என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Try to Robbery"

    பெருந்துறை அருகே ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ளது காஞ்சிகோவில். இங்குள்ள நான்கு ரோடு பகுதியில் ஒரு தேசிய வங்கியின் ஏ.டி.எம். உள்ளது.

    24 மணி நேரம் செயல்படும் இந்த ஏ.டி.எம்.மில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பணம் எடுத்து செல்வார்கள். மேலும் இந்த ஏ.டி.எம். அருகே கடைகளும், வீடுகளும் உள்ளன.

    அதிகாலையில் இந்த ஏ.டி.எம்.மில் நுழைந்த மர்ம ஆசாமி ஒருவன் சுற்று முற்றும் பார்த்தான். பிறகு அவன் கொண்டு வந்த இரும்பு கம்பியால் பணத்தை கொள்ளையடிக்க ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தான்.

    இந்த சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் உள்ள பொதுமக்கள் எழுந்து வெளியே வந்தனர். அப்போது ஏ.டி.எம்.மில் இருந்து சத்தம் வரவே அங்கு சென்றனர்.

    பொதுமக்களை கண்டதும் மர்ம ஆசாமி அங்கிருந்து தப்பி ஓட முயன்றான். ஆனால் அவனை பொதுமக்கள் விரட்டி மடக்கி பிடித்தனர்.

    பிறகு அவனுக்கு தர்ம அடி கொடுத்து காஞ்சிகோவில் போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

    அவனை கைது செய்த போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விசாரணையில் அவன் பெயர் அரவிந்த்சாமி (வயது 27) என்றும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மான்குட்டை பாளையத்தை சேர்ந்தவன் என்றும் தெரிய வந்தது.

    போலீசார் அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    செங்கத்தில் டாஸ்மாக் ஊழியர்களை சுட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பெருமுட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடையில் மேற்பார்வையாளர் சண்முகம் (வயது 40) மற்றும் விற்பனையாளர் லட்சுமணன் (42). இருவரும் வேலை செய்து வருகின்றனர்.

    நேற்று இரவு வசூலான 3 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு கடையை பூட்டினர். அப்போது பைக்கில் முக மூடி அணிந்தபடி 2 பேர் கடை அருகே வந்தனர். அவர்கள் திடீரென கைதுப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டு பணத்தை கேட்டு மிரட்டினர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகம் 3 லட்ச ரூபாய் பணத்துடன் தப்பி ஓடினார். அப்போது மர்மநபர் துப்பாக்கியால் சண்முகத்தின் காலில் சுட்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பணத்துடன் அங்கிருந்து உயிர் தப்பினார்.

    இதையடுத்து அந்த நபர்கள் விற்பனையாளர் லட்சுமணனை மடக்கி பிடித்து கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சராமாரியாக தாக்கி மூடிய கடையை திறக்குமாறு மிரட்டினர்.

    கடைக்குள் சென்று பார்த்த போது கடையில் பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் லட்சுமணனை விட்டுவிட்டு மர்ம நபர்கள் பைக்கில் தப்பி சென்றுவிட்டனர்.

    குண்டு காயத்துடன் தப்பிய சண்முகம் செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரையும் மீட்டு செங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி விசாரணை நடத்தினார். பைக்கில் முக மூடி அணிந்து துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களா? என்று விசாரித்தனர். துப்பாக்கியால் சுட்ட இரண்டு தோட்டாக்களை சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றி தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    ×