search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BSNL Employee protest"

    பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்கள் சார்பில் அகில இந்திய அளவில் தொடங்கிய வேலை நிறுத்தம் இன்று 3-வது நாளாக நீடித்து வருகிறது.
    ஈரோடு:

    பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்கள் சார்பில் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நீடித்து வருகிறது. இன்று அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் 3-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்.

    2-வது ஊதிய மாற்றக் குழுவின் விடுபட்ட பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். பிஎஸ்என்எல் மொபைல் டவர்களை பராமரிக்க அவுட் சோர்சிங் கைவிட வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவையை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.

    ஈரோடு மாவட்டத்தில் இருந்து 1250 ஊழியர்கள் அதிகாரிகள் 500 ஒப்பந்த ஊழியர்கள் என மொத்தம் ஆயிரத்து 750 ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இதனால் ஈரோடு காந்தி ஜி ரோட்டில் உள்ள பொது மேலாளர் அலுவலக ஊழியர்களிடம் வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் கட்டணம் பணி, புதிய தொலைபேசி இணைப்பு பணி பழுது பார்க்கும் பணிகள் நடைபெறவில்லை.

    இன்று 3-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல்.ஊழியர்கள் அதிகாரிகள் சம்மேளனம் சார்பில் காந்தி ஜி ரோட்டில் உள்ள பொது மேலாளர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×