search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister kc karuppannan"

    பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு கொடுத்த வயிற்றெரிச்சலில் முதல்வர் மீது அபாண்ட பழி சுமத்துவதாக அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். #Pongalcashgift #KCKaruppannan #Edappadipalaniswami
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

    இதில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, அந்தியூர் ராஜா கிருஷ்ணன், பவானிசாகர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட கலெக்டர் கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் பாலச்சந்திரனும் கலந்து கொண்டார்.

    கூட்ட முடிவில் அமைச்சர் கே.சி.கருப்பணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரும் சிறப்பாக ஆட்சி நடத்தி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள்.

    தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அனைவராலும் பாராட்டப்படுகிறது. மற்ற வகை பிளாஸ்டிக் பொருட்களும் படிப்படியாக தடை செய்யப்படும்.

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை தயாரிக்கும் தொழிலை ஊக்குவிக்க அரசு தயாராக உள்ளது.

    கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் மீது எதிர்கட்சியினர் அபாண்ட பழி சுமத்துகிறார்கள். பொது மக்களுக்கு பொங்கல் பரிசு கொடுத்து வருகிறோம். இது எதிர்கட்சியினருக்கு வயிற்றெரிச்சலையும், பொறாமையையும் ஏற்படுத்தி உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் கருப்பணன் கூறினார்.  #Pongalcashgift #KCKaruppannan #Edappadipalaniswami
    தங்களிடம் இருந்து எதிரணிக்கு ஓடிய செந்தில் பாலாஜி இப்போது தி.மு.க.வுக்கு ஓடி உள்ளார். அவர் ஒரு அரசியல்வாதி அல்ல. நல்ல வியாபாரி என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார். #KCKaruppannan #Senthilbalaji
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தால் ஏற்பட்டுள்ள பதட்ட நிலை தணிக்கப்படும். ஸ்டெர்லைட் ஆலைக்கு பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவுக்கு நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

    மேலும் இது குறித்து சுப்ரீம் கோர்ட்டுக்கு மேல் முறையீடு செய்யப்படும். கோர்ட்டின் தீர்ப்புக்கு பிறகு நிலைமை தெரியும். இது குறித்து முதல்வர் ஆராய்ந்து நல்ல முடிவை எடுப்பார்.

    எங்களிடம் இருந்து எதிரணிக்கு ஓடிய செந்தில் பாலாஜி இப்போது தி.மு.க.வுக்கு ஓடி உள்ளார். அவர் ஒரு அரசியல்வாதி அல்ல. நல்ல வியாபாரி. ஆதாயம் எங்கு கிடைக்குமோ அங்கு ஓடுவது அவரது வழக்கம்.

    பிளாஸ்டிக் பயன்படுத்துவது படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் நடைமுறையில் இருக்கும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார். #KCKaruppannan #Senthilbalaji
    சீன பட்டாசுகளை விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். #ADMK #TNMinister #KCKaruppannan #ChinaCrackers
    அந்தியூர்:

    தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் அந்தியூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க பெருவாரியான இடத்தில் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் செயல்படுவது எப்படி என்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகையை புகையில்லா தீபாவளியாக கொண்டாட அனைத்து நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. சீன பட்டாசுகளை அரசு கட்டுப்படுத்தியிருக்கிறது. தெரியாமல் யாரும் விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னையை பொருத்தவரை நடமாடும் காற்று கண்காணிப்பு மையம் உள்ளது. இதன் மூலம் மாசு மற்றும் புகையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும், அரசு சார்பில் விபத்தில்லா தீபாவளிக்காக கொடுக்கப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண்களுக்கு இது குறித்து தொடர்பு கொண்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #KCKaruppannan #ChinaCrackers
    சேலம்-சென்னை 8 வழிச்சாலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம் என்று அமைச்சர் கே.சி. கருப்பணன் கூறியுள்ளார்.
    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் பார்வையிட்டார்.

    பிறகு அந்த பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 375 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் கே.சி. கருப்பணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது நிருபர்கள் அமைச்சரிடம் சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதே? என்று கேட்டனர்.

    அதற்கு பதிலளித்து அமைச்சர் கே.சி. கருப்பணன் கூறியதாவது:- பொதுப்பணித்துறை நமது முதல் அமைச்சரிடம் உள்ளது. எனவே முதல்வர் தகுந்த முடிவை எடுப்பார். ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தாலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம். உரிய தீர்வு வரும்.

    இவ்வாறு அமைச்சர் கே.சி. கருப்பணன் கூறினார்.
    அனைத்து மாவட்டங்களிலும் 25 ஆயிரம் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார். #TNAssembly
    சென்னை:

    தமிழக சட்டசபையில் சுற்றுச்சூழல் மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதில் அளித்து பேசிய அந்தத் துறையின் அமைச்சர் கே.சி.கருப்பணன், வெளியிட்ட புதிய அறிவிப்புகளின் விவரம் வருமாறு:-

    32 மாவட்டங்களில் தேசிய பசுமைப்படை, சூழல் மன்ற மாணவ, மாணவிகளுக்கு சூழல் போட்டிகளை நடத்தி, சான்றிதழ் வழங்குவதோடு சூழல் சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள்.

    32 மாவட்டங்களில் கலைக்குழுக்களின் பங்களிப்புடன் பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து வாகன விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட 960 பள்ளிகளின் தேசிய பசுமைப்படை மற்றும் சூழல் மன்றங்களின் மாணவர்களின் பங்களிப்புடன் பள்ளிகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும்.

    கடலோர குடியிருப்பு பகுதிகளில் தெரு நாடகங்கள், பிரசாரம் மூலமாக திடக்கழிவு மேலாண்மை குறித்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விளம்பரத்திற்கான சிறந்த குறும்படங்களுக்கு விருதுகள் வழங்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கு பசுமை விருதுகள் வழங்கப்படும்.

    200 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு திரவ படிக காட்சிப்படுத்தும் கருவி வழங்கப்படும். நகர்ப்புற வனவியல் திட்டத்தின் கீழ் சென்னை புறநகர் பகுதிகளில் மரக்கன்றுகள் வளர்த்தல் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் 25 ஆயிரம் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை திட்டம் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் அறிவித்தார்.#சென்னை:

    இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் அறிவித்தார். #சென்னை:

    இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் அறிவித்தார். #TNAssembly
    பெருந்துறை சிப்காட் வளாகத்தில் புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க அனுமதி இல்லை என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கூறினார். #KCKaruppannan #SIPCOT
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சிப்காட் வளாகம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதில் பெரும்பாலான நிறுவனங்கள் சாய தொழிற்சாலைகள் மற்றும் தோல் தொழிற்சாலைகள்தான். இந்த நிறுவனங்களில் இருந்து கழிவு நீர் பெரும்பாலும் சுத்திகரிப்பு செய்யப்படாமல் வெளியேற்றப்படுவதால் இந்த சிப்காட்டை சுற்றியுள்ள சுமார் 10 கிமீ தொலைவிற்குள் உள்ள அனைத்து கிராமங்களிலும் நிலத்தடி நீர் முற்றிலும் மாசுபட்டநிலையில் சாயக்கழிவின் நிறத்துடனேயே உள்ளது.

    இது தொடர்பான கோர்ட்டின் உத்தரவிற்கு பின்னர் ஜீரோ டிஸ்ஜார்ஜ் முறை அமுலுக்கு வந்தது. பெரும்பாலான நிறுவனங்கள் அதற்கு பின்னர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த சுத்திகரிப்பின் போது வெளியாகும் திடக்கழிவுகள் சிமெண்ட் பேக்டரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஒன்றிணைந்து சிப்காட்டால் பாதிக்கப்பட்டோர் நலச்சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பினை உருவாக்கி அதன் மூலம் வருகின்ற 26ம் தேதி பெருந்துறை, சிப்காட் வளாகத்தில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.

    இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈரோடு மாவட்ட கலெக்டர் தலைமையில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் முன்னிலையில் போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் அனைத்து நிறுவனங்களிலும் இருந்து ஜீரோ டிஸ்சார்ஜ் முறையினை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

    அதன்படி பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் சிப்காட்டில் உள்ள நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடனான பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், எஸ்பி சக்தி கணேசன், ஆர்டிஓ நர்மதா தேவி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    சிப்காட் வளாகத்தில் உள்ள நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் பேசும் போது கூறியதாவது:-

    பெரும்பாலான நிறுவனங்கள் சாயக்கழிவு நீரை சூடேற்றி நீராவியாக மாற்றி கீழே தேங்கும் திடக்கழிவுகளை மட்டும் அப்புறப்படுத்தி விடுகின்றன. இந்த முறையில் அந்த நிறுவனங்கள் ஜீரோ டிஸ்சார்ஜ் முறையை பின்பற்றுகின்றன.

    ஆனால் இந்த வளாகத்தில் உள்ள 13 நிறுவனங்கள் சோலார் பேனல் முறையை பயன்படுத்தி சாயக்கழிவு நீரை ஆவியாக்குகின்றனர். இதில் குறைந்த அளவே நீர் ஆவியாகிறது. அதிகப்படியான சாயக்கழிவு வரும் பட்சத்தில் இந்த நீர் சுத்திகரிப்பு செய்யப்படாமலேயே வெளியேறி விடுகிறது. மேலும் மழை காலங்களில் இந்த முறை பயனற்றதாகி விடுகிறது. அந்த சமயங்களில் சாயக்கழிவு நீர் வெளியேறி அருகில் உள்ள குளம் குட்டைகளில் தேங்கி விடுகிறது. ஆகவே இந்த நிறுவனங்களும் இந்த முறையை கைவிட்டு மற்ற நிறுவனங்களை போல நீரை கொதிக்க வைத்து ஆவியாக்க வேண்டும்.

    30 நாட்களில் இருந்து 60 நாட்களுக்குள் இந்த நிறுவனங்கள் ஜீரோ டிஸ்சார்ஜ் முறைக்கு மாறி விடுவதாக உறுதியளித்துள்ளன. இதனால் இந்த பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட பொதுமக்களின் பிரச்சினை பெரும்பாலும் இன்னும் 2 மாதத்திற்கும் சரிசெய்யப்படும்.

    சிப்காட் வளாகத்தில் புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க அனுமதியளிக்கும் எண்ணம் தற்போது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #KCKaruppannan #SIPCOT

    அம்மா பாணியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி புரட்சிதலைவி ஜெயலலிதாவின் வாரிசாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.
    ஈரோடு:

    பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

    விழாவில் சுற்று சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    மறைந்த அம்மாவின் ஆசியுடன் இந்த ஆட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக நடத்தி வருகிறார். மக்களின் அனைத்து அடிப்படை வசதிகளையும் செயல்படுத்தி வருகிறார்.

    இன்று மக்களை முதல்வர் நேரில் சந்தித்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து வருகிறார். அம்மா பாணியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி புரட்சிதலைவி ஜெயலலிதாவின் வாரிசாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்.

    ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தது. 7 ஆண்டாக மின்துறை அமைச்சர் தங்கமணி தமிழ்நாட்டை மின்வெட்டு இல்லாத மாநிலமாக்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இப்படி சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தினமும் விமர்சித்து வருகிறார். அவர் செயல் தலைவர் அல்ல செயல் இழந்த தலைவராக உள்ளார். அவர் என்னதான் ஆட்சியை விமர்சனம் செய்தாலும் மக்கள் அதை நம்பமாட்டார்கள். அவர் மீது மக்கள் வெறுப்புடன்தான் உள்ளனர்.

    காவிரி ஆணையத்தை புதுப்பிக்க தவறியவர் கலைஞர். ஆனால் 48 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து சட்ட போராட்டம் நடத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றம் மூலம் உத்தரவு வாங்கியவர் ஜெயலலிதா.

    தினகரன் புதிய கட்சி தொடங்கி இருப்பது வேடிக்கை. அவருக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. குறிப்பாக கொங்கு நாட்டு மக்களுக்கு தினகரன் யார் என்று தெரியாது.

    இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.
    ×