என் மலர்
ஈரோடு
- 7½ லட்சம் முதியோர்களின் உதவித்தொகையை ரத்து செய்து இருக்கிறது.
- ஆண்டுக்கு 6 சதவீதம் மின்சார கட்டணத்தை உயர்த்துகிறார்கள்.
ஈரோடு :
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். வீரப்பம்பாளையம், பெரியவலசு நால்ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா, வீரப்பன்சத்திரம் ஆகிய பகுதிகளில் அவர் வாக்குகள் கேட்டு பேசினார்.
வீரப்பம்பாளையம் பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-
21 மாதகாலமாக மக்களை சந்திக்க வராத அமைச்சர்கள், இப்போது தேர்தல் என்றதும் இங்கேயே முகாம் அமைத்து வீதிவீதியாக வருகிறார்கள். மக்களை ஏமாற்ற பரோட்டா போடுவது, வடை சுடுவது என்று ஏமாற்றுகிறார்கள். பரோட்டா போடவும், டீ போடவுமா நீங்கள் வெற்றி பெற்றீர்கள். இந்த கிழக்கு தொகுதிக்கு நல்ல திட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்றுதானே மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் அதை செய்யாமல் மக்களை ஏமாற்றுகிறீர்கள். இப்போதும் ஒரு அமைச்சராவது தாங்கள் செய்த ஒரு திட்டத்தை பற்றி கூற முடியுமா?.
இங்கு மக்களை ஆடு, மாடுகள் போன்று கொட்டகைக்குள் அடைத்து வைத்திருக்கிறார்கள். 120 இடங்களில் அப்படி அடைக்கப்பட்டு உள்ளனர். நான் பிரசாரத்துக்கு வந்திருப்பதால் அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் கிடைத்து இருக்கிறது. 2 நேரம் பிரியாணியும் கொடுக்கிறார்கள். மக்களே அது உங்கள் பணம். நீங்கள் செலுத்திய வரிப்பணம் உங்களிடமே திரும்பி வருகிறது. அதை வாங்கிக்கொள்ளுங்கள். ஓட்டு மட்டும் கே.எஸ்.தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு போடுங்கள்.
மக்களுக்கு பணம் கிடைப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். நான் வந்ததால் அதிகமாக கொடுக்கப்படுவதும் மகிழ்ச்சிதான். ஆனால் எப்படி நீங்கள் அடைத்து வைத்தாலும் மக்கள் அ.தி.மு.க.வுக்குத்தான் வாக்களிப்பார்கள். கண்ணுக்கு எட்டிய தூரம்வரை அ.தி.மு.க.வினரை காண வில்லை என்று காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். அப்படி என்றால் எதற்காக இத்தனை அமைச்சர்கள் இங்கேவர வேண்டும். அ.தி.மு.க.வை சந்திக்க பயம். அவர்களின் பயம் நம் வெற்றியை உறுதி செய்து விட்டது.
21 மாதத்தில் எந்த ஒரு திட்டத்தையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை. ஆனால், 7½ லட்சம் முதியோர்களின் உதவித்தொகையை ரத்து செய்து இருக்கிறது.
வீட்டு வரியை உயர்த்தமாட்டோம் என்று தேர்தலுக்கு முன்பு அறிவித்து விட்டு 100 சதவீதம், வீடு, கடை வரிகளை உயர்த்தி இருக்கிறார்கள். ஆண்டுக்கு 6 சதவீதம் மின்சார கட்டணத்தை உயர்த்துகிறார்கள். இதுதான் திராவிட மாடல். இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல். கே.எஸ்.தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
வழி நெடுகிலும் மக்களை சந்தித்து ஓட்டுகள் கேட்ட முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2-வது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) பிரசாரம் மேற்கொள்கிறார்.
- வாக்குப்பதிவு வருகின்ற 27-ந் தேதி நடைபெறுகிறது. மேலும் பதிவானவாக்குகள் எண்ணிக்கை வருகின்ற மார்ச் மாதம் 2-ந் தேதி நடைபெறவுள்ளது.
- வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகளை காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு கிழக்கு சட்ட மன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 27-ந் தேதி நடைபெறுகிறது. மேலும் பதிவானவாக்குகள் எண்ணிக்கை வருகின்ற மார்ச் மாதம் 2-ந் தேதி நடைபெறவுள்ளது.
அதன்படி ஈரோடு சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகளை காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வாக்குப்பதிவு முடிவுற்று வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் பாதுகாத்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளன்று மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, உதவி கலெக்டர் (பயிற்சி) பொன்மணி, பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் கிருஷ்ண மூர்த்தி, உதவி இயக்குநர் (நில அளவைத்துறை) சுப்ரமணியம், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மீனாட்சி, தாசில்தார்கள் சிவகாமி (தேர்தல்), பாலசுப்ரமணியம் (ஈரோடு) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேர்தல் ஆணையம் இங்கே முழுக்க முழுக்க தி.மு.க.வின் தேர்தல் பிரிவாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் சார்பாக 2 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எங்கே இருக்கின்றனர் என தெரியவில்லை.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு தேர்தலில் மிகப்பெரும் ஜனநாயக படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. வாக்காளர் பட்டியலில் 40 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படாமல் உள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், மாநில தேர்தல் ஆணையத்திற்கும் ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.
தேர்தல் ஆணையம் இங்கே முழுக்க முழுக்க தி.மு.க.வின் தேர்தல் பிரிவாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் சார்பாக 2 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எங்கே இருக்கின்றனர் என தெரியவில்லை.
தொகுதி முழுவதும் தி.மு.க.வினர் கட்டுப்பாட்டில் தேர்தல் அதிகாரிகளும், காவல் துறையினரும் செயல்படுகின்றனர். அனைத்து கட்சிக்கும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்கும் உரிமை உண்டு. அந்த ஜனநாயக உரிமை இந்த தொகுதியில் பறிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சி வேட்பாளர் மட்டும் சுதந்திரமாக வாக்கு கேட்க அனுமதிக்கப்படுகிறார். எதிர்க்கட்சியான எங்களை வாக்காளர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது.
தி.மு.க. சார்பாக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மிகப்பெரிய தேர்தல் முறைகேடுகளை செய்து வருகிறார். வாக்காளர்களை ஒவ்வொரு பூத்துக்கு அழைத்து சென்று 3 வேலை உணவு கொடுத்து ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் கொடுத்து இரவில் திருப்பி அனுப்பப்படுகின்றார்கள்.
இதன் மூலம் எங்களுக்கு வாக்காளர்களை சந்திக்கும் வாக்கு கேட்கும் உரிமை மறுக்கப்படுகிறது. தி.மு.க.வினர், காவல் துறையினர் சேர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க. வாகனங்களை மறிக்கின்றனர். சோதனை என்ற பெயரில் காவல்துறை மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
அந்த கூட்டத்தை கூட்ட விடாமல் தடுக்க காவல்துறை அத்துமீறி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தேர்தல் ஆணையத்திற்கு முறையிட்டும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையத்தை கண்டித்து வீதியில் இறங்கி போராட்டம் நடத்தப்படும்.
எனவே மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநில தேர்தல் ஆணையமும் உடனடியாக இதில் தலையிட்டு ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கும் தி.மு.க.வினர் அழைத்து சென்று அடைத்து வைத்துள்ள வாக்காளர்களை விடுவிக்க வேண்டும். அனைவருக்கும் வாக்கு சேகரிக்கும் உரிமையை செய்து தர வேண்டும். இல்லையெனில் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைமை வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- அவர்களிடம் இருந்து 35 மதுபான பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், அறச்சலூர் போலீசார் தங்கள் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர்.
அப்போது அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ரமேஷ் (24), ராமச்சந்திரன் (60), சடையப்பன் (61) ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 35 மதுபான பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்களை சுழற்சி முறையில் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.
- 1408 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் இடைத்தேர்தலை யொட்டி கிழக்கு தொகுதி க்குட்பட்ட 238 வாக்கு சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்களை சுழற்சி முறையில் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.
இதை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டரு மான கிருஷ்ணனுண்ணி அனைத்து அங்கீகரி க்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
அப்போது மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசியதாவது:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடி கள் உள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக 1408 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் வாக்குச் சாவடி களில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்து அங்கீகரிக்க ப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இணைய தளத்தின் மூலம் வாக்குச் சாவடிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்காக 467 கட்டுப்பாட்டு எந்திரங்களில் 286 கட்டுப்பாட்டு எந்தி ரங்களும்,
474 வாக்குப்பதிவு எந்திரங்களில் 286 வாக்குப்பதிவு எந்திர ங்களும், 467 வாக்காளர்கள் தங்கள் அளித்தவாக்கினை சரிபார்க்கும் 310 எந்திரங்கள் என மொத்தம் 882 வாக்குப்பதிவு எந்திரங்களும் 30 சதவீதம் கூடுதல் ஒதுக்கீடாக வும் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு மாநக ராட்சியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 77 பேர் கொண்ட இறு திவேட்பாளர் பட்டியல் வெளியிட ப்பட்டதால் கூடுதலாக வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒவ்வொரு வாக்கு ச்சாவடியிலும் தேவைப்படுகின்றன.
எனவே கூடுதலாக 1100 வாக்குபதிவு எந்திர ங்கள் ஒதுக்கப்பட்டு கூடுதல் எந்திரங்களை முதல்நிலை சரிபார்க்கும் பணி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
தொடர்ந்து கூடுதல் வாக்குபதிவு எந்திரங்கள் கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வருவாய் ஆய்வாளர் அன்பரசனை லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
- இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
பெருந்துறையை சேர்ந்தவர் ரவி. இவர் தனது தாயாருக்கு வாரிசு சான்றி தழ் பெற பெருந்துறை வருவாய் அய்வாளர் அன்பரசனை அனுகினார்.
அப்போது வாரிசு சான்றிதழ் வேண்டும் என்றால் ரூ.35 ஆயிரம் வேண்டும் என கூறினார். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என கூறி ரவி சென்று விட்டார்.
சில நாட்களுக்கு பிறகு அன்ப ரசன், ரவியிடம் ரூ.25 ஆயிரம் தாருங்கள் வாரிசு சான்றிதழ் தருகிறேன் என கூறினார். அதற்கு ரவி சம்மதம் தெரிவிக்காததால் முடிவில் ரூ.8 ஆயிரம் தாருங்கள் வாரிசு சான்றிதழ் தருகிறேன் என கூறினார்.
ஆனால் லஞ்சம் தர விரும்பாத ரவி இது குறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கூறினார். இதையடுத்து போலீசார் ரசாயனம் தடவிய ரூ.8 ஆயி ரத்தை அவரிடம் கொடுத்து அன்பரசனிடம் கொடுக்க சொன்னார்கள்.
அதன்படி பெருந்துறை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு சென்ற ரவி தான் கொண்டு வந்த பணத்தை அன்பரசனிடம் கொடுக்க சென்றார்.
ஆனால் அன்பரசன் பண த்தை வாங்காமல் அதை அலுவலக உதவியாளர் அலெக்சாண்டரிடம் கொடுக்க சொன்னார். இதையடுத்து ரவி ரூ.8 ஆயிரத்தை அலெக்சா ண்டரிடம் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச பணத்துடன் அலெக்சா ண்டரை கையும், களவுமாக பிடித்தனர். பிடிபட்ட அலெக்சாண்டர் இந்த பணத்தை வருவாய் ஆய்வாளர் அன்பரசன் சொல்லி தான் வாங்கினேன் என ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார்.
அதன்பேரில் வருவாய் ஆய்வாளர் அன்பரசனை லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து அன்பரசனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் போலீசார் சிறையில் அடைத்தனர்.
- பக்தர்கள் முன்னிலையில் பூச்சாட்டு விழா நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
பவானி:
பவானி செல்லாண்டி யம்மன், மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதுபோல் இந்த ஆண்டு மாசி திருவிழா செல்லியாண்டி அம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில்களில் உள்ள மூலவருக்கு பால், தயிர், சந்தனம் இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் பூச்சாட்டு விழா நடைபெற்றது.
இதனையடுத்து வருகின்ற 21-ந் தேதி கம்பம் நடப்பட்டு பின்னர் மார்ச் மாதம் 1-ந் தேதி மாசி திருவிழா, பொங்கல் விழா நடைபெற உள்ளது.
இதில் பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 98.08 அடியாக உள்ளது.
- அணையில் இருந்து 2,650 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.
பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2.47 லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கீழ்பவானி வாய்க்காலுக்கு 2-ம் சுற்று தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 98.08 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 582 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கீழ்பவானி வாய்க்காலுக்கு நேற்று 500 கன அடி தண்ணீர் திறந்து விட்ட நிலையில் இன்று 1,500 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது.
இதுபோல் தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு ஆயிரம் கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 2,650 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- ஜி.எச்.ரவுண்டானா அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது.
தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் முழுவதும் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி கடந்த மாதம் 20-ந் தேதி முதல் நேற்று வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.44 லட்சத்து 23 ஆயிரத்து 370 பறிமுதல் செய்யப்பட்டு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே பறக்கும் படை அலுவலர் மெய்யப்பன் தலைமையில் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
அவரை நிறுத்தி சோதனை செய்தபோது மோட்டார் சைக்கிளில் ரூ.3 லட்சத்து 74 ஆயிரத்து 421 இருந்தது தெரியவந்தது. இது குறித்து அந்த நபரிடம் விசாரித்தபோது அவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் படைவீடு கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (25) என்பதும், தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்ததும் தெரிய வந்தது.
அவரிடம் பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர்.
இதேபோல் இன்று காலை ஜி.எச்.ரவுண்டானா அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக லாரி வந்து வந்தது. லாரியை சோதனை செய்தபோது ரூ.63,500 பணம் இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து விசாரித்தபோது அவர் பெயர் செந்தில் (35) என்பதும், கரூரில் இருந்து ஈரோட்டிற்கு மணல் வாங்க வந்ததாகவும் கூறினார்.
ஆனால் அவரிடம் பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர்.
ஈரோடு:
கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை (16-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதனால் கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்கா நல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல்,
கிருஷ்ணாபுரம், தர்மாபுரி, கவுந்தப்பாடி புதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாபாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம்,
குஞ்சரமடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடிபுதூர், மாணிக்க வலசு, அய்யன்வலசு, மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, பி.மேட்டுப்பாளையம், செந்தாம்பாளையம்,
செட்டிபாளையம், ஆவரங்காட்டு வலசு, ஆலந்தூர், கவுண்டன்பாளையம், செரயாம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
- 4 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் ஈரோடுக்கு வருகை தந்துள்ளனர்.
- தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், போலீசாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இவற்றில் 32 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 4 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் ஈரோடுக்கு வருகை தந்துள்ளனர். ஒவ்வொரு கம்பெனிலும் 80 பேர் உள்ளனர். இதை தவிர தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் 160 பேர் ஏற்கனவே வந்து விட்டனர்.
துணை ராணுவத்தினர் மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தினர். மேலும் ஈரோட்டில் 27 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசாருடன் துணை ராணுவத்தினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் போலீசாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக போலீசார் கிழக்கு தொகுதியை தவிர பிற தொகுதியை சேர்ந்த 50 வயதுக்கு உட்பட்ட முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் போலீசார் என 100 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர ஊர்க்காவல் படையினர் 150 பேர், என்.எஸ்.எஸ். மாணவர் களுக்கும் பணியில் ஈடுபட அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அருணாதேவி பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்.
- காதலர் தினமான நேற்று பெரியார் உருவப்படம் முன்பு மாலை மாற்றி சுய மரியாதை திருமணம் செய்து கொண்டனர்.
கோபி:
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருணாதேவி (24). இவர் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர். இதனால் தன்னுடைய பெயரை அருண்பாஷ் என மாற்றிக்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அருணாதேவி (வயது 24). பி.காம். பட்டதாரி. இவர் காஞ்சிபுரத்தில் இருந்து விருதுநகர் மாவட்டத்துக்கு சென்றபோது அருண்பாசுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து 2 பேரும் கடந்த 6 மாதமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்களுடைய காதல் 2 பேரின் வீட்டுக்கும் தெரியவந்தது. ஆனால் இவர்களுடைய காதலை 2 பேரின் பெற்றோர்களும் ஏற்க மறுத்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2 மாதங்களாக பல்வேறு இடங்களிலும் சுற்றி வந்தனர்.
இந்த நிலையில் 2 பேரும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள நண்பர் ஒருவர் மூலமாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மனிதம் சட்ட உதவி மையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
பின்னர் அவர்கள் காதலர் தினமான நேற்று பெரியார் உருவப்படம் முன்பு திராவிடர் கழக மாவட்ட தலைவர் சிவலிங்கம், மாவட்ட செயலாளர் வக்கீல் சென்னியப்பன் ஆகியோரது முன்னிலையில் மாலை மாற்றி சுய மரியாதை திருமணம் செய்து கொண்டனர்.






