ஈரோடு மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை

ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று வழக்கம்போல் காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தியது. இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.
ஈரோடு மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தியது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரியவர்கள் குழந்தைகள் கடும் அவதி அடைந்தனர்.

இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று வழக்கம்போல் காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தியது. அனல் காற்று அதிக அளவில் இருந்ததால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர்.

இந்நிலையில் மாலை 5:45 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தன. இதைத் தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து 20 நிமிடம் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.

இதேபோல் கோபி, நம்பியூர், கவுந்தப்பாடி, பெருந்துறை, குண்டேரிபள்ளம், பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கோபிசெட்டிபாளையம் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இங்கு மாவட்டத்தில் அதிகபட்சமாக 24 மில்லி மீட்டர் மழை பதிவானது.ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

கோபி -24, ஈரோடு -19, நம்பியூர் -14, கவுந்தப்பாடி -10.20, பெருந்துறை -8, குண்டேரிபள்ளம் -6, பவானிசாகர் -2.

X

Maalai Malar
www.maalaimalar.com