என் மலர்tooltip icon

    கடலூர்

    • கடலூர் மாவட்டத்தில் 3742 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது.
    • பொதுமக்கள் ஏதேனும் அடையாள அட்டை காண்பித்து தங்கள் வீட்டின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் பொதுமக்களை பாதிக்காமல் தடுக்கும் பொருட்டு சிறப்பு கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை (7 ந்தேதி) 3742 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இரண்டாவது தவணை செலுத்தியவர்கள் 9 மாத இடைவெளியாக இருந்தது குறைக்கப்பட்டு தற்சமயம் 6 மாத இடைவெளியில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு வழிவகை செய்துள்ளது. மேலும் 15.07.2022 முதல் 30.09.2022 வரை 75 நாட்களுக்கு மட்டுமே 18 வயது முதல் 59 வயது வரை உள்ள அனைவருக்கும் விலையில்லா கூடுதல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. 

    கடலூர் மாவட்ட த்தில் தற்போது 12,48,000 பயனாளிகள் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்திட வேண்டியுள்ளனர். அவர்கள் இந்த இலவச தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி யினைசெலுத்திக் கொள்ளுமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் ஏதேனும் அடையாள அட்டை காண்பித்து தங்கள் வீட்டின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். கொரோனா தொற்று தற்போது மாவட்ட த்தில் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொ ள்வதன் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளானாலும் அது தீவிரமாகாது என்பதால், கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து க்கொள்ள இந்த சிறப்பு தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது. 

    • வேப்பூர் அருகே கோவிலில் திருடிய கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கோவிலில் இருந்த 65 கிலோ எடையுள்ள 7 மணிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுருப்பது தெரிய வந்தது.

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மாளிகைமேடு அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் பூசாரி சொக்கலிங்கம் கடந்த 1 ஆம் தேதி கோவிலை பூட்டி விட்டு 2- ந் தேதி கோவிலுக்கு சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த 65 கிலோ எடையுள்ள 7 மணிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுருப்பது தெரிய வந்தது. இது குறித்து கோவில் தர்மகத்தா கிருஷ்ணசாமி கொடுத்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கோவில் மணிகள் திருடு போனது சம்பந்தமாக குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டதின்பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா மேற்பார்வையில் வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலி ங்கம் , காவலர்கள் கலை செல்வன் , நாராயணசாமி ஆகிய தனிப்படையினர் விசாரணை மேற்கொ ண்டனர் .

    கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்ததில் கண்காணிப்பு கேமிராவில் குற்றவாளிகளின் உருவம் பதிவாகி இருந்தது . பதிவாகி இருந்த புகைப்படத்தை வைத்து பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டனர் . இத்திருட்டு வழக்கில் 4 குற்றவாளிகள் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது . குற்ற வாளிகளை தேடி தனிப்படை போலீசார் தொளார் கிராமம் பஸ் ஸ்டாப்பில் கண்கா ணித்தபோது அங்கு இருந்த 2 நபர்கள் தப்பி ஓட முயன்றவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் வெங்கடேசன் , சங்கர் என கூறினர் . பின்னர் வெங்கடேசன் என்பவர் மாளிகைமேடு கோவிலுக்கு சொந்தமான 7 மணிகளை வடிவேல் , சங்கர் , கார்த்தி இவர்களுடன் சேர்ந்து கோவிலில் இருந்த மணிகளை உடைத்து திருடியது தெரிய வந்தது.

    மேலும் நாங்கள் கூலி வேலை செய்து வந்த நிலையில் போதிய வருமானம் இல்லாததால் திருடலாம் என ஒன்று கூடி மாளிகைமேடு அய்யனார் கோவிலில் இருந்த கோவில் மணிகளை நாங்கள் 4 பேரும் சேர்ந்து உடைத்து எடுத்து கொண்டு பெரியாகுறிச்சி சென்றோம். மேலும் திருடிய மணிகளை வடிவேலும் , கார்த்தியும் விற்று பணம் கொண்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.எனதெரிய வந்தது. இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா முதுகுளம் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 42 ), சங்கர் வயது 47 ஆகிய இருவரை கைது செய்தனர் . மேலும் தலைமறைவான வடிவேல் மற்றும் கார்த்தி யைவலைவீசி தேடி வருகின்றனர். சிறப்பாக பணியாற்றிய சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் தலைமையிலான தனிப்ப டையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் பாராட்டினார்.

    • சிதம்பரத்தில் பரபரப்பு கோவிலுக்கு சென்ற விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • மயிலாடுதுறையில் உள்ள இவரது உறவினர் ஒருவர் வீட்டில் தங்கினார்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே வல்லம்படுகை பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது 62) விவசாயி இவர் நேற்று முன்தினம் மயிலாடுதுறையில் உள்ள திருநாகேஸ்வரர் கோவிலுக்கு தனது குடும்பத்துடன் பரிகாரம் செய்து சாமி தரிசனம் செய்யச் சென்றார். அதன் பின்னர் மயிலாடுதுறையில் உள்ள இவரது உறவினர் ஒருவர் வீட்டில் தங்கினார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் அவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுளைந்து கொள்ளையடித்து சென்றனர். இதைப் பார்த்த அக்கம்பக்கம் உள்ளவர்கள் வீட்டின்பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை வீட்டின் உரிமையாளர் அன்பழகனுக்கு தெரிவித்தார். உடனே தகவல் அறிந்த அன்பழகன் வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்து 6.30 பவுன் மற்றும் ரொக்க பணம் ரூ.80,000 கொள்ளை போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த அண்ணாமலை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து இதற்கு காரணமான மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்

    • பண்ருட்டியில் சாலை நடுவே கரும்பு டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • டிராக்டர் கவிந்ததால்அந்த வழியாக வந்தவர்கள் பதறிஓடினர்.அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.

    கள்ளக்குறிச்சி மாவ ட்டம் ரிஷிவந்தியத்தில் இருந்து கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று நேற்றுவந்தது .பார்த்திபன் (55) என்பவ ர்டிராக்டரை ஓட்டி வந்தார். இந்த டிராக்டர் நேற்று மாலை பண்ருட்டி வந்தது பண்ருட்டி லிங்க் ரோடு வழியாக வந்த டிராக்டர் இந்திரா காந்தி சாலையில் திரும்பி வந்து கொண்டி ருந்தது அப்போது பண்ருட்டி பஸ் நிலையம் அருகில் வந்த போது திடீரென்று டிராக்டர் டிப்பர் நடு ரோட்டில் கவிழ்ந்தது. டிராக்டர் கவிந்ததால்அந்த வழியாக வந்தவர்கள் பதறிஓடினர்.அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து, பாதித்தது. இது பற்றி தகவல் பண்ருட்டி போலீசார் சம்பவத்திற்குவிரைந்து வந்து சாலை நடுவே கவிழ்ந்து கிடந்த டிராக்டர் டிப்பரை அப்புறப்ப டுத்தினார்.சிறிது நேரத்தில் போக்குவரத்து சரி செய்ய ப்பட்டது இதனால்அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவில்-வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
    • அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்

    கடலூர்:

    கர்நாடக மாநிலத்தில் பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் மேட்டூர்அணையில் இருந்து உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு ,திருச்சி வழியாக கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளதால் கொள்ளிடத்தில் 2 கரைகளையும் தொட்டு வெள்ளம் கரை புரண்டு ஒடுகிறது. இந்த வெள்ளம் எய்யலூரில் புகுந்து உள்ளது. இதனால் கரையோரத்தில் உள்ள சொர்ணபுரீஸ்வரர் கோவிலை மூழ்கடிக்கும் வண்ணம் தண்ணீர் செல்கிறது. அந்த பகுதி யில் வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்து உள்ள தால் அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்து க்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    • திட்டக்குடியில் கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • விறகு கட்டைகளுக்கு அடியில் இருந்த கஞ்சா 10கிராம்,எடையுள்ள 25 பாக்கெட்டை போலீசார் கைப்பற்றினர்.

    கடலூர்:

    திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட வதிஷ்ட புரத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் திட்டக்குடி சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் இன்று அதிகாலை வதிஷ்டபுரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த அரசன் மகன் ஆங்கி என்ற ராதாகிருஷ்ணன் (24)என்பவர் பிடித்து அவரது வீட்டில் சோதனை செய்த பொழுது வீட்டிற்கு பின்புறம் அடிக்கி வைக்கப்பட்டிருந்த விறகு கட்டைகளுக்கு அடியில் இருந்த கஞ்சா 10கிராம்,எடையுள்ள 25 பாக்கெட்டை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் யார் யார் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

    • கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 10- ந்தேதி தொடங்கப்பட உள்ளது.
    • சரியாக காலை 9.30 மணிக்கு நேரம் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

     கடலூர்:

    கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில், சுழற்சி ஒன்று மற்றும் இரண்டில் வழங்கப்படுகின்ற இளநிலை பட்டப் படிப்புகளுக்கான ஒற்றைச் சாளர முறையிலான 2022-23 கல்வியாண்டிற்கான முதல் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகின்ற 10- ந்தேதி முதல் நடைபெற உள்ளது. இளநிலை படிப்புகளில் முதலாமாண்டில் 1329 மாணாக்கர்கள் சேர்க்கப்படவுள்ளனர். இதில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு 14605 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் சேர்க்கை கலந்தாய்வு குறித்த விவரம் மின்னஞ்சல் வாயிலாவும், மாணாக்கர்களின் அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்பட்டுள்ளது. 10 -ந்தேதி நடைபெறும் முதற்கட்ட கலந்தாய்வில் மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் மற்றும் அந்தமான் நிகோபரைச் சேர்ந்த தமிழர்கள் போன்ற சிறப்பு பிரிவினருக்கான சேர்க்கை நடைபெற உள்ளது. அந்த வகையில் , 11 -ந்தேதி 400 லிருந்து 340 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கும், 12- ந்தேதி 339 லிருந்து 320 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கும், 13ந்தேதி 319 லிருந்து 300 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கும், 16 ந்தேதி 299 லிருந்து 290 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கும், 17- ந்தேதி 289 லிருந்து 280 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கும், 18- ந்தேதி 279 லிருந்து 271 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும். 

    அதன் பின்னர், 20- ந்தேதி பி.ஏ. தமிழ் மற்றும் பி.ஏ. ஆங்கிலம் பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் மாணாக்கர்கள் அவரவருக்கு உரிய கலந்தாய்வு நாளில் சரியாக காலை 9.30 மணிக்கு நேரம் தவறாமல் பங்கேற்க வேண்டும். கலந்தாய்வில் பங்கு பெறுவோர் தாங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பத்தின் நகல், 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு ஆகியவற்றின் அசல் மதிப்பெண் பட்டியல் மற்றும் 2 நகல்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ் அசல் மற்றும் 2 நகல்கள், சாதிச் சான்றிதழ் அசல் மற்றும் 2 நகல்கள், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்குப் புத்தக முதல் பக்க நகல், ஆதார் அடையாள அட்டை 2 நகல்கள் மற்றும் உரிய சேர்க்கைக் கட்டணம் ஆகியவற்றை தவறாமல் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.சிறப்புப்பிரிவில் சேர்க்கை கோரும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் (மாவட்ட / மண்டல / மாநில அளவில் பங்குபெற்றோர்) அதற்குரிய சான்றிதழ்களின் அசல் மற்றும் 2 நகல் கொண்டுவரவேண்டும். கணிதம், இயற்பியல், வேதியியல் (பொது), கணினி, கணினிப் பயன்பாட்டியல் மற்றும் புள்ளியியல் சேரவிரும்பும் மாணவர்கள் பிளஸ் 2-வில் கட்டாயம் கணிதம் பயின்றிருக்கவேண்டும். மேலும், தொழில் முறைக் கல்வி பயின்றவர்கள் வணிகவியல் மற்றும் ஏனைய கலைப் பாடப் பிரிவுகளில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் சேர இயலும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • கடலூரில் ரேசன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • இதற்கு மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார்.

    கடலூர்:

    தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர் சங்கம் சார்பில் சரியான எடையில் நூல் மாற்றி அரிசி மூட்டைகளை இறக்கப்பட வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் இயற்றி வரும் லாரிகளில் எடை தராசுடன் வரவேண்டும். ஊதியத்தில் பிடித்தம் செய்யும் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணியாளர் சிக்கன நாணய கடன் சங்க நிதியை அவரவர் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும். லாரிகளில் நகர்வு பணியாளர்கள் உடன் வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் கடற்கரை சாலையில் உள்ள கூட்டுறவு அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். நிர்வாகிகள் முத்து பாபு, நடராஜன், செல்லதுரை, பாஸ்கர், தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். இதில் நிர்வாகிகள் ஜெயச்சந்திர ராஜா, சரவணன், பிரகாஷ், சேகர், கணேசன், பழனிச்சாமி உட்பட கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.

    • மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கடலூரில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
    • போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    மத்திய அரசின் விலைவாசி உயர்வைக் கண்டித்து கடலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் திலகர் தலைமையில், நிர்வாகிகள் ரமேஷ், ரவிக்குமார், சீத்தாராமன், ராமச்சந்திரன், மணி ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே திரண்டனர். பின்னர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் திடீரென்று மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பி கொண்டு கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • கடலூர் மாநகராட்சியில் பராமரிப்பு பணிகளுக்காக ரூ.1.35 கோடியில் எந்திரங்கள் அமைச்சர் எம்‌.ஆர். கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
    • 15 -வது நிதி குழு மானியம் திட்ட நிதி பொக்லைன் எந்திரம், தெரு மின்விளக்கு பொருத்தும் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் ரூ. 1 கோடி 35 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டன.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு பணிகளுக்கு 15 -வது நிதி குழு மானியம் திட்ட நிதி பொக்லைன் எந்திரம், தெரு மின்விளக்கு பொருத்தும் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் ரூ. 1 கோடி 35 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டன. இதன் தொடக்க விழா கடலூர் மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, ஆணையாளர் நாவேந்திரன், செயற்பொறியாளர் புண்ணியமூர்த்தி, நகர் நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கடலூர் அருகே மூதாட்டியை தாக்கி மானபங்கம்- 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    • அன்பழகியை அசிங்கமாக திட்டி கையை பிடித்து இழுத்து மானப்பங்கம் படுத்தியதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அருகே பூண்டியாங்குப்பம் சேர்ந்தவர் தனசிங். இவரது மனைவி அன்பழகி (வயது 62). சம்பவத்தன்று மூதாட்டி அன்பழகி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த விஜயகுமார் குடித்துவிட்டு திடீரென்று அன்பழகியை அசிங்கமாக திட்டி கையை பிடித்து இழுத்து மானப்பங்கம் படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் விஜயகுமார் மனைவி சித்ரா, மகள் அகல்யா ஆகியோர் அன்பழகியை கழியால் தாக்கியதாக தெரிகிறது. அதிர்ச்சி அடைந்த அன்பழகி சத்தம் போட்டதால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததால் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் விஜயகுமார், சித்ரா, அகல்யா ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • விருத்தாசலம் அருகே அரசு வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • அவரை மீட்ட பொதுமக்கள் அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே குப்பநத்தம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராமர். அவரது மகன் மணிகண்டன் (வயது 28). இவர் பி.பி.ஏ. முடித்துவிட்டு அரசு வேலைக்கு தயாராகி கொண்டிருந்தார். நீண்ட நாட்கள் படித்தும் அரசு வேலை கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் இருந்த அவர் அவரது ஊரில் இருந்த தோட்டத்தில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய அவரை மீட்ட பொதுமக்கள் அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×