search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் கருப்பணன்- தோப்பு வெங்கடாச்சலம் எம்எல்ஏ
    X
    அமைச்சர் கருப்பணன்- தோப்பு வெங்கடாச்சலம் எம்எல்ஏ

    அமைச்சர் கருப்பணன் குத்தாட்டம் போடலாமா? பெருந்துறை எம்எல்ஏ கண்டனம்

    ஊர் முழுக்க சாயக்கழிவு ஓடும் போது அமைச்சர் கருப்பணன் குத்தாட்டம் போடலாமா? அவரை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது என்று பெருந்துறை எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் கே.சி.கருப்பணன். ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி எம்.எல்.ஏ. ஆவார்.

    பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தோப்பு வெங்கடாச்சலம். இதற்கு முன் சுற்று சூழல் துறை அமைச்சராகவும் பணி புரிந்து வந்தார் தோப்பு வெங்கடாச்சலம்.

    முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்துக்கும் தற்போதைய அமைச்சர் கே.சி.கருப்பணனுக்கும் நீண்ட நாட்களாக வேபனிப்போர் இருந்து வருகிறது. தற்போது இது பூதாகரமாக வெடித்துள்ளது.

    நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கூறியதாவது-

    எனது தொகுதி மக்களுக்காக நான் அமைச்சராக இருந்த போதும் இப்போதும் பல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி உள்ளேன். தொடர்ந்து செயல்படுத்தி வருகிறேன். ஆனால் இந்த திட்டத்தையெல்லாம் நிறைவேற்ற விடாமல் அமைச்சரே தடுத்து வருகிறார்.

    பெருந்துறை தொகுதியில் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த தொடங்கினால் பெருந்துறை தொகுதி மக்களுக்கு ஆண் டாண்டுக்கு குடிநீர் பஞ்சம் இருக்காது.

    ஆனால் இந்த திட்டத்தை அமைச்சர் கருப்பணன் தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த ஒரு திட்டத்தையே ஒரு அமைச்சர் தடுக்க முயலவது வேதனையாக வேடிக்கையாக உள்ளது.

    உள்ளாட்சி தேர்தலில் பெருந்துறை ஒன்றியத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராகவே செயல்பட்டார். சுயேட்சைகளுக்கு ஆதரவாக செயல்பட்டார். ஊர் முழுக்க சாய கழிவு நீர் ஓடி கொண்டு இருக்கும் நிலையில் அதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் குத்து பாடலுக்கு இவர் ஆட்டம் போடுவது வினோதம்.

    இப்படி கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக தொடர்ந்து ஈடுபட்டு வரும் அவரை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது. அவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு தோப்பு வெங் காடாச்சலம் எம்.எல்.ஏ. கூறினார். 

    Next Story
    ×