search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A person who"

    • ஈரோடு-சக்தி மெயின் ரோட்டை கடக்க முயன்று உள்ளார்.
    • அந்த வழியாக வந்த ஒரு வேன் எதிர்பாராத விதமாக ராசான் மீது மோதியது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே முத்து காளிமடை பகுதியை சேர்ந்தவர் ராசான் (55). இன்று காலை குள்ளம்பாளையம் பிரிவு ஈரோடு-சக்தி மெயின் ரோட்டை கடக்க முயன்று உள்ளார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேன் எதிர்பாராத விதமாக ராசான் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக வந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லி மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராசான் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவில் எதிரே உள்ள காவிரி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தார் அப்போது அவர் திடீரென நீரில் மூழ்கினார்.
    • ரில் மூழ்கிய பாலசண்முகத்தை மீட்டு உடனடியாக கண பதி பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    கொடுமுடி:

    கோவை மதுக்கரை மார்க்கெட்டு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (53). இவர் மன்னாதம்பாளை யம் குலவிளக்கு அம்மன் கோவிலில் கிடாய் வெட்டி பொங்கல் வைப்பதற்காக பஸ், கார் மூலம் உறவினர்கள், நண்பர்கள் 150 பேர் வந்தனர்.

    இவர்களுடன் இவரது உறவினர் கோவை மதுக்கரை அன்பு நகரை சேர்ந்த பாலசண்முகம் (44) என்பவரும் வந்து இருந்தார்.இவர் கோவில் எதிரே உள்ள காவிரி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தார் அப்போது அவர் திடீரென நீரில் மூழ்கினார்.

    இதை கண்ட அக்கம் பக்கம் இருந்தவர்கள் சத்தம் போட்டு உள்ளார்கள். உடனே மொடக்குறிச்சி தீயனைப்புத் துறைக்கு தகவல் கொடுத்து உள்ளார்கள். சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து வந்தனர்.

    அவர்கள் நீரில் மூழ்கிய பாலசண்முகத்தை மீட்டு உடனடியாக கணபதி பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பால சண்முகத்தை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே பால சண்முகம் இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மலை யம்பாளையம் போலீசார் பாலசண்முகம் உடலை ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×