ஆயிரத்து 750 ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதனால் ஈரோடு காந்தி ஜி ரோட்டில் உள்ள பொது மேலாளர் அலுவலக ஊழியர்களிடம் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் கட்டணம் பணி, புதிய தொலைபேசி இணைப்பு பணி பழுது பார்க்கும் பணிகள் நடைபெறவில்லை.
இன்று 3-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல்.ஊழியர்கள் அதிகாரிகள் சம்மேளனம் சார்பில் காந்தி ஜி ரோட்டில் உள்ள பொது மேலாளர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே மலையப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அதன் ஏதிரே உள்ள ரோட்டில் செல்லப்பன் மற்றும் அவரது 7 வயது குழந்தை காரில் சென்றனர்.
அப்போது எதிர்பாரத விதமாக கார் விபத்தில் சிக்கியது. இதில் இருவரும் காயம் அடைந்து அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்றனர்.
அப்போது அங்கு மருந்தாளுனராக பணிபுரிபவர் தீனதயாளன் (வயது 27). மருத்துவர் இல்லை மீட்டிங் சம்மந்தமாக நம்பியூர் சென்று உள்ளார் என கூறினார். நான் முதலுதவி செய்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அனுப்பி வைக்கின்றேன் என கூறினார்.
இதற்கு செல்லப்பன் தீனதயாளனை தாகத வார்த்தையால் பேசினாராம். மேலும் கையால் தாக்கி, கல்லை வீசி கொலை மிரட்டலும் விடுத்தாராம்.
மேலும் அவர் கல் வீசியதில் மருத்துவமனையில் சுவரில் மாட்டி இருந்த கண்ணாடி உடைந்து விட்டதாக கூறப்படுகிறது.
கொலை மிரட்டல் விடுத்த செல்லப்பன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தீனதயாளன் கொடுத்த புகாரின் பேரில் வரப்பாளையம் போலிஸ் சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஈரோடு, நியூ டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். ஜவுளி வியாபாரி. இவரது மகள் நந்தினி(வயது21). ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு ஆங்கிலம் படித்து வந்தார்.
நந்தினி காலையில் கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு வருவது வழக்கம். இதே போன்று நந்தினி கடந்த 18-ந் தேதி(திங்கட்கிழமை) காலை வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.
ஆனால் மாலையில் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் நந்தினியை பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து நந்தினியின் தந்தை தங்கராஜ் இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் மாயமான தனது மகளை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சென்னிமலை அருகே உள்ளது கோனார்காடு. இந்த ஊரை சேர்ந்தவர் துரைசாமி (வயது 65). இவரது மனைவி துளசிமணி (60).
இந்த வயதான தம்பதியினர் வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டுக்குள் மர்மகும்பல் திமு...திமு...வென புகுந்தது.
உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் கணவன்- மனைவி இருவரையும் அரிவாளால் வெட்டினர். மேலும் இரும்பு கம்பிகளாலும் தாக்கினர்.
இதில் கணவனும் மனைவியும் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
கொலையாளிகள் என்ன காரணத்துக்காக இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டனர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
சம்பவ இடத்துக்கு சென்னிமலை போலீசார் விரைந்து உள்ளனர்.
பெருந்துறை அருகே உள்ளது காஞ்சிகோவில். இங்குள்ள நான்கு ரோடு பகுதியில் ஒரு தேசிய வங்கியின் ஏ.டி.எம். உள்ளது.
24 மணி நேரம் செயல்படும் இந்த ஏ.டி.எம்.மில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பணம் எடுத்து செல்வார்கள். மேலும் இந்த ஏ.டி.எம். அருகே கடைகளும், வீடுகளும் உள்ளன.
அதிகாலையில் இந்த ஏ.டி.எம்.மில் நுழைந்த மர்ம ஆசாமி ஒருவன் சுற்று முற்றும் பார்த்தான். பிறகு அவன் கொண்டு வந்த இரும்பு கம்பியால் பணத்தை கொள்ளையடிக்க ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தான்.
இந்த சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் உள்ள பொதுமக்கள் எழுந்து வெளியே வந்தனர். அப்போது ஏ.டி.எம்.மில் இருந்து சத்தம் வரவே அங்கு சென்றனர்.
பொதுமக்களை கண்டதும் மர்ம ஆசாமி அங்கிருந்து தப்பி ஓட முயன்றான். ஆனால் அவனை பொதுமக்கள் விரட்டி மடக்கி பிடித்தனர்.
பிறகு அவனுக்கு தர்ம அடி கொடுத்து காஞ்சிகோவில் போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
அவனை கைது செய்த போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விசாரணையில் அவன் பெயர் அரவிந்த்சாமி (வயது 27) என்றும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மான்குட்டை பாளையத்தை சேர்ந்தவன் என்றும் தெரிய வந்தது.
போலீசார் அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews






