search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க.வினர் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள்- ஜி.கே.வாசன் பேச்சு
    X

    தி.மு.க.வினர் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள்- ஜி.கே.வாசன் பேச்சு

    • பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை, நீட் தேர்வு ரத்து, கியாஸ் மானியம் போன்ற வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை.
    • எடப்பாடி ஆட்சிக் காலத்தில் 13 மருத்துவக்கல்லூரிகள் வந்தன.

    ஈரோடு:

    ஈரோடு நேரு வீதியில் அ.தி.முக. வேட்பாளரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு ஆளும் கட்சியினருக்கு அதிர்ச்சி வைத்தியமாக இருக்க வேண்டும். தி.மு.க. என்றாலே ஊழல், கட்டப்பஞ்சாயத்து, போதை பொருள் நடமாட்டம், சட்ட ஒழுங்கு சீரழிவு இப்படி சொல்லி கொண்டே போகலாம். இதுக்கு முடிவு கட்ட ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நல்ல வாய்ப்பாக இருக்கும். தி.மு.க.வினர் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றினார்கள்.

    பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை, நீட் தேர்வு ரத்து, கியாஸ் மானியம் போன்ற வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை. எடப்பாடி ஆட்சிக் காலத்தில் 13 மருத்துவக்கல்லூரிகள் வந்தன. அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு போன்றவற்றை கொண்டு வந்தார். கடந்த முறை த.மா.கா போட்டியிட்டது. இந்த முறை அ.தி.மு.க. போட்டியிடுகிறது. காரணம் பொதுமக்கள் விடிவு காலம் பிறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் அ.திமு.க. போட்டியிடுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×