என் மலர்tooltip icon

    ஈரோடு

    கவுந்தப்பாடியில் அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன அதிகாரி மனைவி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி ஈரோடு மெயின்ரோட்டில் செட்டிபாளையம் அருகே அரசு பஸ்சும் கார்ரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மூதாட்டி பலியானார். இருவர் படுகாயம் அடைந்தனர்.

    கோபி சீதாலட்சுமி புரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தனியார் நிறுவன அதிகாரி சிங்காரம் (86) அவரது மனைவி திரிபுரசுந்தரி (80) இவர்கள் இருவரும் ஈரோட்டுக்கு வங்கி வேலையாக காரில் கோபியில் இருந்து புறப்பட்டனர்.

    காரை கோபிநாத் (48) என்பர் ஓட்டினார். டிரைவர் சீட் அருகே சிங்காரம் அமர்ந்து வந்தார். ஈரோடு சென்று வங்கி வேலைகளை முடித்து விட்டு கோபி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.

    கார் கவுந்தப்பாடியை நோக்கி வந்து கொண்டிருந்தபோது டிரைவர் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி சென்ற போது எதிரில் வந்த அரசு பஸ் மீது கார் நேருக்கு நேர் மோதி அப்பளம் போல் நொறுங்கியது.

    காரில் பயணம் செய்த திரிபுரசுந்தரி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த டிரைவர் கோபிநாத், சிங்காரம் ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த விபத்து குறித்து கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    கடத்தூர்:

    ரோட்டரி சங்கம் சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து எடுத்துக்கூற பெண்கள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோபி பஸ் நிலையத்தில் இருந்து சத்தியமங்கலம் ரோட்டில் முத்து மகால் வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு போட்டி நடந்தது. இதில் கல்லூரி மாணவிகள் மற்றும் 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஓடினர்.

    அரசு பள்ளி மாணவர்கள்

    இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எதிர்காலத்தில் பெண்களுக்கு சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மட்டும் தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நடிகர் ரஜினிகாந்த் பேசி வருவதை யாரும் பெரிதாக எடுத்துக்ககொள்ள வேண்டாம் எனவும் அவர் பேச்சு ஒருபோதும் எடுபடபோவது இல்லை எனவும் அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் நடந்தது.

    இதில் தமிழக சுற்றுசுழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    சாயக்கழிவு நீர் பிரச்சினை என்பதை இல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    திருப்பூரில் உள்ளது போல் ஈரோட்டில் 5 இடங்களில் சுத்திகரிப்பு நிலையமும் பவானியில் 2 சுத்திகரிப்பு நிலையம் என 7 நிலையங்கள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.1200 கோடி மதிப்பில் திட்டம் தயார் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த திட்டத்துக்காக மத்திய அரசு 50 சதவீதம் மானியம் வழங்குகிறது. 25 சதவீத மானியம் மாநில அரசால் வழங்கப்படும். மீதி 25 சதவீதம் சாயப்பட்டறை உரிமையாளர்கள் கொடுக்க வேண்டும்.

    சாயக்கழிவு எங்கும் ஓடவில்லை. தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுதான் வருகிறது.

    மேலும் சாயக்கழிவு பிரச்சினைக்கு விரைவில் ஒரு நிரந்தர முடிவு எட்டப்படும்.

    நடிகர் ரஜினிகாந்த் என்னஎன்னவெல்லாம் பேசி வருகிறார். அதையாரும் பெரிதாக எடுத்துக்ககொள்ள வேண்டாம். அவர் பேச்சு ஒருபோதும் எடுபடபோவது இல்லை.

    இவ்வாறு அமைச்சர் கருப்பணன் கூறினார்.
    ஊர் முழுக்க சாயக்கழிவு ஓடும் போது அமைச்சர் கருப்பணன் குத்தாட்டம் போடலாமா? அவரை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது என்று பெருந்துறை எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் கே.சி.கருப்பணன். ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி எம்.எல்.ஏ. ஆவார்.

    பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தோப்பு வெங்கடாச்சலம். இதற்கு முன் சுற்று சூழல் துறை அமைச்சராகவும் பணி புரிந்து வந்தார் தோப்பு வெங்கடாச்சலம்.

    முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்துக்கும் தற்போதைய அமைச்சர் கே.சி.கருப்பணனுக்கும் நீண்ட நாட்களாக வேபனிப்போர் இருந்து வருகிறது. தற்போது இது பூதாகரமாக வெடித்துள்ளது.

    நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கூறியதாவது-

    எனது தொகுதி மக்களுக்காக நான் அமைச்சராக இருந்த போதும் இப்போதும் பல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி உள்ளேன். தொடர்ந்து செயல்படுத்தி வருகிறேன். ஆனால் இந்த திட்டத்தையெல்லாம் நிறைவேற்ற விடாமல் அமைச்சரே தடுத்து வருகிறார்.

    பெருந்துறை தொகுதியில் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த தொடங்கினால் பெருந்துறை தொகுதி மக்களுக்கு ஆண் டாண்டுக்கு குடிநீர் பஞ்சம் இருக்காது.

    ஆனால் இந்த திட்டத்தை அமைச்சர் கருப்பணன் தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த ஒரு திட்டத்தையே ஒரு அமைச்சர் தடுக்க முயலவது வேதனையாக வேடிக்கையாக உள்ளது.

    உள்ளாட்சி தேர்தலில் பெருந்துறை ஒன்றியத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராகவே செயல்பட்டார். சுயேட்சைகளுக்கு ஆதரவாக செயல்பட்டார். ஊர் முழுக்க சாய கழிவு நீர் ஓடி கொண்டு இருக்கும் நிலையில் அதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் குத்து பாடலுக்கு இவர் ஆட்டம் போடுவது வினோதம்.

    இப்படி கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக தொடர்ந்து ஈடுபட்டு வரும் அவரை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது. அவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு தோப்பு வெங் காடாச்சலம் எம்.எல்.ஏ. கூறினார். 

    ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் இந்த ஆண்டு 3500 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு வயலில் நெல் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.
    சூரம்பட்டி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை அடைந்துள்ளது.

    மேலும் மாவட்டத்திலுள்ள வரட்டுப்பள்ளம் அணை, குண்டேரிப்பள்ளம் அணை, ஏரி, குளங்கள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் போதிய அளவில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

    இதை தொடர்ந்து விவசாயிகள் தங்களது நிலங்களில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் போன்றவற்றை பயிரிட்டு வருகிறார்கள்.

    ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் இந்த ஆண்டு 3500 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு வயலில் நெல் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.

    பா.ஜனதா கட்சி என்ஜின் போன்றது. மீதி கட்சிகள் ரெயில் பெட்டிகள். என்ஜின் இல்லாமல் யாரும் பெட்டியில் ஏறி பயணம் செய்ய முடியாது என்று நடிகர் ராதாரவி கூறினார்.
    ஈரோடு:

    காங்கயம் அருகே உள்ள குண்டடத்தில் பாரதிய ஜனதா கூட்டம் நடந்தது. கட்சியின் மாவட்ட தலைவர் பொன்.ருத்ரகுமார் தலைமை தாங்கினார்.

    இதில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    வரும் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா காலடி எடுத்து வைக்கும். குடியுரிமை சட்ட திருத்தத்தை பற்றி யாரும் பயப்பட வேண்டாம். இது பற்றி தவறான நோக்கத்திலும், அரசியல் காழ்ப்புணர்ச்சியிலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

    இந்த சட்டம் காங்கிரஸ் கட்சியால் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் முஸ்லீம்களுக்கு எதிரானது அல்ல. நான் முஸ்லீம் கல்லூரியில் படித்தவன். வங்கதேசத்தில் இருந்து ஊடுருவி வந்தவர்களைதான் இந்த சட்டம் வெளியேற்றும். எனவே நம் நாட்டினர் அச்சப்பட தேவையில்லை.

    பாரதிய ஜனதா கட்சி என்ஜின் போன்றது. மீதி கட்சிகள் ரெயில் பெட்டிகள் ஆகும். என்ஜின் இல்லாமல் யாரும் பெட்டியில் ஏறி பயணம் செய்ய முடியாது.

    இந்தியாவில் இன்னும் 15 ஆண்டுகளுக்கு மோடி தான் பிரதமர் இன்று காஷ்மீரிலும் மக்கள் நிம்மதியாக உறங்குகிறார்கள். இதற்கு காரணம் குடியுரிமை திருத்த சட்டம் தான்.

    இப்படி ஒரு நல்ல சட்டம் தான் முதலில் மக்கள் சிரமப்படுவதாக தெரியும். பிறகு மக்களே பாராட்டுவார்கள்.

    இவ்வாறு ராதாரவி கூறினார்.

    சித்தோடு அருகே கணவன் மனைவிக்கு ஏற்பட்ட குடும்பத்தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    சித்தோடு:

    சித்தோடு அடுத்த செல்லப்பம்பாளையம் கருப்புரான் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தமிழரசன் .கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரியா (வயது 30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை மீண்டும் தமிழரசனுக்கும் பிரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த பிரியா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சித்தோடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    பவானி அருகே வாய்க்காலில் குறைந்த அளவு தண்ணீரில் டைவ் அடித்த வாலிபர் கழுத்து முறிந்து பலியானார்.
    பவானி:

    பவானி அடுத்து அந்தியூர் செம்புளிச்சாம்பளையம் பகுதியைச் சேர்ந்த சொக்க லிங்கம் மகன் தனபால் (வயது 31). இவர் சம்பவத்தன்று கல்பாவி அருகே உள்ள வாய்க்காலுக்கு குளிக்கச் சென்றார்.

    தண்ணீர் குறைந்த அளவே இருந்தது பின்னர் தனபால் வாய்க்காலில் டைவ் அடித்தார். இதில் அவருக்கு கழுத்தில் பலத்த அடிபட்டு முறிவு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரைமீட்டு உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனில்லாமல் தனபால் பரிதாபமாக இறந்தார்.

    இவருக்கு சித்ரா என்ற மனைவி திவ்யதர்ஷினி என்ற மகளும் ஹரிகரன் என்ற மகனும் உள்ளனர்.

    இதுகுறித்து பவானி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    சித்தோடு அருகே வேன் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சித்தோடு:

    பவானி, சித்தோட்டில் இருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அவ்வழியாக வந்த வேன் ஒன்று எதிர்பாராத வகையில் முதியவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த முதியவர் இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த சித்தோடு போலீசார் சம்பவ இடம் சென்று இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    சிவப்பு நிற சட்டையும், லுங்கியும் அணிந்திருந்த அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என சித்தோடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கவுந்தப்பாடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் கம்பெனி மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கவுந்தபாடி:

    கவுந்தப்பாடி பழனிச்சாமி வீதியைச் சேர்ந்தவர் ருக்விதின். தராசு வியாபாரி. இவரது மகன் நிஷாந்த் (வயது29). இவரது மனைவி மசுதாபானு. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. நிஷாந்த் தனியார் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு நிஷாந்தும் அவரது நண்பருமான கவுந்தபாடி ஜே.ஜே.நகரைச் சேர்ந்த கீர்த்திவாசன் (வயது 26). வேலை வி‌ஷயமாக மோட்டார் சைக்கிளில் பெருந்துறைக்கு சென்றுவிட்டு பின்னர் மீண்டும் இரவு 11.30 மணி அளவில் கவுந்தப்பாடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். வண்டியை நிஷாந்த் ஓட்ட கீர்த்திவாசன் பின்னால் உட்கார்ந்து வந்து கொண்டிருந்தார்.

    வண்டி கவுந்தப்பாடி இ.ஐ.டி. பிரிவு அருகே வந்தபோது மோட்டார்சைக்கிள் திடீரென நிலைதடுமாறி அந்த பகுதியில் இருந்த ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயமடைந்த நிஷாந்த் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் கீர்த்திவாசனுக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் கவுந்தபாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த கீர்த்தி வாசனை மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    நிஷாந்த் உடல் பிரேத பரிசோதனைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கருணை அடிப்படையில் எங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என குள்ளமான தம்பதி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் சரண்யா (வயது27). ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (29). இருவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் குள்ளமான தம்பதிகள்.

    இந்நிலையில் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு சரண்யா தனது கணவர் கார்த்திகேயன் உடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

    நான் பி.ஏ., பி.எட்., முடித்துள்ள பட்டதாரி. எனது கணவர் பிளஸ்-2 வரை படித்து முடித்துள்ளார். அவர் ஜவுளி தொழில் செய்து வருகிறார் அதில் போதிய வருமானம் இல்லை வறுமையான சூழ்நிலை நிலவி வருவதால் எங்கள் இருவருக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    நடிகர் ரஜினிகாந்த் பிரச்சனைக்கு உரிய கருத்துகளை தேடி தேடி பேசி வருவதாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் உள்ள காலிங்கராயன் சிலைக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் ஈஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் நீர் மேலாண்மையை சிறப்பாக செய்பவர்களுக்கு என்று விருதினை தமிழக அரசு உருவாக்கி நீர் மேலாண்மையை மேற்ககொள்பவர்களுக்கு வழங்க வேண்டும். இது போன்று விருதினை வழங்குவதன் மூலமாக தண்ணீரை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் விதைக்கப்படும்.

    காலிங்கராயன் கால்வாயில் மாசு அடைந்து உள்ளது என்று கடந்த 15 அண்டுகளுக்கு மேலாக எங்கள் கட்சி சார்பில் பேசி வருவதாகவும் தற்போது நடிகர் கார்த்தி காலிங்கராயன் கால்வாயை இளைஞர்கள் தூய்மைபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். காலிங்கராயன் கால்வாயை தூர்வார முன் உதாரணமாக 2 ஆயிரம் இளைஞர்களை திரட்ட நாங்கள் தயாராக உள்ளோம். நடிகர் கார்த்தி வர தயாரா?

    நடிகர் ரஜினிகாந்த் பிரச்சனைக்கு உரிய கருத்துகளை தேடி தேடி பேசி வருகிறார். துக்ளக் விழாவில் சென்று முரசொலி பற்றி நடிகர் ரஜினி பேசி இருக்க கூடாது . விளம்பரத்துக்காக பிரச்சனைக்குரிய கருத்துகளை அவர் பேசி வருகிறார். திமுக -காங்கிரஸ் கூட்டணியில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை.

    ரஜினிகாந்த்

    தலைவர்கள் சில கருத்துக்களை பேசுவதும் அந்த கருத்துக்கள் நாளடைவில் மறந்து போவதும் வழங்கமான ஒன்று தான் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×