search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "assaulted"

    • சந்திரன் தினமும் குடித்து விட்டு வந்து தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
    • திருமணத்தின் போது வழங்கிய 40 பவுன் தங்க நகையை திரும்ப தர வேண்டும் என சரஸ்வதி கேட்டார்.

    கோவை

    கோவை இருகூர் அருகே உள்ள கே.ஜி.போஸ் நகரை சேர்ந்தவர் சந்திரன்(37). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், சரஸ்வதி(33) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதற்கிடையே சந்திரன் தினமும் குடித்து விட்டு வந்து தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் சரஸ்வதி தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் சரஸ்வதி தனது உறவினர்களுடன் கணவர் வீட்டிற்கு சென்று, தனது பொருட்கள் மற்றும் திருமணத்தின் போது வரதட்சணையாக வழங்கப்பட்ட 40 பவுன் தங்க நகை மற்றும் 3 கிலோ வெள்ளி ஆகியவற்றை திரும்ப தர வேண்டும் என கேட்டார்.

    அப்போது வீட்டில் இருந்த சந்திரன் மற்றும் அவரது தாயார் அம்சவேணி ஆகியோர் சரஸ்வதியை தகாத வார்த்தையால் பேசி தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் சந்திரனை கைது செய்தனர்.

    இதேபோல், சந்திரனின் தாய் அம்சவேணி தன்னை சரஸ்வதி மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து தாக்கியதாக புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • பிரேயரில் கிறிஸ்தவ பாடல் பாடும்படி கூறியதாக குற்றம்சாட்டி இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர்.

    மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம், தலேகான் தபாடே நகரில் பள்ளி முதல்வரை இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பள்ளி முதல்வர் அலெக்சாண்டர் கோட்ஸ் ரீட், மாணவர்களை பிரேயரில் கிறிஸ்தவ பாடல் பாடும்படி கூறியதாக  குற்றம்சாட்டி இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். மேலும், பள்ளியில் மாணவிகள் மற்றும் மாணவிகளுக்கான கழிவறைகளுக்கு இடையே கேமரா பொருத்தப்பட்டிருப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பள்ளிக்குள் நடந்த இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கிழிந்த சட்டையுடன் பள்ளி முதல்வர் படிக்கட்டில் ஏறுவதும், அவரை சிலர் துரத்துவதும் பதிவாகி உள்ளது. ஒரு நபர் முதல்வரை பின்னால் வந்து வேகமாக தாக்குகிறார். மற்றொரு நபர் அவரை தடுக்கிறார்.

    இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், பள்ளிக்கு விரைந்து சென்று அந்த கும்பலை தடுத்து நிறுத்தி நிலைமையை கட்டுப்படுத்தினர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் சாவந்த் கூறியதாவது:-

    ஒரு சில பெற்றோர்கள், இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து பள்ளி முதல்வரை தாக்கி அவரது ஆடைகளைக் கிழித்துள்ளனர். மேலும், ஆட்சேபம் தெரிவிக்கப்பட்ட கேமராவானது, கழிவறைக்கு வெளியே பொருத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தினமும் காலையில் ஒரு கிறிஸ்தவ பிரார்த்தனை பாடலை பாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக அந்த நபர்கள் கூறினர். ஆனால் "ஓ லார்ட்' என்று தொடங்கும் பொதுவான பிரார்த்தனை பாடல் இது. இது பைபிளில் உள்ள ஒரு வசனம் என்று பெற்றோர்கள் கூறினார்கள். ஆனால் ஜெபத்தில் மதமாற்றம் குறித்தோ அல்லது பைபிளில் இருந்து எந்த வாசகமோ குறிப்பிடப்படவில்லை.

    பெற்றோர்கள் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் பள்ளி தரப்பில் புகார் கொடுக்கப்படவில்லை. பள்ளி முதல்வரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி பள்ளி முதல்வர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதாகவும் பள்ளி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • தட்டிக்கேட்ட ஆசிரியைகளை வாலிபர்கள் தாக்க முயன்றனர்.
    • 2 வாலிபர்களும் அங்கு இருந்த தப்பி ஓடி விட்டனர்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் காளியாபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் நேற்று வழக்கம் போல வகுப்புகள் நடந்து கொண்டு இருந்தது. மாண வர்களுக்கு ஆசிரியை பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்.

    அப்போது ஆதியூர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் அளவுக்கு அதிகமான குடிபோதையில் பள்ளியின் அருகே நடந்து சென்றனர். அவர்கள் பள்ளியில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமியின் அருகே சென்றனர்.

    பின்னர் அந்த வாலிபர்கள் ஜன்னல் வழியாக கையை உள்ளே விட்டு சிறுமியின் கன்னத்தில் கிள்ளினர். அதில் ஒரு வாலிபர் இது தான் என்னுடைய ஆள் என கூறி சில்மிஷம் செய்தார்.

    இதனை பார்த்த வகுப்பு ஆசிரியை உடனடியாக வெளியே சென்று குடிபோதையில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபர்களை எச்சரித்தார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் வகுப்பு ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியை ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றனர். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் 2 வாலிபர்களும் அங்கு இருந்த தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து வடக்கிப்பா ளையம் போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளியில் தகராறு செய்தது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் என்பது தெரிய வந்தது.

    தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • கடந்த சில நாட்களாக குடிமகன்கள் குடித்துவிட்டு போதையில் பஸ் நிலையத்தில் படுத்து உறங்குவதும், ரகளையில் ஈடுபடுவதும் தொடர்கதையாகிவருகிறது.
    • பஸ் நிலையத்தில் குடிமகன்களால் தினம் தினம் பெண்கள், பள்ளி மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    தாளவாடி:

    தாளவாடி மலைப்பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.இப்பகுதி மக்கள் சத்தியமங்கலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், மைசூர், ஆகிய பகுதிகளுக்குச் செல்ல தாளவாடி பஸ் நிலையம் வந்து தான் செல்ல வேண்டும்.

    இதனால் தாளவாடி பஸ் நிலையம் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக குடிமகன்கள் குடித்துவிட்டு போதையில் பஸ் நிலையத்தில் படுத்து உறங்குவதும், ரகளையில் ஈடுபடுவதும் தொடர்கதையாகிவருகிறது.

    அதேபோல் காலை பஸ் நிலையத்தில் ஆண்கள் பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்பொழுது அங்கு வந்த 50 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் குடிபோதையில் தள்ளாடியபடியே பஸ் நிலையத்தில் நுழைந்தார்.

    அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் மீது தள்ளாடியபடி விழுந்து தகாத வார்த்தையில் பேசினார்.

    பின்னர் அங்கு நின்று இருந்த பெண்ணிடம் தகராறு செய்தார். இதை பார்த்த வயதான மூதாட்டி ஒருவர் குச்சியை எடுத்து அவரை விரட்டினார். ஆனால் போதையில் தள்ளாடியபடியே இருந்தார்.

    ஆனால் அங்கு இருந்த மற்றவர்கள் யாரும் இதை கண்டு கொள்ளவே இல்லை.

    பஸ் நிலையத்தில் குடிமகன்களால் தினம் தினம் பெண்கள், பள்ளி மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குஜராத் மாநிலத்தில் கார் விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜாவின் மனைவியை தாக்கிய போலீஸ் கான்ஸ்டபிள் சஞ்சய் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். #RavindraJadeja #Rivaba #Jadejawifeassault
    ராஜ்கோட்:

    இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா தற்போது ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வருகிறார். குஜராத் ஜாம்நகரில் இவருடைய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    ஜடேஜாவின் மனைவி ரீவா நேற்று முன்தினம் தனது தாயார் பிரபுல்லபாவுடன் ஜாம் நகரில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற கார், அங்கு வேகமாக வந்த போலீஸ்காரர் சஞ்சய் அகிர் என்பவரின் மோட்டார் சைக்கிள் மீது லேசாக மோதிவிட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர், ரீவாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அவரது கூந்தலை பிடித்து இழுத்து, தலையை கார் கண்ணாடி மீது பலமாக மோத வைத்து 3 முறை கன்னத்திலும் அறைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உடன் இருந்த அவரது தாயார் போலீசில் புகார் செய்தார்.

    இதற்கிடையே டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம் மற்றும் மாநில முதல்-மந்திரி அலுவலகம் உள்ளூர் எம்.எல்.ஏ. தர்மேந்திரசிங்கை தொடர்பு கொண்டு இது தொடர்பாக குறிப்பு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டன.

    இதையடுத்து, ஜாம்நகர் மாவட்ட போலீஸ் நிர்வாகம் ஜடேஜாவின் மனைவியை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்குப் பதிவு செய்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மாவட்ட போலீஸ் நிர்வாகம் சஞ்சய் அகிரை பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டது.  #RavindraJadeja #Rivaba #Jadejawifeassault
    ×