வேன் மோதி சாலையை கடந்தவர் பலி

ஈரோடு-சக்தி மெயின் ரோட்டை கடக்க முயன்று உள்ளார்.அந்த வழியாக வந்த ஒரு வேன் எதிர்பாராத விதமாக ராசான் மீது மோதியது.
வேன் மோதி சாலையை கடந்தவர் பலி
Published on

கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே முத்து காளிமடை பகுதியை சேர்ந்தவர் ராசான் (55). இன்று காலை குள்ளம்பாளையம் பிரிவு ஈரோடு-சக்தி மெயின் ரோட்டை கடக்க முயன்று உள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேன் எதிர்பாராத விதமாக ராசான் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக வந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லி மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராசான் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com