என் மலர்
ஈரோடு
- திடீரென அவர்கள் தாங்கள் கேனில் கொண்டு வந்திருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றனர்.
- இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த கொங்கர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் (42). இவர் தனது மனைவி பாப்பா என்பவருடன் இன்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுத்த வந்தார்.
பின்னர் திடீரென அவர்கள் தாங்கள் கேனில் கொண்டு வந்திருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடிச் சென்று அவர்களை காப்பாற்றினர்.
பின்னர் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது சுந்தரம் கூறியதாவது:-
கொங்கர் பாளையம் ஊராட்சி, இந்திரா நகர் பகுதியில் எனக்கு 82 சென்ட் நிலம் உள்ளது. இங்கு விவசாயம் செய்து வருகிறேன். கடந்த 2008 -ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் எனது மனைவி வாணிபுத்தூரை சேர்ந்த ஒருவரிடம் 60 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டார்.
அதற்கு என் மனைவி எனது பெயரில் உள்ள நில பத்திரத்தை அந்த நபரிடம் கொடுத்து கைரேகை வைத்து கடன் பெற்றார். இந்த 60 ஆயிரம் கடனுக்காக நாங்கள் இதுவரை 2 லட்சத்து 94 ஆயிரம் வட்டி கொடுத்து விட்டோம். ஆனால் அவர் எங்களிடம் வாங்கிய பாத்திரத்தை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்.
தற்போது திடீரென அந்த நபர் எங்கள் நிலத்தை வேறு ஒருவர் பெயரில் கிரையம் செய்து விற்று விட்டதாக கூறுகிறார். இது குறித்து அந்த நபரிடம் கேட்டபோது அவர் எங்களை திட்டி எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்.
அந்த இடத்தை வாங்கியவரும் எங்களை மிரட்ட தொடங்கினார். எங்களிடம் மோதினால் ஊரை விட்டு பஞ்சாயத்து மூலமாக தீர்மானம் போட்டு ஒதுக்கி விடுவோம் என்று மிரட்டுகின்றனர்.
இன்னும் ஒரு வாரத்தில் இடத்தை காலி செய்யவில்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகின்றனர். எனவே எங்கள் நிலத்தை மீண்டும் எங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இதுதொடர்பான மனுவையும் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தார்.
தீ குளிக்க முயன்றதை அடுத்து சுந்தரம் மற்றும் அவரது மனைவியை சூரம்பட்டி போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- கும்பாபிஷேகம் நடந்து முடிந்து 12 ஆண்டுகள் நடந்து முடிந்ததை தொடர்ந்து மீண்டும் கும்பாபி ஷேகம் நடத்த ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடு கள் செய்தனர்.
- புனித நீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் உள்ள கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
பவானி:
பவானி அருகே உள்ள சேர்வராயன் பாளையம் கிராமத்தில் விநாயகர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவி லில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்து 12 ஆண்டுகள் நடந்து முடிந்ததை தொடர்ந்து மீண்டும் கும்பாபி ஷேகம் நடத்த ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடு கள் செய்தனர்.
இதனை தொடர்ந்து கோவில் ராஜகோபுரம் மற்றும் கோவில் சிற்பங்கள் அனைத்தும் வர்ணங்கள் தீட்டி புது பொலிவு பெற்றது.
இதன் பின்னர் கோவில் வளாகத்தின் முன்பாக யாகசாலை பூஜை பந்தல் அமைத்து அதில் மணிகண்ட சிவாச்சாரியார் தலைமை யிலான சிவாச்சாரியார் குழுவினர் மூலம் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது.
இதை தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு புனித நீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் உள்ள கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து விநாயகர், மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
விழாவில் பவானி எம்.எல்.ஏ. கே.சி.கருப்பணன், பவானி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ், தொட்டி பாளையம் பஞ்சாயத்து தலைவர் செல்வராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கேபிள் சேகர், விழா குழுவினர் மற்றும் பவானி, காடையம்பட்டி, புது காடையம்பட்டி
சேர்வராயன் பாளையம், தொட்டிபாளையம், பெரிய மோளபாளையம், சின்னமோளபாளையம், ஜம்பை, தளவாய் பேட்டை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- விவசாயிகளின் விலை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை நடைபெறும்.
- கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 8 ஆயிரத்திலிருந்து 9 ஆயிரம் வரை மூட்டைகள் பருத்தி வரத்து இருந்தது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அத்தாணி சாலை வாரச்சந்தை எதிர்ப்புறம் அமைந்துள்ளது. இதில் விவசாயிகளின் விலை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை நடைபெறும்.
அந்த வகையில் தற்போது பருத்தி வரத்து அந்தியூர் தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், வட்டக்காடு, புதுக்காடு, காந்திநகர், சங்கரா பாளையம், எண்ணமங்கலம், சின்னத்தம்பி பாளையம், பச்சம் பாளையம், கள்ளிமடை, குட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்ட பருத்தி வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டிடத்தில் வைக்கப்பட்டு அதன் ஏலம் திங்கட்கிழமை காலை அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஞானசேகர் முன்னிலையில் நடைபெறும்.
இந்த ஏலத்தில் புளியம்பட்டி, அன்னூர், கொங்கணாபுரம், சத்தியமங்கலம், அவிநாசி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து பருத்தியின் விளைச்சலுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயிக்கப்பட்டு வாங்கி சென்றனர்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 8 ஆயிரத்திலிருந்து 9 ஆயிரம் வரை மூட்டைகள் பருத்தி வரத்து இருந்தது. இந்த வாரம் 5 ஆயிரம் மூட்டைகள் மட்டுமே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- அமைச்சர் முத்துசாமி, மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பி–ரண்டு சசிமோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
- மேற்கு மண்டல சுதாகர் மற்றும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆய்வின்போது கோபி டி.எஸ்.பி. சியாமளாதேவி, இன்ஸ்பெக்டர்கள் வடிவேல்குமார், சண்முகவேலு உள்ளிட்டார் உடன் பிறந்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.என். பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை மற்றும் கலைஞர் படிப்பகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ந் தேதி மாலை திறந்து வைக்கிறார்.
இந்நிலையில் அமைச்சர் முத்துசாமி, மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். முதல்-அமைச்சர் கோவையில் இருந்து குன்னத்தூர், கெட்டிசெவியூர், கொளப்பலூர் வழியாக கோபியை வந்தடைந்து அதன்பின் நஞ்ச கவுண்டன் பாளையம் வழியாக பவானி ஆற்றை கடந்து கள்ளிப்பட்டி செல்லும் வரை உள்ள சாலை பாதுகாப்பு பணியை ஐ.ஜி. சுதாகர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது முதல்-அமைச்சர் வரும் வழியில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள். சிலை திறப்பு நடைபெறும் இடத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள். பொதுமக்கள், கட்சியினர் வாகனங்களை நிறுத்தும் பகுதி. சிலை மற்றும் படிப்பகத்தை திறந்து வைத்த பின்பு முதல்-அமைச்சர் செல்லும் அத்தாணி, ஜம்பை வழியாக ஈரோடு செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு செய்தனர்.
மேற்கு மண்டல சுதாகர் மற்றும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆய்வின்போது கோபி டி.எஸ்.பி. சியாமளாதேவி, இன்ஸ்பெக்டர்கள் வடிவேல்குமார், சண்முகவேலு உள்ளிட்டார் உடன் பிறந்தனர்.
அதனைத் தொடர்ந்து 40 அடி உயரக் கொடி கம்பம் நிறுவும் பணியை அமைச்சர் முத்துசாமி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம், டி.என்.பாளையம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிவபாலன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- வாய்க்கா லில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
- போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த 4 பேரையும் மீட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
கோபி:
பவானிசாகர் அணை யின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது.
இதையடுத்து பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் திறந்து விட ப்பட்டது. வரத்து குறைந்த தால் ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரு கிறது. இந்த தண்ணீர் மூலம் சுமார் 2 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்த தண்ணீர் டிசம்பர் மாதம் வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. மேலும் வாய்க்கால் கரைகளை தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
இந்த நிலையில் வாய்க்கா லில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4 பேர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்த விபரம் வருமாறு:-
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நல்லூரை சேர்ந்த மளிகை கடை உரி மையாளர் குடும்ப தகராறு காரணமாக கீழ்பவானி வாய்க்காலில் தனது 2 மகன்களுடன் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதே போல் நேற்று ஒரு பெண் 2 மகள்களை வாய்க்காலில் தள்ளி விட்டு தற்கொலை செய்து கொண்டார். கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கரட்டு பாளையத்தை சேர்ந்தவர் தீபக் (45). இவரது மனைவி விஜய லட்சுமி (40). இவர்களுடை மகள்கள் மதுநிஷா (12), தருணிகா (6).
கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதே போல் நேற்று முன்தினமும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் விஜய லட்சுமி தனது 2 மகள்களை மொபட்டில் அழைத்து கொண்டு குருமந்தூர் அருகே சுட்டிக்கல் மேடு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் ஸ்கூட்ட ரை நிறுத்தி விட்டு தனது 2 மகளுடன் வாய்க்காலில் குதித்தார்.
இதில் வேட்டைகாரன் கோவில் பகுதியில் உள்ள வாய்க்காலில் விஜயலட்சுமி பிணமாக மீட்கபப்ட்டார். அவரது மூத்த மகள் மது நிஷா ஆயிபாளையம் பகுதியில் ஒரு மரக்கிளையில் தொங்கி யபடி அழுது கொண்டு இருந்தார். அவரை உயிரு டன் மீட்டனர். ஆனால் அவரின் மற்றொரு மகள் தருணிகா வை கண்டு பிடிக்க முடி யவில்லை. அவரை தொடர்ந்து தேடி வருகிறார் கள்.
இந்த நிலையில் நேற்று கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சுண்டக்க ம்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண் தனது மகள் மற்றும் 2 மகன்களுடன் நம்பியூர் அருகே கூடக்கரை வாய்க்கால் பகுதிக்கு வந்தனர்.
தொடர்ந்து அவர்கள் 4 பேர் குடும்ப தகராறு காரணமாக வாய்க்கால் கரையோரம் தற்கொலை செய்வதற்காக நின்று கொண்டு இருந்தனர்.
இதை கண்ட அந்த பகுதி யை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் ஈரோடு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடு த்தனர். இதையடுத்து அவர்கள் கடத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த 4 பேரையும் மீட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். இது போன்ற விபரீத முடிவுகள் எடுக்க வேண்டாம் என போலீசாரும் அதிகாரிகளும் கேட்டு கொண்டு உள்ளனர்.
வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்யும் சம்பவங்களை தடுக்க அதிகாரிகள் அந்த பகுதிகளில் தடுப்பு அமைத்து கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டு கொண்டு உள்ளனர்.
- 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பவானி ஆற்றில் பிணமாக மிதப்பதாக தெரிய வந்தது.
- பலியான அந்த மூதாட்டி பெயர், விபரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அருகே உள்ள கோணமலை கருப்பராயன் கோவில் பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பவானி ஆற்றில் பிணமாக மிதப்பதாக தெரிய வந்தது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணமாக மிதந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பலியான அந்த மூதாட்டி பெயர், விபரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில நாட்களாக குடிமகன்கள் குடித்துவிட்டு போதையில் பஸ் நிலையத்தில் படுத்து உறங்குவதும், ரகளையில் ஈடுபடுவதும் தொடர்கதையாகிவருகிறது.
- பஸ் நிலையத்தில் குடிமகன்களால் தினம் தினம் பெண்கள், பள்ளி மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தாளவாடி:
தாளவாடி மலைப்பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.இப்பகுதி மக்கள் சத்தியமங்கலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், மைசூர், ஆகிய பகுதிகளுக்குச் செல்ல தாளவாடி பஸ் நிலையம் வந்து தான் செல்ல வேண்டும்.
இதனால் தாளவாடி பஸ் நிலையம் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக குடிமகன்கள் குடித்துவிட்டு போதையில் பஸ் நிலையத்தில் படுத்து உறங்குவதும், ரகளையில் ஈடுபடுவதும் தொடர்கதையாகிவருகிறது.
அதேபோல் காலை பஸ் நிலையத்தில் ஆண்கள் பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்பொழுது அங்கு வந்த 50 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் குடிபோதையில் தள்ளாடியபடியே பஸ் நிலையத்தில் நுழைந்தார்.
அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் மீது தள்ளாடியபடி விழுந்து தகாத வார்த்தையில் பேசினார்.
பின்னர் அங்கு நின்று இருந்த பெண்ணிடம் தகராறு செய்தார். இதை பார்த்த வயதான மூதாட்டி ஒருவர் குச்சியை எடுத்து அவரை விரட்டினார். ஆனால் போதையில் தள்ளாடியபடியே இருந்தார்.
ஆனால் அங்கு இருந்த மற்றவர்கள் யாரும் இதை கண்டு கொள்ளவே இல்லை.
பஸ் நிலையத்தில் குடிமகன்களால் தினம் தினம் பெண்கள், பள்ளி மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றார்.
- இதையடுத்து போலீசார் கார்த்தியை கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி, கருப்பகவுண்டன் புதூரை சேர்ந்தவர் சக்திவேல், இவரது மனைவி விஜயலட்சுமி (50).
கடந்த 18-ந்தேதி அன்று சக்திவேல் தனது தோட்டத்து வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் மதியம் சுமார் 2 மணியளவில் விஜயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
மதியம் டிவி பார்த்துக் கொண்டிருந்த விஜயலட்சுமி தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து விஜயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.
இச்சம்பவம் குறித்து விஜயலட்சுமி ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட ஆப்பக்கூடல் போலீசார், அத்தாணி சாலையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை செய்தனர். அப்போது நீல நிற சட்டை அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார் என்பதை கண்டறிந்தனர்.
தொடர்ந்து போலீசார் அத்தாணி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றார். அப்போது அவரை பிடித்து விசாரணை செய்தனர்.
இதில் அவர் கோபிசெட்டிபாளையம், கள்ளிப்பட்டி அருகேயுள்ள வளையபாளையம், கட்டபொம்மன் தெரு பகுதியைச் சேர்ந்த கார்த்தி (29) என்பது தெரியவந்தது. இவர்தான் கருப்பகவுண்டர் புதூர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமியிடம் தங்க சங்கிலியை கொள்ளை அடித்து விட்டு தப்பியோடி–யது தெரிந்தது.
தொடர்ந்து கார்த்திக்கிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பொறியியல் பட்டதாரியான கார்த்திக் திருமணமானவர், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது.
அப்போது ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து கடனாளி ஆனதால் கம்பெனிக்கு செல்லாமல் கடந்த 3 மாதமாக சுற்றி திரிந்தது தெரிந்தது.
அப்போது கடன் கொடுத்தவர்கள் கடனைக் கேட்டு நெருக்கடி செய்யவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முடிவு செய்து தனியாக இருந்த பெண்ணி–டம் தங்க செயினை கொள்ளை அடித்து சென்று தெரிய வந்தது.
மேலும் அந்த செயினை கோபியில் உள்ள தனியார் அடகு கடையில் அடமானம் வைத்து பணத்தை பெற்ற–தும் போலீசார் விசாரணை–யில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து போலீசார் கார்த்தியை கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி–னர். பின்னர் அவர் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
- கோவில் எதிரே உள்ள காவிரி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தார் அப்போது அவர் திடீரென நீரில் மூழ்கினார்.
- ரில் மூழ்கிய பாலசண்முகத்தை மீட்டு உடனடியாக கண பதி பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கொடுமுடி:
கோவை மதுக்கரை மார்க்கெட்டு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (53). இவர் மன்னாதம்பாளை யம் குலவிளக்கு அம்மன் கோவிலில் கிடாய் வெட்டி பொங்கல் வைப்பதற்காக பஸ், கார் மூலம் உறவினர்கள், நண்பர்கள் 150 பேர் வந்தனர்.
இவர்களுடன் இவரது உறவினர் கோவை மதுக்கரை அன்பு நகரை சேர்ந்த பாலசண்முகம் (44) என்பவரும் வந்து இருந்தார்.இவர் கோவில் எதிரே உள்ள காவிரி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தார் அப்போது அவர் திடீரென நீரில் மூழ்கினார்.
இதை கண்ட அக்கம் பக்கம் இருந்தவர்கள் சத்தம் போட்டு உள்ளார்கள். உடனே மொடக்குறிச்சி தீயனைப்புத் துறைக்கு தகவல் கொடுத்து உள்ளார்கள். சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து வந்தனர்.
அவர்கள் நீரில் மூழ்கிய பாலசண்முகத்தை மீட்டு உடனடியாக கணபதி பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பால சண்முகத்தை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே பால சண்முகம் இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மலை யம்பாளையம் போலீசார் பாலசண்முகம் உடலை ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று வழக்கம்போல் காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தியது.
- இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தியது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரியவர்கள் குழந்தைகள் கடும் அவதி அடைந்தனர்.
இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று வழக்கம்போல் காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தியது. அனல் காற்று அதிக அளவில் இருந்ததால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர்.
இந்நிலையில் மாலை 5:45 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தன. இதைத் தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து 20 நிமிடம் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.
இதேபோல் கோபி, நம்பியூர், கவுந்தப்பாடி, பெருந்துறை, குண்டேரிபள்ளம், பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கோபிசெட்டிபாளையம் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இங்கு மாவட்டத்தில் அதிகபட்சமாக 24 மில்லி மீட்டர் மழை பதிவானது.ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கோபி -24, ஈரோடு -19, நம்பியூர் -14, கவுந்தப்பாடி -10.20, பெருந்துறை -8, குண்டேரிபள்ளம் -6, பவானிசாகர் -2.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், தளவாய்பேட்டை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட காடையாம்பட்டி, காலிங்கராயன் பாளையம் மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என பவானி மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
காடையாம்பட்டி, சேர்வராயன்பாளையம், திப்பிசெட்டி பாளையம்,மணக்காடு, பெரியார் நகர், கரை எல்லப் பாளையம், எலவமலை, அய்யம்பாளையம், காலிங்கராயன் பாளையம், லட்சுமி நகர், மேட்டுநாசுவம் பாளையம், மணக் காட்டூர், ஆர்.ஜி.வலசு, சின்னபுலியூர், ராமலிங்க நகர், பழையூர், சென்ன நாயக்கனூர், காமராஜ் நகர், மூலப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
- குடும்பச் செலவுக்காக மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெற்றிருந்தனர். ஆனால் அதை திருப்பிச் செலுத்த முடியாமல் மன வேதனையில் இருந்துள்ளனர்.
- இந்த நிலையில் மூர்த்தி சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்துவிட்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், பவானிசாகர், கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (50). இவரது மனைவி சாந்தா. இருவரும், குடும்பச் செலவுக்காக மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெற்றிருந்தனர்.
ஆனால் அதை திருப்பிச் செலுத்த முடியாமல் மன வேதனையில் இருந்துள்ளனர். இந்த நிலையில் மூர்த்தி சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்துவிட்டார்.
அவரை மீட்டு, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூர்த்தி உயிரிழந்தார்.
இதுகுறித்து, பவானிசாகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






