search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் கே.சி. கருப்பணன்
    X
    அமைச்சர் கே.சி. கருப்பணன்

    மத்திய அரசு மீது அமைச்சர் கருப்பணன் திடீர் குற்றச்சாட்டு

    மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு இந்த திட்டத்துக்கு மாநில அரசிடம் அனுமதி கேட்கவில்லை என அமைச்சர் கருப்பணன் குற்றம் சாட்டியுள்ளார்.
    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டார்.

    விழாவில் 4 அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 603 மாணவ- மாணவிகளுக்கு அமைச்சர் கே.சி.கருப்பணன் இலவச மடிகணினிகளை வழங்கி பேசினார்.

    அவர் கூறும்போது, மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வாழ்க்கையில் உயர வேண்டும் என்று கூறினார்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் கருப்பணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “மத்திய அரசு மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த திட்டத்துக்கு மாநில அரசிடம் மத்திய அரசு அனுமதி கேட்கவில்லை. அனுமதி கேட்காவிட்டாலும் கூட சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடமாவது அனுமதி பெற்றிருக்க வேண்டும். அந்த அனுமதியும் பெறவில்லை.

    ஈரோடு, பவானியில் பொதுசுத்திகரிப்பு மையம் கொண்டு வரப்படுகிறது. 500 டி.டி.எஸ்.சுக்கு மேல் இருக்கும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யத்தான் இந்த பொதுசுத்திகரிப்பு மையம் அமைக்கப்படுகிறது” என்று கூறினார்.

    Next Story
    ×