என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்.எல்.சி. நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்- தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் மனு
    X

    என்.எல்.சி. நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்- தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் மனு

    நிலுவை தொகை வழங்குவது குறித்து என்.எல்.சி. நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் மனு அளித்துள்ளனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி என்.எல்.சி.இந்தியா நிறுவனத்தில் 200 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட நியூ தெர்மல் பவர் ஸ்டேசன் செயல்பட்டு வருகிறது.

    இதில் ஒப்பந்த தொழிலாளர்களாகவும், ஆபரேட்டர்களாகவும் தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் 150 பேர் இன்று காலை நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் ஒப்பந்த தொழிலாளி பாலமுருகன் தலைமையில் போலீசிடம் புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது,

    நியு தெர்மல் பவர் ஸ்டேசன் பிரிவில் வேலை பார்க்கும் தனியார் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக வருங்கால வைப்பு நிதி தொகை முழுமையாக செலுத்தப்படாமல் உள்ளது. அப்படி செலுத்தியிருக்கும் சிலருக்கு பணம் வரவு வைக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. இறுதி செட்டில்மெண்ட் வழங்கவில்லை. மேலும் நிலுவை தொகை கொடுக்கவில்லை. எனவே எங்களின் கோரிக்கைகளை என்.எல்.சி. நிர்வாக அதிகாரிகளிடம் நீங்கள் (போலீசார்)முறையாக பேசி தீர்வு காண வேண்டும்.

    கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×