என் மலர்
செய்திகள்

சென்னிமலை அருகே இரட்டை கொலை - கொலையாளிகள் பற்றி துப்பு கிடைக்கவில்லை
சென்னிமலை அருகே நடந்த இரட்டை கொலை சம்பவத்தில் கொலையாளியை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள எக்கட்டாம் பாளைம், கோனாரி காட்டில் தனியாக வீட்டில் இருந்த கணவன் துரைசாமி (65), மனைவி துளசிமணி (60) ஆகியோரை மர்ம நபர்கள் கம்பியால் அடித்தும், அரிவாளால் வெட்டியும் மிக கொடுரமாக கொலை செய்துள்ளனர்.
இதில் கொலையாளி யார்? என அடையாளம் காண்பதில் போலீசார் திணறி வருகின்றனர். சொத்து தகராறில் உறவினர்கள் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. இதில் துரைசாமி மகன் வெங்கடாச்சலம், மற்றும் மூத்த மருமகன் எத்திராஜ், கடைசி மருமகன் ஜோதீஸ்வரமூர்த்தி ஆகியோ ரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் போலீசாருக்கு கொலையாளி பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்காக பெருந்துறை டி.எஸ்.பி. ராஜகுமார் தலைமை யில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளனர். தனிப்படை போலீசார் விசாரணையினை தீவிர படுத்தி உள்ளனர். #tamilnews

Next Story