என் மலர்

  செய்திகள்

  ஈரோட்டில் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்- தந்தை போலீசில் புகார்
  X

  ஈரோட்டில் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்- தந்தை போலீசில் புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈரோட்டில் கல்லூரிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  ஈரோடு:

  ஈரோடு, நியூ டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். ஜவுளி வியாபாரி. இவரது மகள் நந்தினி(வயது21). ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு ஆங்கிலம் படித்து வந்தார்.

  நந்தினி காலையில் கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு வருவது வழக்கம். இதே போன்று நந்தினி கடந்த 18-ந் தேதி(திங்கட்கிழமை) காலை வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.

  ஆனால் மாலையில் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் நந்தினியை பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

  இதனையடுத்து நந்தினியின் தந்தை தங்கராஜ் இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் மாயமான தனது மகளை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
  Next Story
  ×