குடிபோதையில் வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து பலி

குடிபோதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி விட்டார்.சென்னிமலை தீயணைப்பு துறையினர் உடனடியாக அங்கு சென்று உடலை தேடி மீட்டனர்.
குடிபோதையில் வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து பலி
Published on

சென்னிமலை:

சென்னிமலை அருகே மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (26). இவர் ஆட்டோ ஆக்டிங் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 5 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து ஆகியுள்ளது.

தற்போது வெங்கடேஷ் தாயாருடன் தனியாக வசித்து வருகிறார்.

குடிப்பழ க்கத்துக்கு அடிமையான அவர் சம்பவத்தன்று குடிபோதையில் மேலப்பாளையம் பகுதியில் ஊருக்கு பொதுவான கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி விட்டார்.

இந்த கிணறு சுமார் 100 அடி ஆழம் உடையது. அதில் சுமார் 60 அடி தண்ணீரும் உள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சென்னிமலை தீயணைப்பு துறையினர் உடனடியாக அங்கு சென்று உடலை தேடி மீட்டனர்.

இச்சம்பவம் குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com