search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theft in the temple"

    • நேற்று மாலை பூசாரி பூஜை முடித்து கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
    • பொதுமக்கள் அவர்களை துரத்தி பிடிக்க முயன்றபோது, அவர்கள் தப்பிச் சென்றனர்.

    கடலுார்: 

    கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த செம்பேரி பகுதியில் வீரனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று மாலை பூசாரி பூஜை முடித்து கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இதனையடுத்து இரவில் கோவில் வளாகத்தின் பின்புறம் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் கோவில் உண்டியல் உடைப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பொதுமக்கள் அவர்களை துரத்தி பிடிக்க முயன்றபோது, அவர்கள் தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கோவில் உண்டியலை உடைத்து திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் ஆய்வு
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியை அடுத்த தெக்குப்பட்டு கிராமத்தில் ஏரிக்க ரையோரம் அமைந்துள்ள பெருமாள் கோவில் மற்றும் ஓம் சக்தி கோவில் ஆகியவை அடுத்தடுத்து உள்ளன.

    இந்த கோவில்களில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் உண்டியல் உடைத்து பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை க்கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    காலை அவ்வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து போலீசார் மற்றும் கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அம்பலூர் போலீசார் விரைந்து சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சி களை ஆய்வு செய்தபோது நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் 2 கோவில்களின் பூட்டை உடைத்து கோவிலுக்குள் புகுந்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • 4 பவுன் நகையை எடுத்து சென்றனர்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் பூஜை செய்து வருவது வழக்கம்.

    கடந்த செவ்வாய் அன்று பூசாரி சிவகுமார் அம்மனுக்கு இரவு பூஜைகள் செய்துவிட்டு கோவிலின் கதவை மூடிவிட்டு சென்றுள்ளார்.

    இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அதிகாலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்த பூசாரி சிவகுமார் கோவிலுக்கு வெளியே உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவிலுக்குள் சென்று பார்த்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த 4 பவுன் தாலி செயினை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இந்த தகவலை ஊர் பொதுமக்களிடம் கூறியுள்ளார். பின்னர் நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில்

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வேப்பூர் அருகே கோவிலில் திருடிய கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கோவிலில் இருந்த 65 கிலோ எடையுள்ள 7 மணிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுருப்பது தெரிய வந்தது.

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மாளிகைமேடு அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் பூசாரி சொக்கலிங்கம் கடந்த 1 ஆம் தேதி கோவிலை பூட்டி விட்டு 2- ந் தேதி கோவிலுக்கு சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த 65 கிலோ எடையுள்ள 7 மணிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுருப்பது தெரிய வந்தது. இது குறித்து கோவில் தர்மகத்தா கிருஷ்ணசாமி கொடுத்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கோவில் மணிகள் திருடு போனது சம்பந்தமாக குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டதின்பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா மேற்பார்வையில் வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலி ங்கம் , காவலர்கள் கலை செல்வன் , நாராயணசாமி ஆகிய தனிப்படையினர் விசாரணை மேற்கொ ண்டனர் .

    கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்ததில் கண்காணிப்பு கேமிராவில் குற்றவாளிகளின் உருவம் பதிவாகி இருந்தது . பதிவாகி இருந்த புகைப்படத்தை வைத்து பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டனர் . இத்திருட்டு வழக்கில் 4 குற்றவாளிகள் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது . குற்ற வாளிகளை தேடி தனிப்படை போலீசார் தொளார் கிராமம் பஸ் ஸ்டாப்பில் கண்கா ணித்தபோது அங்கு இருந்த 2 நபர்கள் தப்பி ஓட முயன்றவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் வெங்கடேசன் , சங்கர் என கூறினர் . பின்னர் வெங்கடேசன் என்பவர் மாளிகைமேடு கோவிலுக்கு சொந்தமான 7 மணிகளை வடிவேல் , சங்கர் , கார்த்தி இவர்களுடன் சேர்ந்து கோவிலில் இருந்த மணிகளை உடைத்து திருடியது தெரிய வந்தது.

    மேலும் நாங்கள் கூலி வேலை செய்து வந்த நிலையில் போதிய வருமானம் இல்லாததால் திருடலாம் என ஒன்று கூடி மாளிகைமேடு அய்யனார் கோவிலில் இருந்த கோவில் மணிகளை நாங்கள் 4 பேரும் சேர்ந்து உடைத்து எடுத்து கொண்டு பெரியாகுறிச்சி சென்றோம். மேலும் திருடிய மணிகளை வடிவேலும் , கார்த்தியும் விற்று பணம் கொண்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.எனதெரிய வந்தது. இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா முதுகுளம் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 42 ), சங்கர் வயது 47 ஆகிய இருவரை கைது செய்தனர் . மேலும் தலைமறைவான வடிவேல் மற்றும் கார்த்தி யைவலைவீசி தேடி வருகின்றனர். சிறப்பாக பணியாற்றிய சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் தலைமையிலான தனிப்ப டையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் பாராட்டினார்.

    ×