search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேப்பூர் அருகே    கோவிலில் திருடிய கொள்ளையர்கள் 2 பேர் கைது
    X

    வேப்பூர் அருகே கோவிலில் திருடிய கொள்ளையர்கள் 2 பேர் கைது

    • வேப்பூர் அருகே கோவிலில் திருடிய கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கோவிலில் இருந்த 65 கிலோ எடையுள்ள 7 மணிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுருப்பது தெரிய வந்தது.

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மாளிகைமேடு அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் பூசாரி சொக்கலிங்கம் கடந்த 1 ஆம் தேதி கோவிலை பூட்டி விட்டு 2- ந் தேதி கோவிலுக்கு சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த 65 கிலோ எடையுள்ள 7 மணிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுருப்பது தெரிய வந்தது. இது குறித்து கோவில் தர்மகத்தா கிருஷ்ணசாமி கொடுத்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கோவில் மணிகள் திருடு போனது சம்பந்தமாக குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டதின்பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா மேற்பார்வையில் வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலி ங்கம் , காவலர்கள் கலை செல்வன் , நாராயணசாமி ஆகிய தனிப்படையினர் விசாரணை மேற்கொ ண்டனர் .

    கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்ததில் கண்காணிப்பு கேமிராவில் குற்றவாளிகளின் உருவம் பதிவாகி இருந்தது . பதிவாகி இருந்த புகைப்படத்தை வைத்து பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டனர் . இத்திருட்டு வழக்கில் 4 குற்றவாளிகள் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது . குற்ற வாளிகளை தேடி தனிப்படை போலீசார் தொளார் கிராமம் பஸ் ஸ்டாப்பில் கண்கா ணித்தபோது அங்கு இருந்த 2 நபர்கள் தப்பி ஓட முயன்றவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் வெங்கடேசன் , சங்கர் என கூறினர் . பின்னர் வெங்கடேசன் என்பவர் மாளிகைமேடு கோவிலுக்கு சொந்தமான 7 மணிகளை வடிவேல் , சங்கர் , கார்த்தி இவர்களுடன் சேர்ந்து கோவிலில் இருந்த மணிகளை உடைத்து திருடியது தெரிய வந்தது.

    மேலும் நாங்கள் கூலி வேலை செய்து வந்த நிலையில் போதிய வருமானம் இல்லாததால் திருடலாம் என ஒன்று கூடி மாளிகைமேடு அய்யனார் கோவிலில் இருந்த கோவில் மணிகளை நாங்கள் 4 பேரும் சேர்ந்து உடைத்து எடுத்து கொண்டு பெரியாகுறிச்சி சென்றோம். மேலும் திருடிய மணிகளை வடிவேலும் , கார்த்தியும் விற்று பணம் கொண்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.எனதெரிய வந்தது. இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா முதுகுளம் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 42 ), சங்கர் வயது 47 ஆகிய இருவரை கைது செய்தனர் . மேலும் தலைமறைவான வடிவேல் மற்றும் கார்த்தி யைவலைவீசி தேடி வருகின்றனர். சிறப்பாக பணியாற்றிய சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் தலைமையிலான தனிப்ப டையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் பாராட்டினார்.

    Next Story
    ×