கோவில் பூட்டை உடைத்து திருட்டு

4 பவுன் நகையை எடுத்து சென்றனர்போலீசார் விசாரணை
திருட்டு நடந்த கோவில்.
திருட்டு நடந்த கோவில்.
Published on

ஜோலார்பேட்டை:

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் பூஜை செய்து வருவது வழக்கம்.

கடந்த செவ்வாய் அன்று பூசாரி சிவகுமார் அம்மனுக்கு இரவு பூஜைகள் செய்துவிட்டு கோவிலின் கதவை மூடிவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அதிகாலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்த பூசாரி சிவகுமார் கோவிலுக்கு வெளியே உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவிலுக்குள் சென்று பார்த்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த 4 பவுன் தாலி செயினை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த தகவலை ஊர் பொதுமக்களிடம் கூறியுள்ளார். பின்னர் நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில்

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com