உண்டியலை உடைத்து திருட்டு

நேற்று மாலை பூசாரி பூஜை முடித்து கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பொதுமக்கள் அவர்களை துரத்தி பிடிக்க முயன்றபோது, அவர்கள் தப்பிச் சென்றனர்.
உண்டியலை உடைத்து திருட்டு
Published on

கடலுார்: 

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த செம்பேரி பகுதியில் வீரனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று மாலை பூசாரி பூஜை முடித்து கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இதனையடுத்து இரவில் கோவில் வளாகத்தின் பின்புறம் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் கோவில் உண்டியல் உடைப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பொதுமக்கள் அவர்களை துரத்தி பிடிக்க முயன்றபோது, அவர்கள் தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கோவில் உண்டியலை உடைத்து திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com