என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டார்.
விழாவில் 4 அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 603 மாணவ- மாணவிகளுக்கு அமைச்சர் கே.சி.கருப்பணன் இலவச மடிகணினிகளை வழங்கி பேசினார்.
அவர் கூறும்போது, மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வாழ்க்கையில் உயர வேண்டும் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் கருப்பணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “மத்திய அரசு மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த திட்டத்துக்கு மாநில அரசிடம் மத்திய அரசு அனுமதி கேட்கவில்லை. அனுமதி கேட்காவிட்டாலும் கூட சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடமாவது அனுமதி பெற்றிருக்க வேண்டும். அந்த அனுமதியும் பெறவில்லை.
ஈரோடு, பவானியில் பொதுசுத்திகரிப்பு மையம் கொண்டு வரப்படுகிறது. 500 டி.டி.எஸ்.சுக்கு மேல் இருக்கும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யத்தான் இந்த பொதுசுத்திகரிப்பு மையம் அமைக்கப்படுகிறது” என்று கூறினார்.
ஈரோடு:
ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் கட்டாயம் அரசியலுக்கு வருவார். சட்டசபை தேர்தல் வரும்போது அவர் அரசியலில் இருப்பார். ரஜினிகாந்தை ஏதாவது குறைகூறிக் அச்சுறுத்தி, மிரட்டி போயஸ் கார்டனுக்குள் முடக்க நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது.
ஈ.வெ.ரா குறித்து அவர் தவறாக பேசவில்லை. என்னைக் கேட்டால் அவர் ஈ.வெ.ரா குறித்தே பேசவில்லை என்று தான் சொல்லுவேன். இந்த விவகாரத்தில் ஒரு சிலர் அரசியலுக்காக பேசி வருகின்றனர். அவரும் அதை பற்றி கவலைப்படவில்லை.

வழக்கம் போல் மிகுந்த உற்சாகத்துடன் அரசியலுக்கு வர உள்ளார். அரசியல் கட்சியை விரைவில் தொடங்க உள்ளார் என்பதை நான் அறிவேன். அதுவரை நாம் அவருக்காக காத்திருந்து தான் ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சேலம் மாவட்டம் மேட்டுக்கடை பகுதியில் வசிக்கும் பூபதி மகன் ஜெகதீஷ் (வயது 27). இவர் சித்தோட்டில் உள்ள ஒரு தனியார் சாயப்பட்டறை யில் பணியாற்றி வந்துள்ளார்.
நேற்று காலை 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சித்தோடு வெள்ளம் மண்டி அருகே ஈரோடு-சத்தி மெயின் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென ஜெகதீஷ் நிலைதடுமாறி ரோட்டின் தடுப்புச் சுவர் மீது மோதினார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து காயமடைந்த அவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி ஜெகதீஷ் பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கோபி பகுதியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர், பங்காரு பேட்டை பகுதிக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு கொண்டு செல்லப்படுவதாக ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் திலகவதி தலைமையிலான போலீசார் கோபி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு லாரியும், ஆம்னி வேன் வந்தது. அந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது லாரியிலும், வேனிலும் 12 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரிய வந்தது.
பின்னர் லாரி, வேனில் இருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அம்மாபேட்டை, சித்தார் பகுதியைச் சேர்ந்த சாம்சன் (வயது 49), நம்பியூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (30), அழுகுளி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (32), ஒட்டர் கரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (31), சென்னை வெல்லூர் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (50) ஆகியோர் என தெரியவந்தது.
இவர்கள் யாருக்காக ரேஷன் அரிசியை கடத்தி செல்கிறார்கள் என்ற விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியும் ஆம்னி வேனும், 12 டன் ரேசன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் ஈரோடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், நம்பியூரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிப்பது குறித்து தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது. உயர்கல்வித்துறை இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அரசுப் பள்ளிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
இதற்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவத்தேர்வு முறை ரத்து குறித்து அரசு இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை.
ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் மூலம் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு 1 மணி நேரம் கூடுதல் சிறப்பு வகுப்பு அளிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதே என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு பதிலளித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி நேரத்தில் மட்டுமே சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். ஈரோடு மாணவர்கள் விருப்பப்பட்டால் சிறப்பு வகுப்பில் பங்கேற்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு கருங்கல் பாளையம் கே.எஸ்.நகர் பகுதியில் வாய்க்கால் ஓரம் உள்ள ஒரு வயல் வெளியில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு கருங்கல் பாளையம் போலீசார் விரைந்து சென்று அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.
அருகே மதுபாட்டிலும் கிடந்தது. இதனால் அங்கு நண்பர்கள் மது குடித்து ஜாலியாக இருந்தபோது அவர்கள் இடையே ஏற்பட்ட வாய் தகராறில் அந்த வாலிபர் வெட்டியும், குத்தியும் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் போலீசாரின் அடுத்தக்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் ஈரோடு சூரம்பட்டிவலசு பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 22) கூலித்தொழிலாளி என தெரிய வந்தது. பிறகு அந்த வாலிபர் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் வாலிபர் நாகராஜை கொலை செய்த கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜீ தலைமையில் கருங்கல் பாளையம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், ரவி ஆகிய 3 பேர் தலைமையில் இந்த 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் கொலையாளிகளை பிடிப்போம் என தனிப்படையினர் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட நாகராஜ் உடல் வைக்கப்பட்டிருந்த ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் கண்ணீருடன் இருந்தனர்.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல் ஒப்படைக்கப்பட்ட போது உறவினர்கள் கதறி அழுதனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் கே.எஸ்.நகர் பகுதியில் வாய்க்கால் ஓரம் உள்ள ஒரு வயல் வெளியில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு கருங்கல்பாளையம் போலீசார் விரைந்து சென்று அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.
அருகே மது பாட்டிலும் கிடந்தது. இதனால் அங்கு நண்பர்கள் மது குடித்து ஜாலியாக இருந்தபோது அவர்கள் இடையே ஏற்பட்ட வாய் தகராறில் அந்த வாலிபர் வெட்டியும், குத்தியும் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் போலீசாரின் அடுத்தக்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் ஈரோடு சூரம்பட்டிவலசு பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 22) கூலித்தொழிலாளி என தெரிய வந்தது. பிறகு அந்த வாலிபர் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் வாலிபர் நாகராஜை கொலை செய்த கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜீ தலைமையில் கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், ரவி ஆகிய 3 பேர் தலைமையில் இந்த 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுஉள்ளது.
இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் கொலையாளிகளை பிடிப்போம் என தனிப்படையினர் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட நாகராஜ் உடல் வைக்கப்பட்டிருந்த ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் கண்ணீருடன் இருந்தனர்.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல் ஒப்படைக்கப்பட்ட போது உறவினர்கள் கதறி அழுதனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள்விழா பொதுக் கூட்டத்தில் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.
அப்போது அவர் பேசும் போது தி.மு.கவையும். கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக தாக்கி பேசினார்.
“பொய் வாக்குறுதிகளை கூறி தி.மு.க.வினர் ஏமாற்றி எம்.பி.தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர். இப்போது தி.மு.கவினரை மக்கள் புரிந்து கொண்டு விட்டனர். இதனால் தான் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபைஇடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பதிலடி கொடுத்து உள்ளனர். அ.தி.மு.க.வுக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளனர். தொடர்ந்து இனி தி.மு.க.வுக்கு தோல்விதான் கிடைக்கும், மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சர் கனவு பலிக்காது, அவர் ஒருபோதும் முதல்வர் ஆக முடியாது” என்று கூறினார்.
“உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற இடங்களுக்கு குறைவான நிதியை மட்டுமே ஒதுக்குவோம்” என்றும் கூறினார்.
அமைச்சர் கருப்பணனின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு தி.மு.க. தலைவர்கள் கரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தி.மு.கபொருளாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் அமைச்சரை கண்டித்துள்ளார். தி.மு.க. வெற்றி பெற்ற உள்ளாட்சி பகுதிகளுக்கு குறைந்த நிதியே ஒருக்குவோம் என்று கூறிய அமைச்சர் கே.சி.கருப்பணனை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தமிழக கவர்னருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இந்த நிலையில் அமைச்சர் கருப்பணன் பேச்சுக்கு முன்னாள் மத்திய மந்திரியும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசாவும் கண்டனம் தெரிவித்தார்.
சத்தியமங்கலத்தில் ஆ.ராசா நிருபர்களிடம் கூறியதாவது:-
மாவட்ட ஊராட்சியாக இருந்தாலும், ஒன்றிய ஊராட்சியாக இருந்தாலும், இவைகளுக்கு ஒதுக்கப்படுகின்ற தொகை, மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
இதில் மாநில அரசாங்கத்தால் சிறிதளவு, அதாவது மேட்சிங் சேர் எனப்படும் பங்குத்தொகை, அங்கிருக்கின்ற மக்கள் தொகை அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதனை எந்த அமைச்சரோ, அதிகாரியோ தடுத்த நிறுத்த முடியாது.
மீறி தடுத்து நிறுத்தினால் அதனை கண்டறிந்து சரி செய்ய ஆயிரம் வழிகள் உள்ளது. இந்த குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் அமைச்சர் பேசிய பேச்சு அதிகார வக்கிர புத்தியோடு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, திராவிட முன்னேற்ற கழகம் எங்கெங்கெல்லாம் வெற்றி பெற்றுள்ளதோ, அங்கெல்லாம் நிதி ஒதுக்க மாட்டோம் என கூறியிருப்பது கேலிக்குரியது.
அரசியல் அமைப்பு சட்டத்தின் படி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டிய அமைச்சர், எதிர்கட்சியினர் வெற்றி பெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்க மாட்டோம் என பகிரங்கமாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நிதியை ஒதுக்கீடு செய்து நலத்திட்டங்களை செயல்படுத்துவோம். அடுத்த ஓராண்டு காலத்திற்குள் அமையவுள்ள திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின் மூலமாக அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்துவோம்.
இவ்வாறு ஆ.ராசா கூறினார்.
வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வரும் 31ம் தேதி மற்றும் 1ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் அகில இந்திய அளவில் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு 20 சதவீதம் அதிகரித்து வழங்க வேண்டும். வாரத்தில் வேலை நாட்கள் ஐந்தாக இருக்கவேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.
இந்த வேலைநிறுத்தத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் அதிகாரிகள் ஊழியர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் இந்த இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் 2800 ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த இரண்டு நாள் வேலைநிறுத்தம் காரணமாக ஆயிரம் கோடி பணம் வர்த்தகம், முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
31-ம் தேதி எஸ்.கே.சி ரோட்டில் அனைத்து வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றிய அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாள் விழா பொதுகூட்டம் அம்மாபேட்டையில் உள்ள அந்தியூர் ரோட்டில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அம்மாபேட்டை ஒன்றிய அதிமுக செயலாளர் வி.எஸ்.சரவணபவா தலைமை தாங்கினார். முன்னாள் எம்பியும் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளருமான என்.ஆர்.கோவிந்தராஜர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பேசினார்.
எம்.ஜி.ஆர் தோற்றுவித்த அதிமுக நூறாண்டு கால கட்சி. அ.தி.மு.கவில் யார் வேண்டுமானாலும் முதல் அமைச்சர் ஆகலாம், அமைச்சர் ஆகலாம்,சேர்மன் ஆகலாம், பஞ்சாயத்து தலைவர் ஆகலாம் நான் அமைச்சர் ஆவேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. ஆனால் நான் இன்று அமைச்சராக உள்ளேன்.
தி.மு.க.வில் அப்படியில்லை அது குடும்ப கட்சி முதலில் கருணாநிதி, அடுத்து ஸ்டாலின், உதயநிதி, பிறகுஅவரது மகன் இப்படி அவர்கள் குடும்ப அரசியல் செய்கிறார்கள், அதே போல் ஒவ்வொரு மாவட்டம் மற்றும் ஒன்றியங்களிலும் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள்தான் கட்சி பொறுப்பிலோ அல்லது மற்ற அரசு பொறுப்பிலோ இருப்பார்கள். முதலமைச்சர் ஆகும் கனவில் மு.க.ஸ்டாலின் உள்ளார். ஆனால் அவருக்கு அந்த யோகம் இல்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆக முடியாது
தமிழகத்தில் இன்று பல்வேறு நலத்திட்டங்கள் தமிழகஅரசு செய்து வருகிறது.
பாராளுமன்ற தேர்தலில் திமுகவின் வாக்குறுதியை நம்பி மக்கள் வாக்களித்து 39 தொகுதிகளிலும் வெற்றி பெற செய்தனர்.
ஆனால் 39 பைசாவிற்கு கூட பிரயோஜனம் இல்லை. அதை தொடர்ந்து நடைபெற்ற விக்கிரவண்டி,நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. மக்கள் புரிந்து கொண்டனர் அதனால் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீதம் அதிமுக கைபற்றியது.இங்குள்ள ஒருசில எம்எல்ஏக்களால் 100 சதவீதம் பெற வேண்டிய வெற்றி பறி போனது.
கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் நல்லா இருக்க முடியாது. சில அதிமுக வினாரால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்ப்பட்டு வருகிறது.
மக்களுக்கு தெரியும் யார் கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் என்று?
இவ்வாறு அவர் கூறினார்.
பெருந்துறை:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 35) தச்சு தொழிலாளி. இவர் ஈரோடு மாவட்டம் கங்காபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
அதை போல் கணேசன் தனது மோட்டார் சைக்கிளில் தாய் வீட்டுக்கு வந்தார். இன்று காலை மீண்டும் தாய் வீட்டிலிருந்து பல்லடம் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் கிளம்பினார். பெருந்துறை அடுத்த சோளிபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக கணேசன் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கணேசனை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் மாற்றி ஓட்டு போட்டதால் தி.மு.க. சில இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. சத்தியமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியுள்ளது. எனினும் அவர்களால் எந்தவித திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது.
தி.மு.க. வெற்றி பெற்று உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படும். அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக உள்ள நிலையில், ஊராட்சிகளில் தி.மு.க. வெற்றி பெற்றாலும் அவர்களால் எந்த திட்டப்பணிகளையும் முழுமையாக செய்ய முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.சி.கருப்பணன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘ஊரக உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது குறித்து வருத்தம் அடைய தேவையில்லை. வருகிற சட்டசபை தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெறுவோம்’ என்றார்.






