search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.சி.கருப்பணன் வீரவாள் பரிசு வழங்கினார்.
    X
    விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.சி.கருப்பணன் வீரவாள் பரிசு வழங்கினார்.

    ஜெயலலிதாவின் வாரிசாக எடப்பாடி பழனிசாமி உள்ளார்- அமைச்சர் கருப்பணன்

    அம்மா பாணியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி புரட்சிதலைவி ஜெயலலிதாவின் வாரிசாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.
    ஈரோடு:

    பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

    விழாவில் சுற்று சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    மறைந்த அம்மாவின் ஆசியுடன் இந்த ஆட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக நடத்தி வருகிறார். மக்களின் அனைத்து அடிப்படை வசதிகளையும் செயல்படுத்தி வருகிறார்.

    இன்று மக்களை முதல்வர் நேரில் சந்தித்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து வருகிறார். அம்மா பாணியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி புரட்சிதலைவி ஜெயலலிதாவின் வாரிசாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்.

    ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தது. 7 ஆண்டாக மின்துறை அமைச்சர் தங்கமணி தமிழ்நாட்டை மின்வெட்டு இல்லாத மாநிலமாக்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இப்படி சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தினமும் விமர்சித்து வருகிறார். அவர் செயல் தலைவர் அல்ல செயல் இழந்த தலைவராக உள்ளார். அவர் என்னதான் ஆட்சியை விமர்சனம் செய்தாலும் மக்கள் அதை நம்பமாட்டார்கள். அவர் மீது மக்கள் வெறுப்புடன்தான் உள்ளனர்.

    காவிரி ஆணையத்தை புதுப்பிக்க தவறியவர் கலைஞர். ஆனால் 48 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து சட்ட போராட்டம் நடத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றம் மூலம் உத்தரவு வாங்கியவர் ஜெயலலிதா.

    தினகரன் புதிய கட்சி தொடங்கி இருப்பது வேடிக்கை. அவருக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. குறிப்பாக கொங்கு நாட்டு மக்களுக்கு தினகரன் யார் என்று தெரியாது.

    இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.
    Next Story
    ×