search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Engineering graduate"

    • மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றார்.
    • இதையடுத்து போலீசார் கார்த்தியை கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி, கருப்பகவுண்டன் புதூரை சேர்ந்தவர் சக்திவேல், இவரது மனைவி விஜயலட்சுமி (50).

    கடந்த 18-ந்தேதி அன்று சக்திவேல் தனது தோட்டத்து வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் மதியம் சுமார் 2 மணியளவில் விஜயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    மதியம் டிவி பார்த்துக் கொண்டிருந்த விஜயலட்சுமி தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து விஜயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.

    இச்சம்பவம் குறித்து விஜயலட்சுமி ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட ஆப்பக்கூடல் போலீசார், அத்தாணி சாலையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை செய்தனர். அப்போது நீல நிற சட்டை அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார் என்பதை கண்டறிந்தனர்.

    தொடர்ந்து போலீசார் அத்தாணி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றார். அப்போது அவரை பிடித்து விசாரணை செய்தனர்.

    இதில் அவர் கோபிசெட்டிபாளையம், கள்ளிப்பட்டி அருகேயுள்ள வளையபாளையம், கட்டபொம்மன் தெரு பகுதியைச் சேர்ந்த கார்த்தி (29) என்பது தெரியவந்தது. இவர்தான் கருப்பகவுண்டர் புதூர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமியிடம் தங்க சங்கிலியை கொள்ளை அடித்து விட்டு தப்பியோடி–யது தெரிந்தது.

    தொடர்ந்து கார்த்திக்கிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பொறியியல் பட்டதாரியான கார்த்திக் திருமணமானவர், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது.

    அப்போது ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து கடனாளி ஆனதால் கம்பெனிக்கு செல்லாமல் கடந்த 3 மாதமாக சுற்றி திரிந்தது தெரிந்தது.

    அப்போது கடன் கொடுத்தவர்கள் கடனைக் கேட்டு நெருக்கடி செய்யவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முடிவு செய்து தனியாக இருந்த பெண்ணி–டம் தங்க செயினை கொள்ளை அடித்து சென்று தெரிய வந்தது.

    மேலும் அந்த செயினை கோபியில் உள்ள தனியார் அடகு கடையில் அடமானம் வைத்து பணத்தை பெற்ற–தும் போலீசார் விசாரணை–யில் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து போலீசார் கார்த்தியை கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி–னர். பின்னர் அவர் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருள் முகிலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • படிப்பை முடித்துவிட்டு அருள் முகிலன் பல்வேறு இடங்களில் வேலை தேடி வந்துள்ளார்.

    நெல்லை:

    வீரவநல்லூர் அருகே உள்ள முனைசேகரகுடியிருப்பு ஆலடி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் அருள்முகிலன்(வயது 25). இவர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த வீரவநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று அருள்முகிலன் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். படிப்பை முடித்துவிட்டு அருள் முகிலன் பல்வேறு இடங்களில் வேலை தேடி வந்துள்ளார்.

    ஆனால் வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கல்வி கடன் கட்ட முடியாததால் என்ஜினீயரிங் பட்டதாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த குளத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் படிக்கும் போது குமாரபாளையத்தில் உள்ள ஒரு வங்கியில் கல்வி கடன் பெற்றதாக கூறப்படுகிறது. போதிய வருமானம் இல்லாததால் பிரசாத் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கி சார்பில் நடந்த சிறப்பு கடன் தீர்ப்பு முகாமில் வட்டியுடன் சேர்த்து ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்து 846-ஐ திருப்பி செலுத்த வேண்டும் என வங்கி நிர்வாகம் பிரசாத்துக்கு எச்சரிக்கை விடுத்தது.

    இதனால் மன வேதனை அடைந்த பிரசாத் நேற்று மாலை பல்லக்காபாளையம் பெரியகாப்ரா மலை பகுதியில் சேலையால் தூக்கில் தொங்கினார். அப்போது அங்கு ஆடு மேய்த்து கொண்டு இருந்த பெண் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் பிரசாத்தை காப்பாற்றினார்.

    பிரசாத் தற்கொலைக்கு முயன்ற இடத்தில் உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் அவர் என் மரணத்துக்கு பிறகாவது என்னை போல் கல்வி கடன் வாங்கி வங்கி நிர்வாகத்தால் மிரட்டப்படும் நிலை மாறி நல்ல தீர்வு கிடைக்கட்டும் என்று எழுதி இருந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×