என் மலர்
ஈரோடு
- குறைந்தபட்சம் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
- தி.மு.க. தொண்டர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். தேர்தல் பணி குறித்து தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் ஆய்வு செய்தார்.
எனது 60 ஆண்டு கால அரசியலில் இந்தியாவில் மிகச்சிறந்த முதல்வராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது சுதந்திர தினத்தில் முதல்வர் கொடி ஏற்றுதல் என மாநிலத்திற்கான கூடுதல் அதிகாரங்களை பெற்றார். அப்போது இந்தியாவில் உள்ள அத்தனை மாநிலங்களும் கருணாநிதியை திரும்பி பார்த்தனர். அதேபோன்று நிலையை அவரது மகனான ஸ்டாலினும் பெற்றுள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாட்டிலேயே சிறந்த முதல்வராக திறம்பட பணியாற்றி வருகிறார். கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் டெல்லி சென்று பிரதமர்களை சந்தித்து எத்தனையோ திட்டங்களையும் உரிமைகளையும் பெற்று தந்தார்.
ஆனால் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிருந்தபடியே டெல்லியை ஆட்டி படைக்கிறார். தந்தையை மிஞ்சும் தனயனாக கருணாநிதியை மிஞ்சும் மகனாக மு.க.ஸ்டாலின் உள்ளார்.
இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். குறைந்தபட்சம் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இதற்காக தி.மு.க. தொண்டர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும். வீடு, வீடாக சென்று வாக்காளர்களை நேரடியாக சந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கருணாநிதிக்காக மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த துரைமுருகன்,
கருணாநிதி தனது எழுத்துக்களால் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக பாடுபட்டுள்ளார். அவரின் பேனாவுக்கு வலிமை ஜாஸ்தி.
அண்ணாவே அவரது எழுத்துக்களை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளார். அப்படிப்பட்ட பேனாவை பாக்கெட்டுக்குள் வைப்பது சரியல்ல. அதை நினைவு சின்னமாக கொண்டு வருவதில் தவறு ஏதும் இல்லை.
தேர்தல் களத்தில் டாக்டர் பட்டம் பெற்ற தி.மு.க. முன்னணி தலைவர்கள் இந்த தேர்தலில் பணியாற்றுவதால் எதிரணியை பற்றி கவலை இல்லை. எதிர்க்கட்சியினர் அளிக்கும் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் பதில் சொல்லும். எதிர்க்கட்சிகள் என்ன சொன்னாலும் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார்.
- வ.உ.சி. பூங்காவில் இன்று காலை காதல் ஜோடிகள் பலர் வந்திருந்தனர்.
- அவர்கள் பூக்கள் கொடுத்து காதலர் தின வாழ்த்துக்களை பறி மாறி கொண்டனர்.
ஈரோடு:
காதலர் தினத்தை யொட்டி ஈரோடு மாவட்ட த்தில் பார்க் மற்றும் சுற்றுலா தலங்களில் காதலர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதையொட்டி ஈரோடு வ.உ.சி. பூங்காவில் இன்று காலை காதல் ஜோடிகள் பலர் வந்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் ரோஜா பூக்கள் கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
இதையடுத்து இளம் காதலர்கள் சிலர் ஊஞ்சல் விளையாடி மகி ழ்ந்தனர். இதை தொடர்ந்து நேரம் செல்ல செல்ல காதலர்கள் அதிகளவில் வந்தனர். அவர்கள் பூங்காவில் அமர்ந்து நீண்ட நேரம் பேசி கொண்டு இருந்தனர்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட பொதுமக்க ளும் ஏராளமானோர் தின மும் வந்து கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கிறார்கள்.
மேலும் வாலிபர்கள் மற்றும் இளம்பெண்களும் பலர் வந்து அணைைய சுற்றி பார்த்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் காதலர் தினத்தை யொட்டி இன்று காலை முதலே காதலர்கள் பலர் கொடிவேரி தடுப்பணைக்கு வந்தனர். அவர்கள் அணையில் கொட்டும் தண்ணீரை ரசித்து செல்பி எடுத்து கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் பூக்கள் கொடுத்து காதலர் தின வாழ்த்துக்களை பறி மாறி கொண்டனர்.
இதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கோபிசெட்டி பாளையம் மற்றும் கொடி வேரி அணை பகுதியில் ரோந்து சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண் காணித்து வருகிறார்கள்.
இதே போல் காதலர் தினத்தை யொட்டி சத்திய மங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை பூங்கா வுக்கு இன்று ஏராளமான காதல் ஜோடியினர் இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் வந்திருந்தனர்.
மேலும் புதிதாக திருமண மான இளம் ஜோடியினர் பலரும் பூங்காவுக்கு வந்த னர். இதை தொடர்ந்து நேரம் செல்ல செல்ல பூங்காவில் காதலர்களின் கூட்டம் அலை மோதியது.
தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்கள் காதலர்களுக்கு ரோஜா பூ கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் அணை பூங்காவில் சறுக்கு மற்றும் ஊஞ்சல் விளை யாடியும் மகிழ்ந்தனர்.
இதையடுத்து அணையில் கொட்டும் தண்ணீரை ரசித்துபடி சென்றனர். மேலும் காதலர்கள் பலர் அங்கு கொட்டும் தண்ணீர் அருகே நின்று செல்பி எடுத்து கொண்டனர்.
இதை தொடர்ந்து அணை பகுதியில் விற்பனை செய்ய ப்படும் மீன் வகைகளையும் வாங்கி ருசித்து விட்டு சென்றனர்.
இதனால் பவானிசாகர் அணை பகுதி முழுவதும் இைளஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஜோடி, ஜோடி யாக வலம் வந்த வண்ணம் இருந்தனர். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போட ப்பட்டு கண்காணி க்கப்பட்டு வருகிறது.
- ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அதிகாரிகள் நோட்டீசு வழங்கினர்.
- இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி சத்தியமங்கலம் மெயின் ரோடு பகுதியில் நகராட்சி க்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. மேலும் அந்த பகுதியில் தினசரி மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இந்நிலையில் நகராட்சி சார்பில் நகராட்சி கடைகள் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அதிகாரிகள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நோட்டீசு வழங்கினர். இதற்கு கடை காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இதை கண்டித்து நகராட்சி கடை குத்தகைதாரர்கள் சங்கம் மற்றும் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் அனைத்து வியா பாரிகளின் வாழ்வாதா ரத்தை பாதிக்கும் நகர மன்ற தீர்மானத்தினை கண்டித்தும் நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட் கடை களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையொட்டி இன்று காலை பு.புளியம்பட்டி பகுதியில் தினசரி மார்க்கெட்டு கடைகள் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.
நகராட்சி கடைகள் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- குடிபோதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி விட்டார்.
- சென்னிமலை தீயணைப்பு துறையினர் உடனடியாக அங்கு சென்று உடலை தேடி மீட்டனர்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (26). இவர் ஆட்டோ ஆக்டிங் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 5 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து ஆகியுள்ளது.
தற்போது வெங்கடேஷ் தாயாருடன் தனியாக வசித்து வருகிறார்.
குடிப்பழ க்கத்துக்கு அடிமையான அவர் சம்பவத்தன்று குடிபோதையில் மேலப்பாளையம் பகுதியில் ஊருக்கு பொதுவான கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி விட்டார்.
இந்த கிணறு சுமார் 100 அடி ஆழம் உடையது. அதில் சுமார் 60 அடி தண்ணீரும் உள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சென்னிமலை தீயணைப்பு துறையினர் உடனடியாக அங்கு சென்று உடலை தேடி மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- படுக்கை அறை காட்சிகள் வீடியோவில் பதிவு செய்து வைத்து உள்ளேன்.
- என்னிடம் கேள்வி கேட்டால் அந்த காட்சிகளை வெளியிடுவேன் என்று மிரட்டினார்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் ராஜன் நகரை சேர்ந்தவர் லிவ்விங்ஸ்டன் ஜெயபால் (வயது 30). இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் பொம்மம்பட்டியை சேர்ந்த அபிதா (23) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
லிவ்விங்ஸ்டன் ஜெயபால் தான் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என்று திருமணத்தின் போது கூறியதால் அவருக்கு வரதட்சணையாக ரூ.1 லட்சம் மற்றும் ரூ.20 பவுன் நகையை பெண் வீட்டார் கொடுத்தனர்.
இந்த நிலையில் லிவ்விங் ஸ்டன் ஜெயபால் மத்திய அரசு அதிகாரி இல்லை என தெரிய வந்தது. இது பற்றி அபிதா கணவரிடம் கேட்டார்.
அப்போது லிவ்விங்ஸ்டன் ஜெயபால் நாம் 2 பேர் ஒன்றாக இருந்த படுக்கை அறை காட்சிகள் வீடியோவில் பதிவு செய்து வைத்து உள்ளேன். அதை ஏற்கனவே 2 பேர் பார்த்து உள்ளார்கள்.
என்னிடம் கேள்வி கேட்டால் அந்த காட்சிகளை வெளியிடுவேன் என்று மிரட்டினார்.
மேலும் லிவ்விங்ஸ்டன் ஜெயபாலின் தாயார் ஜெயா (52), தந்தை செல்ல பாண்டி (55), அக்கா கிறிஸ்டி ஞானசெல்வி (35), தங்கை கிரேட்டர் எஸ்தா ஆகிய 4 பேரும் அபிதாவை வரதட் சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து கோபிசெட்டி பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய த்தில் அபிதா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லிவ்விங்ஸ்டன் ஜெயபாலை கைது செய்த னர்.
தொடர்ந்து அவரை கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் போலீ சார் அடைத்தனர்.
மேலும் ஜெயா (52), செல்ல பாண்டி (55), கிறிஸ்டி ஞானசெல்வி (35), கிரேட்டர் எஸ்தா ஆகிய 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் 4 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
- பட்டப்பகலில் கொலை, கொள்ளை, சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது.
- மக்கள் அச்சத்தோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு பெரியார் வீதியில் இன்று காலை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரம் செய்தார். அப்போது மேளம் அடித்து வாக்கு சேகரித்தார். அவர் மேளம் அடிக்க திடீரென ஒரு பெண் நடனம் ஆடினார்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மனதால் வாக்காளர்களை கவர களப்பணி ஆற்றி வருகிறோம். ஆளும் கட்சி 33 அமைச்சர்களும் முகாமிட்டு பணத்தை வாரி இறைத்து வருகிறார்கள். மனமா, பணமா என்றால் மனமே இரட்டை இலை சின்னம் வெற்றி பெறும் என்ற மன உறுதி கிழக்கு தொகுதி வாக்காளர்களிடம் இருக்கிறது.
மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சராக வரவேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார். மீண்டும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி அமைவதற்கு அச்சாரமாக இந்த தொகுதியில் அ.தி.மு.க.வின் வெற்றி இருக்கும்.
இரண்டு ஆண்டு கால தி.மு.க. மக்கள் விரோத அரசின் வேதனைகளை மூடி மறைக்க பணத்தை அவர்கள் வாரி இறைத்து கொண்டிருக்கிறார்கள். ஆடு, மாடுகளை போல் மக்களை பட்டியில் அடைத்திருப்பது போல் வைத்திருக்கிறார்கள். அதிகாரம் எல்லை மீறி செல்கிறது. அதிகாரிகள் வேண்டுமானால் அதிகாரத்திற்கு பயந்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கலாம்.
ஆனால் மக்கள் இதனை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் தேர்தலில் நியாயத்தின் பக்கம், ஜனநாயகத்தின் பக்கம் நின்று சாமானிய தொண்டனான தென்னரசுக்கு வாக்களிப்பார்கள். அமைச்சர்கள் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
தேர்தல் களத்தை விட்டு ஓடுவதற்கு அச்சாரமாக மின்சாரத்துறை அமைச்சர் ஓடுகிறார். நாளை தேர்தல் களத்தில் எல்லோரும் ஓடுகின்ற காட்சி விரைவில் வரும். பட்டப்பகலில் கொலை, கொள்ளை, சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது. மக்கள் அச்சத்தோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அச்சத்தை போக்கும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காலை வெகு நேரமாகியும் பன்ச்சம் ஓரன் எழுந்திருக்கவில்லை.
- மனைவி கங்கிடோபோ கணவரை எழுப்ப முயன்ற போது அவர் அசைவற்று கிடந்தார்.
ஈரோடு:
ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி மாவட்டம், டெங்கரியா பகுதியை சேர்ந்தவர் பன்ச்சம் ஓரன் (28). இவரது மனைவி கங்கிடோபோ (29). இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
பன்ச்சம் ஓரன் கடந்த 2 ஆண்டுகளாக ஈரோடு, நசியனூர் ரோடு, நல்லி தோட்டம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர். பின்னர் காலை வெகு நேரமாகியும் பன்ச்சம் ஓரன் எழுந்திருக்கவில்லை.
இதையடுத்து மனைவி கங்கிடோபோ கணவரை எழுப்ப முயன்ற போது அவர் அசைவற்று கிடந்தார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பன்ச்சம் ஓரனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் பன்ச்சம் ஓரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- இடைத்தேர்தலில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு பணநாயகம் அதிகமாக விளையாடுகிறது.
- தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் தினமும் பிரியாணியும் மதுவும் கொடுத்து ஓட்டு கேட்க அழைத்து செல்கிறார்கள்.
ஈரோடு:
ஈரோட்டில் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து மாநில துணை செயலாளர் சுதீஷ் இன்று காலை பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தின் போது தனக்கோடி லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ போட்டு குடித்தார். மேலும் பொதுமக்களுக்கும் டீ போட்டு கொடுத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் இளைஞர், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். எனவே அவருக்கு இந்த முறை வாக்களித்து வெற்றி பெற செய்தால் உங்களின் கோரிக்கைகள் நிறைவேற சட்டசபையில் குரல் கொடுப்பார்.
இந்த தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஏற்கனவே இங்கு இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். ஆனால் பொதுமக்களின் கோரிக்கை எதையும் அவர் நிறைவேற்றவில்லை. அதேபோல தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனும் முதியவர்.
இந்த இடைத்தேர்தலில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு பணநாயகம் அதிகமாக விளையாடுகிறது. தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் தினமும் பிரியாணியும் மதுவும் கொடுத்து ஓட்டு கேட்க அழைத்து செல்கிறார்கள். இதை பார்த்த பொதுமக்களிடையே அந்த கட்சிகள் மீது அதிருப்தி ஏற்பட்டு உள்ளது.
நாங்கள் ஓட்டு கேட்க செல்லும் போது எங்கள் கட்சி தொண்டர்களுடன் கட்சி தலைவர் விஜயகாந்தின் விசுவாசிகளான பொதுமக்களும் வருகிறார்கள். ஓட்டு பதிவின் கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு தங்கக்காசு மற்றும் பணம் கொடுக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.
இதையெல்லாம் மீறி எங்களது கட்சி வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நீங்களும் எங்களுக்கு ஆதரவளித்து முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பயிற்சியில் முதன்மை வாக்குச்சாவடி அலுவலர் ஒருவர் மற்றும் 3 வாக்குச்சாவடி அலுவலர்கள் என 1,206 பேர் பங்கேற்றனர்.
- இறுதி பயிற்சி நாளன்று ஒவ்வொரு பணியாளர்களுக்கும் எந்தந்த வாக்குச் சாவடிகளில் பணியாற்ற வேண்டும் என்கிற ஆணை வழங்கப்படும்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 238 வாக்குச்சாவடி மையங்கள் 52 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குச்சாவடி மையங்களில் 1,206 அலுவலர்கள் பணியாற்ற உள்ளார்கள். இவர்களுக்கு 3 கட்ட பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கடந்த 6-ந் தேதி முதல் கட்ட பயிற்சி நடைபெற்றது. ஓட்டு பதிவு அன்று செயல்படுத்தப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் முதன்மை வாக்குச்சாவடி அலுவலர் ஒருவர் மற்றும் 3 வாக்குச்சாவடி அலுவலர்கள் என 1,206 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் எப்படி கையாள்வது, பழுது ஏற்பட்டால் அவற்றை எப்படி சரி செய்வது மற்றும் வாக்காளர் பட்டியல் போன்றவற்றை எவ்வாறு கையாளுவது என்பது பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வரும் 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடை பெறுகிறது. அதனைத் தொடர்ந்து வரும் 26-ந் தேதி 3-ம் கட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளது. இறுதி பயிற்சி நாளன்று ஒவ்வொரு பணியாளர்களுக்கும் எந்தந்த வாக்குச் சாவடிகளில் பணியாற்ற வேண்டும் என்கிற ஆணை வழங்கப்படும்.
- ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் களைகட்டியுள்ளது.
- அனைத்து அரசியல் கட்சியினருமே இந்த பிரசாரத்தில் கிழக்கு தொகுதியில் ஓட்டு இருப்பவர்களை மட்டுமே அழைத்து செல்கிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் களைகட்டியுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சியினரின் பிரசாரம் நடந்து வருகிறது. கையில் கட்சி கொடி, சின்னத்துடன் வீதிவீதியாக மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
ஒவ்வொரு பகுதிக்கும் முக்கிய பிரமுகர்கள் வருவதற்கு முன்பே உள்ளூர் கட்சிகாரர்கள் மூலம் பொதுமக்களுக்கு தகவல் தரப்படுகிறது. அவர்கள் முக்கிய பிரமுகர்களை வரவேற்க கையில் ஆரத்தி, கும்பம், பூக்களுடன் வரிசையாக காத்திருக்கிறார்கள்.
ஓட்டு கேட்டு வரும் முக்கிய பிரமுகர்கள் வந்ததும் ஆரத்தி சுற்றும் பெண்களுக்கு தட்டில் ஒரு அரசியல் கட்சியினர் ரூ.100-ம் மற்றொரு அரசியல் கட்சியினர் ரூ.200-ம் கொடுக்கிறார்கள். இதே போல் பூ தூவி வரவேற்பு கொடுக்கும் பெண்களுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை கொடுக்கப்படுகிறது.
அதோடு இல்லாமல் பிரசாரத்துக்கு சென்றால் ரூ.500, தேர்தல் பணிமனையில் அமர்ந்தால் ரூ.500, கட்சி துண்டு பிரசுரம் வழங்கினால் ரூ.500, கொடி, சின்னத்துடன் சென்று ஆதரவு திரட்டினால் ரூ.500 என பண மழை கொட்டி வருகிறது.
அனைத்து அரசியல் கட்சியினருமே இந்த பிரசாரத்தில் கிழக்கு தொகுதியில் ஓட்டு இருப்பவர்களை மட்டுமே அழைத்து செல்கிறார்கள். ஒரு வீட்டில் மனைவிக்கு மட்டும் ஓட்டு இருந்தால் அவர் பிரசாரத்துக்கு சென்று விட அவரது கணவர் வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்து கொள்கிறார். மொத்தத்தில் கிழக்கு தொகுதி முழுவதும் பண மழை பெய்து வருகிறது. ஆரத்தி எடுப்பது முதல் பிரசாரம் செல்வது வரை பொதுமக்கள் ஆர்வத்துடன் காத்து உள்ளனர்.
- பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை, நீட் தேர்வு ரத்து, கியாஸ் மானியம் போன்ற வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை.
- எடப்பாடி ஆட்சிக் காலத்தில் 13 மருத்துவக்கல்லூரிகள் வந்தன.
ஈரோடு:
ஈரோடு நேரு வீதியில் அ.தி.முக. வேட்பாளரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு ஆளும் கட்சியினருக்கு அதிர்ச்சி வைத்தியமாக இருக்க வேண்டும். தி.மு.க. என்றாலே ஊழல், கட்டப்பஞ்சாயத்து, போதை பொருள் நடமாட்டம், சட்ட ஒழுங்கு சீரழிவு இப்படி சொல்லி கொண்டே போகலாம். இதுக்கு முடிவு கட்ட ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நல்ல வாய்ப்பாக இருக்கும். தி.மு.க.வினர் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றினார்கள்.
பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை, நீட் தேர்வு ரத்து, கியாஸ் மானியம் போன்ற வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை. எடப்பாடி ஆட்சிக் காலத்தில் 13 மருத்துவக்கல்லூரிகள் வந்தன. அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு போன்றவற்றை கொண்டு வந்தார். கடந்த முறை த.மா.கா போட்டியிட்டது. இந்த முறை அ.தி.மு.க. போட்டியிடுகிறது. காரணம் பொதுமக்கள் விடிவு காலம் பிறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் அ.திமு.க. போட்டியிடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருமகன் ஈவெரா தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.
- 18 மாதத்திற்குள் நகராட்சி துறை மூலம் ரூ.165 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை நிறைவேற்றி உள்ளார்.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். குமரி ஆனந்தனுக்கு பிறகு மூத்த தலைவராக இளங்கோவன் உள்ளார். அவர் போட்டியிடுவது பெருமையாக உள்ளது.
தேர்தல் அறிவித்த உடனே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கினார். இதுதான் கூட்டணி தர்மம். நட்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு இதுதான். ஆனால் எதிர்க்கட்சியில் நடந்தது என்ன.
கடந்த முறை தமிழ் மாநில காங்கிரசுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை இந்த முறை ஜி.கே.வாசனிடம் இருந்து எடப்பாடி பறித்துக் கொண்டார். இளங்கோவனுக்கு எழுச்சி பெருகி உள்ளது. தி.மு.க. அமைச்சர்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.
திருமகன் ஈவெரா இந்த தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். 18 மாதத்திற்குள் நகராட்சி துறை மூலம் ரூ.165 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை நிறைவேற்றி உள்ளார். இது கற்பனை செய்ய முடியாத வரலாற்று சாதனை.
இதேபோல் ரூ.207 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. மேலும் 3-வது கட்டமாக ரூ.600 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன. இவ்வளவு திட்டங்களையும் குறுகிய காலத்தில் திருமகன் நிறைவேற்றியுள்ளார்.
அவர் விட்டு சென்ற பணிகளை அவரது தந்தை நிறைவேற்றுவார். சாலை திட்ட பணிக்காக ஒரு நாள் இரவு முழுவதும் அமர்ந்து வேலைகளை முடித்துக் கொடுத்தவர் திருமகன்.
முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்தி தேர்தலில் பணியாற்றி வருகிறார். உலகில் சிறந்த முதல்வர்களில் அவர் தலை சிறந்த முதல்வராக திகழ்ந்து வருகிறார். அவருக்கு எனது பாராட்டுக்கள்.
பாரதிய ஜனதா கட்சி இந்த தேர்தலில் ஒரு சிரமமான நிலையில் உள்ளது. முதலில் பிளவு பட்ட அ.தி.மு.க.வை சரி செய்ய முயன்றது. எடப்பாடி பா.ஜ.க.விடமிருந்து விலகி தேர்தலை சந்திப்போம் என்றார்.
இதை ஏன் அவர் அறிவித்தார். பாரதிய ஜனதா படம், மோடி படமோ இருந்தால் தொகுதிக்குள் மக்கள் விட மாட்டார்கள் என கருதி அவ்வாறு அறிவித்தார். தேர்தல் முடிந்ததும் மீண்டும் இணைந்து விடுவார். இது ஒரு நாடகம் தான்.
நாங்கள் இந்த தேர்தலில் மக்களோடு பணியாற்றி வருகிறோம். இது ஒரு ஜனநாயக நாடு. யாரையும் அடைத்து வைக்க முடியாது. அன்பால் அரவணைத்து வருகிறோம். எங்கள் கூட்டணி லட்சிய கூட்டணி. அவர்கள் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. கூட்டணி தர்மபடி எங்களுக்கு மீண்டும் போட்டியிட முதல்-அமைச்சர் வாய்ப்பளித்தார்.
ஆனால் எதிர்க்கட்சி தரப்பில் கூட்டணி தர்மத்தை அவர்கள் கடைப்பிடித்தார்களா? இதிலிருந்தே யார் கூட்டணியை மதிக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.
சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வால் இந்த தேர்தலில் எந்த ஒரு விளைவும் ஏற்படாது. சில திட்டங்களை முதலில் தொடங்கும் போது கசப்பாக தான் இருக்கும். ஆனால் அதன் மூலம் வரும் வருவாய் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த முடியும்.
பேனா சின்னம் வைக்கும் விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் வயிற்று எரிச்சல் அடைகிறார்கள். உலகில் எல்லா இடத்திலும் இது போன்று நினைவுச் சின்னம் வைக்கப்பட்டு வருகிறது.
பிரபாகரன் உயிரோடு இருப்பதாக சொல்வதை வைகோ, திருமாவளவன் , சீமான் போன்றவர்கள் ஏற்கவில்லை. அவர் உயிரோடு இருந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி தான். புதுக்கோட்டை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






