என் மலர்
கடலூர்
நெய்வேலி என்.எல்.சி.இந்தியா நிறுவனத்தில் 200 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட நியூ தெர்மல் பவர் ஸ்டேசன் செயல்பட்டு வருகிறது.
இதில் ஒப்பந்த தொழிலாளர்களாகவும், ஆபரேட்டர்களாகவும் தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் 150 பேர் இன்று காலை நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் ஒப்பந்த தொழிலாளி பாலமுருகன் தலைமையில் போலீசிடம் புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது,
நியு தெர்மல் பவர் ஸ்டேசன் பிரிவில் வேலை பார்க்கும் தனியார் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக வருங்கால வைப்பு நிதி தொகை முழுமையாக செலுத்தப்படாமல் உள்ளது. அப்படி செலுத்தியிருக்கும் சிலருக்கு பணம் வரவு வைக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. இறுதி செட்டில்மெண்ட் வழங்கவில்லை. மேலும் நிலுவை தொகை கொடுக்கவில்லை. எனவே எங்களின் கோரிக்கைகளை என்.எல்.சி. நிர்வாக அதிகாரிகளிடம் நீங்கள் (போலீசார்)முறையாக பேசி தீர்வு காண வேண்டும்.
கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளது. வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கன்னியாகுமரி கடல் பகுதியில் மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாகும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து கடலூரிலும் கடல் சீற்றமாகவே காணப்பட்டது. கடலில் ராட்சத அலைகள் பயங்கர சத்தத்துடன் எழுந்தன. கடல் சீற்றம் காரணமாக தாழங்குடா, துறைமுகம் பகுதி மீனவர்கள் இன்றும் 3-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. #tamilnews
கடலூர் கலெக்டர் தண்டபாணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வருகிற 18-ந் தேதி கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னி ரெண்டாம் வகுப்பு, கலை, அறிவியல், வணிகப் பட்டதாரிகள் மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
விருப்பமுள்ள இம்மாவட்டத்தை சார்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விரும்பும் இளைஞர்கள், கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது தொலைபேசி (04142290039) வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். #tamilnews
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர இந்த ஏரியில் இருந்து தினமும் சென்னை மக்களின் தேவைக்காக குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வரத்தொடங்கியது. கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவமழையாலும் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதன் காரணமாக ஏரியின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து, முழுகொள்ளளவை எட்டியது. உபரிநீர் வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டு, வீணாக கடலில் கலந்தது.
இந்த நிலையில் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 மாதமாக மழை இல்லை. ஏரிக்கு நீர் வரத்தும் இல்லை. வெயில் சுட்டெரிப்பதால் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்றைய நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 39.30 அடியாகும். சென்னைக்கு வினாடிக்கு 71 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
ஏரியில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வீராணம் ஏரி பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது வீராணம் ஏரியின் நீர்மட்டம் 39.30 அடியாக உள்ளது. ஏரியில் நீர்மட்டம் 39 அடி வரும் வரையில் சென்னைக்கு குடிநீர் அனுப்பலாம்.
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 71 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கிறோம். இதேபோன்று தொடர்ந்து 2 நாட்கள் மட்டுமே சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியும். நீர்மட்டம் 39 அடியாக குறைந்ததும், சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்படும் என்றார். #tamilnews
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அடுத்த பாப்பகுடி கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 35) விவசாயி. இவர் இன்று காலை 7 மணிக்கு பாப்பக்குடியில் இருந்து பண்ருட்டிக்கு வந்தார்.
பண்ருட்டி- கும்பகோணம் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் பின்புறம் இருக்கும் 150 அடி உயரமுள்ள தனியார் செல்போன் டவரை நோக்கி சென்றார். அவரது கையில் மண்எண்ணை பாட்டில் வைத்திருந்தார். திடீரென செல்போன் டவர் மீது ஏறினார்.
செல்போன் டவரில் 75 அடி உயரத்துக்கு சென்ற அவர் அங்கு நின்று கொண்டு நான் சாகப் போகிறேன் என்று தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து பண்ருட்டி போலீசுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ராஜ், சப்- இன்ஸ்பெக்டர் விஷ்ணுப்பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் ஒலிப்பெருக்கி மூலம் குமாரை கீழே இறங்கி வரும்படி வற்புறுத்தினர். உங்களது பிரச்சினைகள் குறித்து பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று சமாதானம் கூறி அழைத்தனர்.
ஆனால், அவர் அதை பொருட்படுத்தவில்லை. செல்போன் டவரில் நின்று கொண்டு தொடர்ந்து தற்கொலை மிரட்டல் விடுத்த வண்ணமே இருந்தார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர். ஏராளமான பொதுமக்களும் சம்பவ இடத்தில் திரண்டனர். #tamilnews
பண்ருட்டி:
பண்ருட்டி லட்சுபதி நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி செஷிட்டா(வயது 60). இவர் இன்று காலை வீட்டின் முன்பு தனியாக நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ‘டிப்டாப்’ உடையணிந்த வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். அங்கு நின்று கொண்டிருந்த செஷிட்டாவிடம் முகவரி கேட்பதுபோல் பேசினார்.
திடீரென்று அந்த வாலிபர் செஷிட்டா கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார். உடனே செஷிட்டா திருடன் திருடன் என்று கூச்சல் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் நகை பறித்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் மாயாமாகி விட்டார்.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து நகை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகின்றனர். #tamilnews
ஸ்ரீமுஷ்ணம்:
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நாட்டார் மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கலைஞர் (வயது 40). இளநீர் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கோமதி (35).
வேலை முடிந்த பின்னர் கலைஞர் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். இதேப்போல் நேற்று இரவும் கலைஞர் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கோமதி கண்டித்தார்.
பின்னர் அவர் தனது கணவரிடம் கோபித்து கொண்டு அதேப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதில் மனமுடைந்த கலைஞர் திடீரென விஷம் குடித்தார்.
மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காட்டு மன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சிதம் பரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே கலைஞர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து காட்டு மன்னார்கோவில் போலீ சில் புகார் செய்யப்பட் டது. இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
கடலூர், மார்ச்.7-
பெரியார் சிலை இடிக்கப் படும் என கருத்து தெரிவித்த பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜாவை கண்டித்து தமிழ கம் முழுவதும் பல்வேறு கட்சி சார்பில் போராட் டம் நடைபெற்று வருகிறது.
விழுப்புரத்தில் காமராஜர் வீதியில் உள்ள பெரியார் சிலை முன்பு முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் தி.மு.க.வினர் திரண்டனர். எச்.ராஜாவுக்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் எச்.ராஜாவின் உருவபொம்மையை தீ வைத்து எரித்து, ஆர்ப்பாட் டம் செய்தனர். இதில் தி.மு.க.வினர் ஏராள மானோர் கலந்து கொண் டனர்.
கடலூர் மாவட்டம் நெல் லிக்குப்பத்தில் விடு தலை சிறுத்தை கட்சி யினர் அங்குள்ள அண்ணா சிலை அருகே இன்று காலை திரண் டனர். பின்னர் அவர் கள் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் தலை மையில் எச்.ராஜாவை கண் டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப் பினர்.
பின்னர் அவர்கள் எச்.ராஜாவின் உருவபொம் மையை தீவைத்து எரித்த னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று உருவபொம்மை யை கைப்பற்றி தீயை அணைத்தனர். அதன் பின்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். #tamilnews
சிதம்பரம்:
தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவு செய்திருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காந்தி சிலை அருகே திராவிடர் கழகத்தினர் இன்று காலை திரண்டனர். பின்பு அவர்கள் தலைமை கழக பேச்சாளர் யாழ்திலீபன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் விடுதலை சிறுத்தை கட்சியினர், மனித நேய மக்கள் கட்சியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எச்.ராஜாவை கண்டித்தும், அவரை கைது செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் பால.அறவாழி, சிதம்பரம் நாடாளுமன்ற செயலாளர் செல்லப்பன், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் முகமது ரபீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் மூசா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் தி.மு.க., திராவிடர் கழகம், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை கட்சி, புரட்சிகர மார்க்சிஸ்ட் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். தி.மு.க.சார்பில் குழந்தை தமிழரசன், வக்கீல் அருள்குமார், நகர துணை செயலாளர் ராமு, விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அய்யாயிரம், திராவிட கழக மாநில இளைஞரணி இளந்திரையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எச்.ராஜாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
வேலூரில் பெரியார் சிலை உடைத்ததை கண்டித்து வடலூரில் திராவிட கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்பு அவர் கள் அங்குள்ள பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடு தலை சிறுத்தை கட்சியினரும் கலந்து கொண்டனர். #tamilnews
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த திருவதிகை தெற்கு பட்டரை பெரியார் நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 35). இவர் பண்ருட்டியில் பெயிண்ட்கடை வைத்துள்ளார்.
வடலூரில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாலமுருகன் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் நேற்று காலை புறப்பட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் பாலமுருகன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
பாலமுருகன் இன்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிகிடந்தன. மேலும் பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போய் இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
இதுகுறித்து பாலமுருகன் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் லூயிஸ்ராஜ், மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளைநடந்த வீட்டை மோப்பம் பிடித்துவிட்டு சிறிதுதூரம் ஓடி சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுனர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீசார் வழக்குபதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
இதேபகுதியில் உள்ள சரநாராயணபெருமாள் கோவில் தெருவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாலாஜி என்பவரது மளிகைகடையின் பூட்டை உடைத்து அங்கு இருந்த ரூ.40 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். தொடர்ந்து இந்த பகுதியில் கொள்ளை சம்பவம் நடந்து வருவதால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். #Tamilnews






